Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என்னுடைய பைபிள் கதை புத்தகம்—கேள்விகள்

என்னுடைய பைபிள் கதை புத்தகம்—கேள்விகள்

கதை 1

எல்லாவற்றையும் கடவுள் உண்டாக்கத் தொடங்குகிறார்

1.எல்லா நல்ல பொருட்களும் யார் தந்தவை, ஓர் உதாரணம் சொல்ல முடியுமா?

2. முதன்முதலாக கடவுள் யாரை உண்டாக்கினார்?

3. முதல் தேவதூதர் ஏன் விசேஷமானவர்?

4. ஆரம்பத்தில் இந்தப் பூமி எப்படி இருந் தது என்று சொல். (படத்தைப் பார்.)

5. மிருகங்களும் மக்களும் வாழ இந்தப் பூமியைக் கடவுள் எப்படித் தயார் செய்ய ஆரம்பித்தார்?

கூடுதல் கேள்விகள்:

1. எரேமியா 10:12-ஐ வாசி.

கடவுளுடைய படைப்பிலிருந்து அவருடைய என்னென்ன குணங்களைத் தெரிந்துகொள்ளலாம்? (ஏசா. 40:26; ரோ. 11:33)

2. கொலோசெயர் 1:15-17-ஐ வாசி.

எல்லாவற்றையும் கடவுள் படைக்கையில் இயேசு என்ன செய்து கொண்டிருந்தார், ஆகவே அவரை எப்படிப்பட்டவராக நாம் எண்ண வேண்டும்? (கொலோ. 1:15-17)

3. ஆதியாகமம் 1:1-10-ஐ வாசி.

(அ) பூமி எப்படித் தோன்றியது? (ஆதி. 1:1)

(ஆ) படைப்பின் முதல் நாளில் என்ன நடந்தது? (ஆதி. 1:3-5)

(இ) படைப்பின் இரண்டாம் நாளில் என்ன நடந்தது என்று சொல். (ஆதி. 1:7, 8)

கதை 2

ஓர் அழகிய தோட்டம்

1. கடவுள் எப்படி இந்தப் பூமியை நமக்காகத் தயார் செய்தார்?

2. கடவுள் உண்டாக்கிய விதவிதமான மிருகங்களைப் பற்றி சொல். (படத்தைப் பார்.)

3. ஏதேன் தோட்டம் ஏன் விசேஷித்ததாக இருந்தது?

4. இந்த முழு பூமியும் எப்படி மாற வேண்டுமென கடவுள் விரும்பினார்?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 1:11-25-ஐ வாசி.

(அ) படைப்பின் மூன்றாம் நாளில் கடவுள் எதை உண்டாக்கினார்? (ஆதி. 1:12)

(ஆ) படைப்பின் நான்காம் நாளில் என்ன உண்டானது? (ஆதி. 1:16)

(இ) ஐந்தாம் நாளிலும் ஆறாம் நாளிலும் கடவுள் என்னென்ன மிருகங்களை உண்டாக்கினார்? (ஆதி. 1:20, 21, 25)

2. ஆதியாகமம் 2:8, 9-ஐ வாசி.

அந்தத் தோட்டத்தில் கடவுள் வைத்த விசேஷமான இரண்டு மரங்கள் யாவை, அவை எதற்கு அடையாளமாக இருந்தன?

கதை 3

முதல் மனிதனும் மனுஷியும்

1. மூன்றாம் கதையிலுள்ள படத்திற்கும் இரண்டாம் கதையிலுள்ள படத்திற்கும் வித்தியாசம் என்ன?

2. முதல் மனிதனை உண்டாக்கியவர் யார், அந்த மனிதனுடைய பெயர் என்ன?

3. ஆதாமுக்குக் கடவுள் என்ன வேலை கொடுத்தார்?

4. ஆதாமைக் கடவுள் ஏன் நன்கு தூங்க வைத்தார்?

5. ஆதாமும் ஏவாளும் எவ்வளவு காலத்திற்கு வாழ வாய்ப்பிருந்தது, அவர்கள் என்ன வேலை செய்ய வேண்டுமென யெகோவா விரும்பினார்?

கூடுதல் கேள்விகள்:

1. சங்கீதம் 83:17-ஐ வாசி.

கடவுளுடைய பெயர் என்ன, பூமியின் மீது அவருடைய ஒப்பற்ற ஸ்தானம் என்ன? (எரே. 16:21; தானி. 4:17)

2. ஆதியாகமம் 1:26-31-ஐ வாசி.

(அ) ஆறாம் நாளில் கடைசியாக கடவுள் எதைப் படைத்தார், இந்தப் படைப்பு எவ்வாறு மிருகங்களிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தது? (ஆதி. 1:26)

(ஆ) மனிதனுக்கும் மிருகங்களுக்கும் யெகோவா எதை ஆகாரமாக கொடுத்தார்? (ஆதி. 1:30)

3. ஆதியாகமம் 2:7-25-ஐ வாசி.

(அ) மிருகங்களுக்குப் பெயர் வைக்கும்படி ஆதாமுக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் எதுவும் உட்பட்டிருந்தது? (ஆதி. 2:19)

(ஆ) மணமுடித்தல், பிரிந்துபோதல், விவாகரத்து செய்தல் ஆகியவை சம்பந்தமாக யெகோவாவின் கருத்தைப் புரிந்துகொள்ள ஆதியாகமம் 2:24 எவ்வாறு நமக்கு உதவுகிறது? (மத். 19:4-6, 9)

கதை 4

தங்கள் வீட்டை ஏன் இழந்தார்கள்

1. படத்தில் பார்க்கிறபடி, ஆதாமுக்கும் ஏவாளுக்கும் என்ன நடக்கிறது?

2. அவர்களை யெகோவா ஏன் தண்டிக்கிறார்?

3. ஏவாளிடம் ஒரு பாம்பு என்ன பேசியது?

4. ஏவாளிடம் அந்தப் பாம்பைப் பேச வைத்தது யார்?

5. ஆதாம், ஏவாள் அந்த அழகிய தோட்ட வீட்டை ஏன் இழந்தார்கள்?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 2:16, 17; 3:1-13, 24-ஐ வாசி.

(அ) ஏவாளிடம் அந்தப் பாம்பு கேட்ட கேள்வி எப்படி யெகோவாவைப் பற்றி தவறாக எடுத்துக் காட்டியது? (ஆதி. 3:1-5; 1 யோ. 5:3)

(ஆ) ஏவாள் எப்படி நமக்கு எச்சரிப்பூட்டும் ஓர் உதாரணமாக இருக்கிறாள்? (பிலி. 4:8; யாக். 1:14, 15; 1 யோ. 2:16)

(இ) ஆதாமும் ஏவாளும் தாங்கள் செய்த தவறை எவ்விதத்தில் ஒத்துக்கொள்ள தவறினர்? (ஆதி. 3:12, 13)

(ஈ) ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த கேருபீன்கள் யெகோவாவின் பேரரசுரிமைக்கு எப்படி ஆதரவு காட்டினார்கள்? (ஆதி. 3:24)

2. வெளிப்படுத்துதல் 12:9-ஐ வாசி.

யெகோவாவின் ஆட்சியிலிருந்து மனிதகுலத்தை விலக்குவதில் சாத்தான் எந்தளவு வெற்றி பெற்றிருக்கிறான்? (1யோ. 5:19)

கதை 5

கஷ்டமான வாழ்க்கை தொடங்குகிறது

1. ஏதேன் தோட்டத்துக்கு வெளியே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வாழ்க்கை எப்படி இருந்தது?

2. ஆதாமும் ஏவாளும் என்ன செய்யத் தொடங்கினார்கள், ஏன்?

3. ஆதாம், ஏவாளின் பிள்ளைகள் ஏன் வயதாகி சாக வேண்டியிருந்தது?

4. ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தால் அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் எப்படி வாழ்ந்திருப்பார்கள்?

5. ஏவாள் கீழ்ப்படியாமல் போனது அவளுக்கு என்ன வலியை உண்டாக்கியது?

6. ஆதாம் ஏவாளுடைய முதல் இரண்டு மகன்களுடைய பெயர் என்ன?

7. படத்தில் உள்ள மற்ற பிள்ளைகள் யார்?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 3:16-23; 4:1, 2-ஐ வாசி.

(அ) நிலம் சபிக்கப்பட்டதால் ஆதாமின் வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்பட்டது? (ஆதி. 3:17-19; ரோ. 8:20, 22)

(ஆ) “உயிருள்ளவள்” எனும் அர்த்தமுடைய பெயர் ஏவாளுக்கு ஏன் பொருத்தமானது? (ஆதி. 3:20)

(இ) ஆதாம் ஏவாள் பாவம் செய்த பிறகும் அவர்களுக்கு யெகோவா எப்படி இரக்கம் காட்டினார்? (ஆதி. 3:7, 21)

2. வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசி.

‘முந்தினவையான’ எவை ஒழிந்துபோவதைக் காண நீ ஆவலோடு இருக்கிறாய்?

கதை 6

ஒரு நல்ல மகனும் ஒரு கெட்ட மகனும்

1. காயீனும் ஆபேலும் என்ன வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கிறார்கள்?

2. காயீனும் ஆபேலும் யெகோவாவுக்கு என்ன காணிக்கைகளைக் கொண்டு வருகிறார்கள்?

3. ஆபேலின் காணிக்கையைப் பார்த்து யெகோவா ஏன் சந்தோஷப்படுகிறார், ஆனால் காயீனின் காணிக்கையைப் பார்த்து அவர் ஏன் சந்தோஷப்படவில்லை?

4. காயீன் எப்படிப்பட்டவன், அவனை யெகோவா எப்படித் திருத்த முயலுகிறார்?

5. தம்பியோடு வயல் வெளியில் தனியாக இருக்கும்போது காயீன் என்ன செய்கிறான்?

6. காயீன் தன்னுடைய தம்பியைக் கொன்ற பிறகு அவனுக்கு என்ன நடந்ததென்று சொல்.

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 4:2-26-ஐ வாசி.

(அ) காயீன் படுகுழியில் சிக்கவிருந்ததை யெகோவா எப்படி விவரித்தார்? (ஆதி. 4:7)

(ஆ) காயீன் தன்னுடைய மனப்பான்மையை எப்படி வெளிக்காட்டினான்? (ஆதி. 4:9)

(இ) குற்றமற்றவருடைய இரத்தத்தைச் சிந்துவது பற்றி யெகோவா எப்படிக் கருதுகிறார்? (ஆதி. 4:10; ஏசா. 26:21)

2. ஒன்று யோவான் 3:11, 12-ஐ வாசி.

(அ) காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டானதற்குக் காரணம் என்ன, இன்று நமக்கு இது எப்படி ஓர் எச்சரிப்பாக இருக்கிறது? (ஆதி. 4:4, 5; நீதி. 14:30; 28:22)

(ஆ) குடும்பத்திலுள்ள எல்லோருமே யெகோவாவை எதிர்த்தாலும், நாம் தொடர்ந்து உத்தமத்தோடு இருக்கலாம் என்பதை பைபிள் எப்படிக் காட்டுகிறது? (சங். 27:10; மத். 10:21, 22)

3. யோவான் 11:25-ஐ வாசி.

நீதியின் நிமித்தம் மரிப்பவர்களுக்கு யெகோவா என்ன வாக்குக் கொடுக்கிறார்? (யோவா. 5:24)

கதை 7

தைரியமுள்ள ஒருவர்

1. ஏனோக்கு எப்படி வித்தியாசமானவராக இருந்தார்?

2. ஏனோக்கின் காலத்தில் மக்கள் ஏன் அவ்வளவு மோசமான காரியங்களைச் செய்தார்கள்?

3. என்னென்ன கெட்ட காரியங்களை அவர்கள் செய்கிறார்கள்? (படத்தைப் பார்.)

4. ஏனோக்குக்கு ஏன் ரொம்பவே தைரியம் தேவைப்பட்டது?

5. அப்போதெல்லாம் ஆட்கள் எவ்வளவு காலம் உயிர் வாழ்ந்தார்கள், ஆனால் ஏனோக்கு எத்தனை வருடம் உயிர் வாழ்ந்தார்?

6. ஏனோக்கு இறந்த பிறகு என்ன நடந்தது?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 5:21-24, 27-ஐ வாசி.

(அ) ஏனோக்குக்கும் யெகோவாவுக்கும் இடையே எப்படிப்பட்ட பந்தம் இருந்தது? (ஆதி. 5:24)

(ஆ) பைபிளின்படி அதிக வருடம் உயிர்வாழ்ந்தவர் யார், அவர் எத்தனை வயதில் மரித்தார்? (ஆதி. 5:27)

2. ஆதியாகமம் 6:5-ஐ வாசி.

ஏனோக்கு இறந்த பிறகு பூமியில் நிலைமை எப்படிப் படுமோசமாக ஆனது, இது நம்முடைய காலத்திற்கு எப்படி ஒத்திருக்கிறது? (2 தீ. 3:13)

3. எபிரெயர் 11:5-ஐ வாசி.

ஏனோக்கின் எந்தக் குணம் ‘தேவனுக்குப் பிரியமாக’ இருந்தது, அதனால் அவருக்குக் கிடைத்த பலன் என்ன? (ஆதி. 5:22)

4. யூதா 14, 15-ஐ வாசி.

வரவிருக்கும் அர்மகெதோன் யுத்தத்தைப் பற்றி ஜனங்களுக்கு எச்சரிக்கையில் இன்று கிறிஸ்தவர்கள் ஏனோக்கின் தைரியத்தை எப்படிப் பின்பற்றலாம்? (2 தீ. 4:2; எபி. 13:6)

கதை 8

பூமியில் இராட்சதர்கள்

1. சாத்தான் சொன்னதைக் கேட்ட சில தேவதூதர்கள் என்ன செய்தார்கள்?

2. தேவதூதர்கள் சிலர் பரலோகத்தில் தங்களுக்கு இருந்த வேலையை விட்டுவிட்டு ஏன் பூமிக்கு வந்தார்கள்?

3. தேவதூதர்கள் பூமிக்கு வந்து மனித உருவெடுப்பது ஏன் தவறாக இருந்தது?

4. இந்தத் தேவதூதர்களுக்குப் பிறந்த குழந்தைகள் எப்படி வித்தியாசமானவர்களாக இருந்தார்கள்?

5. படத்தில் பார்க்கிறபடி, தேவதூதர்களுக்குப் பிறந்த குழந்தைகள் வளர்ந்து இராட்சதர்களாக ஆன பிறகு என்ன செய்தார்கள்?

6. ஏனோக்கு இறந்த பிறகு பூமியில் வாழ்ந்த நல்லவர் யார், கடவுளுக்கு அவரை ஏன் பிடித்திருந்தது?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 6:1-8-ஐ வாசி.

நம்முடைய நடத்தை யெகோவாவின் உணர்ச்சிகளைப் பாதிக்கும் என ஆதியாகமம் 6:6 எப்படிக் காட்டுகிறது? (சங். 78:40, 41; நீதி. 27:11)

2. யூதா 6-ஐ வாசி.

நோவாவின் நாளில் தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல்” போன தேவதூதர்கள் இன்று நமக்கு எப்படி ஓர் எச்சரிப்பாக இருக்கிறார்கள்? (1 கொ. 3:5-9; 2 பே. 2:4, 9, 10)

கதை 9

நோவா ஒரு பேழையைக் கட்டுகிறார்

1. நோவாவின் குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தார்கள், அவருடைய மூன்று மகன்களின் பெயர் என்ன?

2. புதுமையான என்ன காரியத்தைச் செய்யும்படி நோவாவிடம் கடவுள் சொன்னார், ஏன்?

3. பேழையைக் கட்டுவதைப் பற்றி அக்கம்பக்கத்தாரிடம் நோவா சொன்னபோது அவர்கள் என்ன செய்தார்கள்?

4. மிருகங்களையெல்லாம் என்ன செய்யும்படி நோவாவிடம் கடவுள் சொன்னார்?

5. பேழையின் கதவை கடவுள் மூடிய பிறகு நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் என்ன செய்ய வேண்டியிருந்தது?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 6:9-22-ஐ வாசி.

(அ) மெய்க் கடவுளை வணங்குவதில் நோவா ஒப்பற்று விளங்கியதற்குக் காரணங்கள் யாவை? (ஆதி. 6:9, 22)

(ஆ) வன்முறையை யெகோவா எப்படிக் கருதுகிறார், எப்படிப்பட்ட பொழுதுபோக்குகளைத் தேர்ந்தெடுக்க இது நம்மைத் தூண்ட வேண்டும்? (ஆதி. 6:11, 12; சங். 11:5)

(இ) யெகோவாவின் அமைப்பு மூலமாக அறிவுரைகளைப் பெறுகையில் நாம் எப்படி நோவாவின் மாதிரியைப் பின்பற்றலாம்? (ஆதி. 6:22; 1 யோ. 5:3)

2. ஆதியாகமம் 7:1-9-ஐ வாசி.

அபூரண மனிதனான நோவாவை யெகோவா நீதிமானாக கருதியது இன்று நம்மை எப்படி உற்சாகப்படுத்துகிறது? (ஆதி. 7:1; நீதி. 10:16; ஏசா. 26:7)

கதை 10

பெரிய ஜலப்பிரளயம்

1. மழை பெய்ய ஆரம்பித்த பிறகு பேழைக்குள் ஏன் யாராலும் செல்ல முடியவில்லை?

2. இரவும் பகலுமாக எத்தனை நாட்களுக்கு மழை பெய்யும்படி யெகோவா செய்தார், தண்ணீர் எவ்வளவு உயரம் எழும்பிக்கொண்டே வந்தது?

3. தண்ணீரால் பூமியே மூடப்பட்டபோது, அந்தப் பேழை என்ன ஆனது?

4. அந்த இராட்சதர்கள் ஜலப்பிரளயத்திலிருந்து தப்பித்தார்களா, அவர்களுடைய அப்பாக்கள் என்ன ஆனார்கள்?

5. ஐந்து மாதங்களுக்குப் பிறகு அந்தப் பேழை எங்கே தங்கியது?

6. நோவா ஏன் ஒரு அண்டங்காக்காவைப் பேழைக்கு வெளியே விட்டார்?

7. தண்ணீர் இறங்கி விட்டதை நோவா எப்படித் தெரிந்து கொண்டார்?

8. நோவாவும் அவருடைய குடும்பமும் ஒரு வருஷத்திற்கு மேல் அந்தப் பேழையில் இருந்த பிறகு அவரிடம் கடவுள் என்ன சொன்னார்?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 7:10-24-ஐ வாசி.

(அ) பூமியில் உயிரோடிருந்த யாவும் எந்தளவுக்கு அழிந்துபோயின? (ஆதி. 7:23)

(ஆ) மழை பெய்ய ஆரம்பித்தது முதல் பூமி காய்ந்துபோகும் வரைக்கும் எவ்வளவு காலம் எடுத்தது? (ஆதி. 7:11; 8:13, 14)

2. ஆதியாகமம் 8:1-17-ஐ வாசி.

பூமியைக் குறித்ததில் யெகோவாவின் ஆதி நோக்கம் மாறவில்லை என்பதை ஆதியாகமம் 8:17 எப்படிக் காட்டுகிறது?

3. ஒன்று பேதுரு 3:19, 20-ஐ வாசி.

(அ) கலகம் செய்த தூதர்கள் மீண்டும் பரலோகத்திற்குப் போனபோது, அவர்கள் என்ன நியாயத்தீர்ப்பைப் பெற்றார்கள்? (யூ. 6)

(ஆ) நோவாவையும் அவருடைய குடும்பத்தாரையும் பற்றிய சம்பவம், யெகோவாவால் தம் மக்களைக் காப்பாற்ற முடியும் என்ற நமது நம்பிக்கையை எப்படிப் பலப்படுத்துகிறது? (2 பே. 2:9)

கதை 11

முதல் வானவில்

1. படம் காட்டுகிறபடி, பேழையிலிருந்து நோவா வெளியே வந்ததும் முதல் வேலையாக என்ன செய்தார்?

2. ஜலப்பிரளயத்திற்குப் பிறகு நோவாவிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் கடவுள் என்ன கூறினார்?

3. கடவுள் என்ன வாக்குக் கொடுத்தார்?

4. ஒரு வானவில்லை பார்க்கும்போது எது நம் நினைவுக்கு வர வேண்டும்?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 8:18-22-ஐ வாசி.

(அ) யெகோவாவுக்கு “சுகந்த வாசனையை” இன்று நாம் எப்படி செலுத்த முடியும்? (ஆதி. 8:21; எபி. 13:15, 16)

(ஆ) மனிதனின் இருதய நிலையைப் பற்றி யெகோவா என்ன குறிப்பிட்டார், அப்படியானால் நாம் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? (ஆதி. 8:21; மத். 15:18, 19)

2. ஆதியாகமம் 9:9-17-ஐ வாசி.

(அ) பூமியிலுள்ள எல்லா ஜீவ ஜந்துக்களோடும் யெகோவா என்ன உடன்படிக்கை செய்தார்? (ஆதி. 9:10, 11)

(ஆ) இந்த வானவில் உடன்படிக்கை எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்? (ஆதி. 9:16)

கதை 12

ஒரு பெரிய கோபுரத்தை மனிதர் கட்டுகின்றனர்

1. நிம்ரோது யார், அவனைப் பற்றி கடவுள் என்ன அபிப்பிராயம் வைத்திருந்தார்?

2. படத்தில் பார்க்கிறபடி, ஜனங்கள் ஏன் செங்கல் உண்டாக்கினார்கள்?

3. இந்தக் கட்டிடத்தைக் கட்டுவது யெகோவாவுக்கு ஏன் பிடிக்கவில்லை?

4. அந்தக் கோபுரம் கட்டும் வேலையை கடவுள் எப்படி நிறுத்தினார்?

5. அந்த நகரத்தின் பெயர் என்ன, அதன் அர்த்தம் என்ன?

6. மக்களுடைய பாஷையைக் கடவுள் குழப்பிவிட்ட பிறகு அவர்கள் என்ன செய்யத் தொடங்கினார்கள்?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 10:1, 8-10-ஐ வாசி.

நிம்ரோத் எப்படிப்பட்டவனாக இருந்தான், இது நமக்கு என்ன எச்சரிப்பை அளிக்கிறது? (நீதி. 3:31)

2. ஆதியாகமம் 11:1-9-ஐ வாசி.

என்ன நோக்கத்தோடு அந்தக் கோபுரம் கட்டப்பட்டது, ஆனால் அந்தத் திட்டம் ஏன் தோல்வியடைந்தது? (ஆதி. 11:4; நீதி. 16:18; யோவா. 5:44)

கதை 13

ஆபிரகாம்—கடவுளுடைய நண்பர்

1. ஊர் என்ற நகரத்தில் எப்படிப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தார்கள்?

2. படத்தில் பார்க்கிற மனிதர் யார், அவர் எப்போது பிறந்தார், எங்கு வாழ்ந்து வந்தார்?

3. ஆபிரகாமை கடவுள் என்ன செய்யச் சொன்னார்?

4. கடவுளுடைய நண்பர் என்று ஆபிரகாம் ஏன் அழைக்கப்பட்டார்?

5. ஊர் நகரத்தை விட்டு ஆபிரகாம் புறப்பட்டபோது யாரெல்லாம் அவரோடு போனார்கள்?

6. கானான் தேசத்திற்கு வந்த பிறகு ஆபிரகாமிடம் கடவுள் என்ன சொன்னார்?

7. ஆபிரகாமுக்கு 99 வயது இருக்கையில் அவருக்குக் கடவுள் என்ன வாக்குக் கொடுத்தார்?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 11:27-32-ஐ வாசி.

(அ) ஆபிரகாமுக்கு லோத்து எப்படிச் சொந்தம்? (ஆதி. 11:27)

(ஆ) கானான் தேசத்துக்குக் குடும்பத்தாரை அழைத்து வந்தது தேராகுதான் என சொல்லப்பட்டிருக்கிற போதிலும் உண்மையில் இதற்கு முயற்சி எடுத்தவர் ஆபிரகாமே என்பதை நாம் எப்படித் தெரிந்து கொள்கிறோம், அவர் ஏன் அப்படிச் செய்தார்? (ஆதி. 11:31; அப். 7:2-4)

2. ஆதியாகமம் 12:1-7-ஐ வாசி.

கானான் தேசத்திற்கு ஆபிரகாம் வந்த பிறகு அவரோடு செய்த உடன்படிக்கையைப் பற்றிய என்ன கூடுதல் விவரத்தை யெகோவா அளித்தார்? (ஆதி. 12:7)

3. ஆதியாகமம் 17:1-8, 15-17-ஐ வாசி.

(அ) ஆபிராமுக்கு 99 வயது இருக்கையில் அவருடைய பெயர் எப்படி மாற்றப்பட்டது, ஏன்? (ஆதி. 17:5)

(ஆ) என்ன எதிர்கால ஆசீர்வாதங்களைத் தருவதாக சாராளுக்கு யெகோவா வாக்குக் கொடுத்தார்? (ஆதி. 17:15, 16)

4. ஆதியாகமம் 18:9-19-ஐ வாசி.

(அ) ஆதியாகமம் 18:19-ல் அப்பாமாருக்கு என்ன பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன? (உபா. 6:6, 7; எபே. 6:4)

(ஆ) யெகோவாவின் கண்களுக்கு நாம் எதையும் மறைக்க முடியாது என்பதை சாராளின் எந்த அனுபவம் காட்டுகிறது? (ஆதி. 18:12, 15; சங். 44:21)

கதை 14

ஆபிரகாமுடைய விசுவாசத்தைக் கடவுள் சோதிக்கிறார்

1. ஆபிரகாமுக்குக் கடவுள் என்ன வாக்குக் கொடுத்திருந்தார், அந்த வாக்கைக் கடவுள் எப்படிக் காப்பாற்றினார்?

2. படத்தில் பார்க்கிறபடி, ஆபிரகாமின் விசுவாசத்தைக் கடவுள் எப்படிச் சோதித்தார்?

3. கடவுளின் கட்டளை ஆபிரகாமுக்குக் குழப்பமாக இருந்தபோதிலும் அவர் என்ன செய்தார்?

4. மகனைக் கொல்வதற்காகக் கத்தியை ஆபிரகாம் வெளியே எடுத்ததும் என்ன நடந்தது?

5. ஆபிரகாமுக்குக் கடவுள் மீது எந்தளவு விசுவாசம் இருந்தது?

6. பலியிட ஆபிரகாமுக்குக் கடவுள் எதைக் கொடுத்தார், எப்படி?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 21:1-7-ஐ வாசி.

ஆபிரகாம் தன் மகனுக்கு எட்டாம் நாளில் ஏன் விருத்தசேதனம் செய்தார்? (ஆதி. 17:10-12; 21:4)

2. ஆதியாகமம் 22:1-18-ஐ வாசி.

தன் தகப்பனான ஆபிரகாமுக்கு ஈசாக்கு எப்படிக் கீழ்ப்படிந்திருந்தார், பிற்பாடு நிகழவிருந்த மிக முக்கியமான சம்பவத்திற்கு இது எப்படி ஒரு படமாக இருந்தது? (ஆதி. 22:7-9; 1 கொ. 5:7; பிலி. 2:8, 9)

கதை 15

லோத்துவின் மனைவி திரும்பிப் பார்த்தாள்

1. ஆபிரகாமும் லோத்துவும் ஏன் பிரிந்து போனார்கள்?

2. லோத்து ஏன் சோதோமில் குடியேற தீர்மானித்தார்?

3. சோதோம் நகரத்தார் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள்?

4. இரண்டு தேவதூதர்கள் லோத்துவுக்கு என்ன எச்சரிப்பு கொடுத்தார்கள்?

5. லோத்துவின் மனைவி ஏன் உப்புத்தூண் ஆனாள்?

6. லோத்துவின் மனைவியுடைய விஷயத்திலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 13:5-13-ஐ வாசி.

தனி நபர்களுக்கு இடையேயுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது சம்பந்தமாக ஆபிரகாமிடமிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (ஆதி. 13:8, 9; ரோ. 12:10; பிலி. 2:3, 4)

2. ஆதியாகமம் 18:20-33-ஐ வாசி.

ஆபிரகாமிடம் யெகோவா நடந்துகொண்ட விதம், யெகோவாவும் இயேசுவும் நீதியாக நியாயந்தீர்ப்பார்கள் என்ற உறுதியை நமக்கு எப்படி அளிக்கிறது? (ஆதி. 18:25, 26; மத். 25:31-33)

3. ஆதியாகமம் 19:1-29-ஐ வாசி.

(அ) ஓரினப்புணர்ச்சியை யெகோவா எப்படிக் கருதுகிறார் என்பதைப் பற்றி இந்த பைபிள் பதிவு என்ன காட்டுகிறது? (ஆதி. 19:5, 13; லேவி. 20:13)

(ஆ) கடவுளுடைய கட்டளைக்கு லோத்துவும் ஆபிரகாமும் பிரதிபலித்த விதங்களில் என்ன வித்தியாசத்தை நாம் பார்க்கிறோம், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆதி. 19:15, 16, 19, 20; 22:3)

4. லூக்கா 17:28-32-ஐ வாசி.

சொத்துபத்துகள் மீது லோத்துவின் மனைவிக்கு எப்படிப்பட்ட மனப்பான்மை இருந்தது, இது நமக்கு ஏன் ஓர் எச்சரிப்பாக இருக்கிறது? (லூக். 12:15; 17:31, 32; மத். 6:19-21, 25)

5. இரண்டு பேதுரு 2:6-8-ஐ வாசி.

லோத்துவைப் போல், நம்மைச் சுற்றியுள்ள தெய்வ பக்தியற்ற இந்த உலகத்தைக் குறித்து எப்படிப்பட்ட மனப்பான்மை நமக்கு இருக்க வேண்டும்? (எசே. 9:4; 1 யோ. 2:15-17)

கதை 16

ஈசாக்கிற்கு ஒரு நல்ல மனைவி கிடைக்கிறாள்

1. படத்திலுள்ள ஆணும் பெண்ணும் யார்?

2. தன் மகனுக்கு ஒரு மனைவியைத் தேடிக் கொடுப்பதற்காக ஆபிரகாம் என்ன செய்தார், ஏன்?

3. ஆபிரகாமின் வேலைக்காரனுடைய ஜெபம் எப்படிக் கேட்கப்பட்டது?

4. ஈசாக்கை கல்யாணம் செய்துகொள்ள சம்மதமா என கேட்டதற்கு ரெபெக்காள் என்ன சொன்னாள்?

5. ஈசாக்கு மீண்டும் சந்தோஷமுள்ளவராக ஆனது எப்படி?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 24:1-67-ஐ வாசி.

(அ) கிணற்றருகே ஆபிரகாமின் வேலைக்காரனைப் பார்த்தபோது ரெபெக்காள் என்ன சிறந்த குணங்களை வெளிக்காட்டினாள்? (ஆதி. 24:17-20; நீதி. 31:17, 31)

(ஆ) ஈசாக்கிற்கு ஆபிரகாம் செய்த ஏற்பாடு இன்றைய கிறிஸ்தவர்களுக்கு என்ன சிறந்த முன்மாதிரியை வைக்கிறது? (ஆதி. 24:37, 38; 1 கொ. 7:39; 2கொ. 6:14)

(இ) ஈசாக்கைப் போல தியானிப்பதற்கு நாம் ஏன் நேரம் ஒதுக்க வேண்டும்? (ஆதி. 24:63; சங். 77:12; பிலி. 4:8)

கதை 17

எதிரும் புதிருமான இரட்டையர்கள்

1. ஏசாவும் யாக்கோபும் யார், அவர்கள் எப்படி வித்தியாசப்பட்டவர்களாக இருந்தார்கள்?

2. தங்களுடைய தாத்தாவான ஆபிரகாம் மரிக்கும்போது இந்த இரட்டையர்களுக்கு எத்தனை வயது?

3. ஏசா செய்த என்ன காரியத்தை நினைத்து அவனுடைய அம்மாவும் அப்பாவும் ரொம்ப வேதனைப்பட்டார்கள்?

4. தன் தம்பி யாக்கோபின் மேல் ஏசாவுக்கு ஏன் பயங்கர கோபம் வந்தது?

5. தன் மகன் யாக்கோபுக்கு ஈசாக்கு என்ன அறிவுரை கொடுத்தார்?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 25:5-11, 20-34-ஐ வாசி.

(அ) ரெபெக்காளின் இரண்டு மகன்களைப் பற்றி யெகோவா என்ன தீர்க்கதரிசனம் உரைத்தார்? (ஆதி. 25:23)

(ஆ) சேஷ்ட புத்திரபாகத்தைப் பற்றியதில் யாக்கோபுக்கும் ஏசாவுக்கும் இடையே என்ன வித்தியாசப்பட்ட மனநிலை இருந்தது? (ஆதி. 25:31-34)

2. ஆதியாகமம் 26:34, 35; 27:1-46; 28:1-5-ஐ வாசி.

(அ) ஆன்மீக காரியங்களை ஏசா அவமதித்ததை எப்படி வெளிப்படையாகக் காட்டினான்? (ஆதி. 26:34, 35; 27:46)

(ஆ) கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு, என்ன செய்யும்படி யாக்கோபிடம் ஈசாக்கு சொன்னார்? (ஆதி. 28:1-4)

3. எபிரெயர் 12:16, 17-ஐ வாசி.

பரிசுத்த காரியங்களை அவமதிப்போருக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி ஏசாவின் உதாரணம் என்ன காட்டுகிறது?

கதை 18

யாக்கோபு ஆரானுக்குப் போகிறார்

1. படத்திலுள்ள இளம் பெண் யார், அவளுக்காக யாக்கோபு என்ன செய்தார்?

2. ராகேலை கல்யாணம் செய்துகொள்வதற்கு யாக்கோபு என்ன செய்ய தயாராக இருந்தார்?

3. ராகேலை யாக்கோபு கல்யாணம் செய்துகொள்வதற்கான சமயம் வந்தபோது லாபான் என்ன செய்தார்?

4. ராகேலையும் கல்யாணம் செய்துகொள்வதற்கு யாக்கோபு என்ன செய்ய சம்மதித்தார்?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 29:1-30-ஐ வாசி.

(அ) தன்னை லாபான் ஏமாற்றிய போதிலும் யாக்கோபு எப்படிக் கண்ணியமானவராக நடந்துகொண்டார், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆதி. 25:27; 29:26-28; மத். 5:37)

(ஆ) அன்புக்கும் மோகத்துக்கும் உள்ள வித்தியாசத்தை யாக்கோபின் உதாரணம் எப்படிக் காட்டுகிறது? (ஆதி. 29:18, 20, 30; உன். 8:6)

(இ) யாக்கோபுக்கு மனைவிகளாக இருந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்த நான்கு பெண்கள் யார்? (ஆதி. 29:23, 24, 28, 29)

கதை 19

யாக்கோபுக்கு ஒரு பெரிய குடும்பம்

1. யாக்கோபின் முதல் மனைவியான லேயாள் பெற்றெடுத்த ஆறு மகன்களின் பெயர் என்ன?

2. யாக்கோபுக்கு லேயாளின் வேலைக்காரியான சில்பாள் பெற்றெடுத்த இரண்டு மகன்கள் யார்?

3. ராகேலின் வேலைக்காரியான பில்காள், யாக்கோபுக்குப் பெற்றெடுத்த இரண்டு மகன்களின் பெயர் என்ன?

4. ராகேல் பெற்றெடுத்த இரண்டு மகன்கள் யார், இரண்டாவது மகன் பிறந்த சமயத்தில் அவளுக்கு என்ன நேர்ந்தது?

5. படத்தில் பார்க்கிறபடி யாக்கோபுக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தார்கள், இவர்களிலிருந்து யார் வந்தார்கள்?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 29:32-35; 30:1-26; 35:16-19-ஐ வாசி.

யாக்கோபின் 12 குமாரர்களுடைய விஷயத்தில் பார்க்கிறபடி, பூர்வ காலங்களில் எபிரெய ஆண் பிள்ளைகளுக்குப் பெரும்பாலும் எப்படிப் பெயர் வைக்கப்பட்டது?

2. ஆதியாகமம் 37:35-ஐ வாசி.

தீனாளுடைய பெயர் மட்டுமே பைபிளில் கொடுக்கப்பட்டிருந்தாலும், யாக்கோபுக்கு இன்னும் அதிகமான மகள்கள் இருந்தார்கள் என்பதை நாம் எப்படி அறிந்துகொள்கிறோம்? (ஆதி. 37:34, 35)

கதை 20

தீனாள் பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறாள்

1. கானான் தேசத்தாரைத் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கல்யாணம் செய்து கொடுக்க ஆபிரகாமும் ஈசாக்கும் ஏன் விரும்பவில்லை?

2. கானானியப் பெண்களோடு தீனாள் பழகுவது யாக்கோபுக்குப் பிடித்திருந்ததா?

3. படத்தில் தீனாளைப் பார்த்துக் கொண்டிருக்கிற அந்த மனிதன் யார், அவன் என்ன கெட்ட காரியத்தைச் செய்தான்?

4. தீனாளின் அண்ணன்மாரான சிமியோனும் லேவியும் நடந்ததைக் கேள்விப்பட்டபோது என்ன செய்தார்கள்?

5. சிமியோனும் லேவியும் செய்த காரியத்தை யாக்கோபு ஆமோதித்தாரா?

6. இந்தக் குடும்பப் பிரச்சினையெல்லாம் எப்படி ஆரம்பித்தது?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 34:1-31-ஐ வாசி.

(அ) கானான் தேசத்துப் பெண்களோடு பழகுவதற்கு தீனாள் ஒரேயொரு முறை மட்டும்தான் போனாளா? விவரமாகச் சொல். (ஆதி. 34:1, NW)

(ஆ) தன் கற்பை இழந்ததற்கு தீனாளும் ஒருவிதத்தில் காரணமாக இருந்தாள் என ஏன் சொல்லலாம்? (கலா. 6:7)

(இ) தீனாளின் எச்சரிப்பூட்டும் உதாரணத்தை மனதார ஏற்றுக்கொண்டதை இளைஞர்கள் இன்று எப்படிக் காட்டலாம்? (நீதி. 13:20; 1 கொ. 15:33; 1 யோ. 5:19)

கதை 21

யோசேப்பின் அண்ணன்மார் அவனை வெறுக்கிறார்கள்

1. யோசேப்பின் மீது அவனுடைய அண்ணன்மார் ஏன் பொறாமைப்பட்டார்கள், அதனால் அவர்கள் என்ன செய்தார்கள்?

2. யோசேப்பின் அண்ணன்மார் அவனை என்ன செய்ய நினைக்கிறார்கள், ஆனால் ரூபன் என்ன சொல்கிறான்?

3. இஸ்மவேலர் வரும்போது என்ன நடக்கிறது?

4. யோசேப்பு செத்து போய்விட்டான் என தங்கள் அப்பா நினைத்துக்கொள்வதற்காக அவனுடைய அண்ணன்மார் என்ன செய்கிறார்கள்?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 37:1-35-ஐ வாசி.

(அ) சபையில் நடக்கும் தவறை அறிவிப்பதில் யோசேப்பின் முன்மாதிரியைக் கிறிஸ்தவர்கள் எப்படிப் பின்பற்றலாம்? (ஆதி. 37:2; லேவி. 5:1; 1 கொ. 1:11)

(ஆ) யோசேப்புக்கு அவனுடைய அண்ணன்மார் துரோகம் செய்ததற்குக் காரணம் என்ன? (ஆதி. 37:11, 18; நீதி. 27:4; யாக் 3:14-16)

(இ) யாக்கோபு செய்தது போல் துக்கம் கொண்டாடுபவர்கள் பொதுவாக என்ன செய்கிறார்கள்? (ஆதி. 37:35)

கதை 22

யோசேப்பு சிறையில் அடைக்கப்படுகிறான்

1. எகிப்துக்குக் கொண்டு போகும்போது யோசேப்புக்கு எத்தனை வயது, அங்கே அவனை என்ன செய்கிறார்கள்?

2. யோசேப்பு ஏன் சிறையில் அடைக்கப்படுகிறான்?

3. சிறையில் யோசேப்புக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்படுகிறது?

4. சிறையில், பார்வோனின் பானபாத்திரக்காரனுக்கும் ரொட்டி சுடுகிறவனுக்கும் யோசேப்பு என்ன செய்கிறான்?

5. அந்தப் பானபாத்திரக்காரன் சிறையிலிருந்து விடுதலையான பிறகு என்ன நடக்கிறது?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 39:1-23-ஐ வாசி.

யோசேப்பின் காலத்தில் விபசாரத்திற்கு எதிராகக் கடவுளுடைய எந்தச் சட்டமும் இல்லாதிருந்த போதிலும், போத்திபாரின் மனைவியிடமிருந்து தப்பித்து ஓட எது அவனைத் தூண்டியது? (ஆதி. 2:24; 20:3; 39:9)

2. ஆதியாகமம் 40:1-23-ஐ வாசி.

(அ) அந்தப் பானபாத்திரக்காரன் கண்ட கனவையும் யோசேப்புக்கு யெகோவா வெளிப்படுத்திய அதன் விளக்கத்தையும் சுருக்கமாகச் சொல். (ஆதி. 40:9-13)

(ஆ) ரொட்டி சுடுகிறவன் கண்ட கனவு என்ன, அதன் அர்த்தம் என்ன? (ஆதி. 40:16-19)

(இ) உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் இன்று எவ்வாறு யோசேப்பின் மனப்பான்மையைக் காட்டியிருக்கிறார்கள்? (ஆதி. 40:8; சங். 36:9; யோவா. 17:17; அப். 17:2, 3)

(ஈ) பிறந்த நாள் கொண்டாட்டங்களைக் குறித்த கிறிஸ்தவ நோக்குநிலையை ஆதியாகமம் 40:20 எப்படித் தெளிவுபடுத்துகிறது? (பிர. 7:1; மாற். 6:21-28)

கதை 23

பார்வோனின் கனவுகள்

1. ஒருநாள் இரவு பார்வோனுக்கு என்ன நடக்கிறது?

2. கடைசியில் அந்தப் பானபாத்திரக்காரனுக்கு ஏன் யோசேப்பின் ஞாபகம் வருகிறது?

3. படத்தில் பார்க்கிறபடி, என்ன இரண்டு கனவுகளை பார்வோன் காண்கிறான்?

4. அந்தக் கனவுகளின் அர்த்தத்தை யோசேப்பு எப்படி விளக்குகிறார்?

5. எகிப்தில் யோசேப்பு எப்படி பார்வோனுக்கு அடுத்த மிக முக்கியமான ஸ்தானத்தைப் பெறுகிறார்?

6. யோசேப்பின் அண்ணன்மார் ஏன் எகிப்துக்கு வருகிறார்கள், யோசேப்பை அவர்களுக்கு ஏன் அடையாளம் தெரியவில்லை?

7. தான் கண்ட என்ன கனவு யோசேப்பின் நினைவுக்கு வருகிறது, இதனால் அவர் எதைப் புரிந்துகொள்கிறார்?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 41:1-57-ஐ வாசி.

(அ) யோசேப்பு எவ்வாறு யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கிறார், அவருடைய மாதிரியை இன்று கிறிஸ்தவர்கள் எப்படிப் பின்பற்றலாம்? (ஆதி. 41:16, 25, 28; மத். 5:16; 1 பே. 2:12)

(ஆ) எகிப்தில் செழுமையான காலங்களுக்குப் பிறகு வந்த பஞ்ச காலங்கள், இன்று யெகோவாவின் ஜனங்களுக்கும் கிறிஸ்தவமண்டலத்தாருக்கும் இடையேயுள்ள ஆன்மீக நிலையை எப்படி நன்கு வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது? (ஆதி. 41:29, 30; ஆமோ. 8:11, 12)

2. ஆதியாகமம் 42:1-8; 50:20-ஐ வாசி.

உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள ஒருவருக்கு மதிப்பு மரியாதை காண்பிப்பதற்காக அவருக்கு முன்பாகப் பணிவது ஒரு நாட்டு பழக்கமானால் யெகோவாவின் சாட்சிகள் அவ்வாறு செய்வது தவறா? (ஆதி. 42:6)

கதை 24

யோசேப்பு தன் அண்ணன்மாரை சோதித்துப் பார்க்கிறார்

1. யோசேப்பு தன் அண்ணன்மாரை வேவு பார்க்க வந்தவர்கள் என்று ஏன் குற்றம்சாட்டுகிறார்?

2. கடைசி மகனான பென்யமீனை எகிப்துக்கு அழைத்துச் செல்ல யாக்கோபு ஏன் அனுமதிக்கிறார்?

3. யோசேப்பின் வெள்ளி பானபாத்திரம் எப்படி பென்யமீனின் சாக்கில் இருக்கிறது?

4. பென்யமீனை விடுவிப்பதற்காக யூதா என்ன செய்ய முன்வருகிறார்?

5. யோசேப்பின் அண்ணன்மார் மனம் மாறியிருப்பது எப்படித் தெரிய வருகிறது?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 42:9-38-ஐ வாசி.

ஆதியாகமம் 42:18-ல் காணப்படும் யோசேப்பின் வார்த்தைகள், இன்று யெகோவாவின் அமைப்பில் பொறுப்பான ஸ்தானத்திலுள்ளவர்களுக்கு எப்படி ஒரு சிறந்த நினைப்பூட்டுதலாக இருக்கிறது? (நெ. 5:15; 2 கொ. 7:1, 2)

2. ஆதியாகமம் 43:1-34-ஐ வாசி.

(அ) ரூபன் தலைப்பிள்ளையாக இருந்தாலும், தன் சகோதரர்கள் சார்பாக பேசியவர் யூதாதான் என்பது எப்படித் தெளிவாகிறது? (ஆதி. 43:3, 8, 9; 44:14, 18; 1 நா. 5:2)

(ஆ) தன் சகோதரர்களை யோசேப்பு எப்படிச் சோதித்தார், ஏன்? (ஆதி. 43:33, 34)

3. ஆதியாகமம் 44:1-34-ஐ வாசி.

(அ) தன் சகோதரர்கள் அடையாளம் கண்டுகொள்ளாதிருக்க யோசேப்பு தன்னை யாராக காட்டிக்கொண்டார்? (ஆதி. 44:5, 15; லேவி. 19:26)

(ஆ) தம்பி மீது முன்பு இருந்த பொறாமை இப்போது மறைந்து விட்டது என்பதை யோசேப்பின் அண்ணன்மார் எப்படிக் காட்டினார்கள்? (ஆதி. 44:13, 33, 34)

கதை 25

இந்தக் குடும்பம் எகிப்துக்கு குடிமாறிப் போகிறது

1. தான் யார் என்பதைத் தன் சகோதரர்களுக்கு யோசேப்பு தெரிவிக்கையில் என்ன நடக்கிறது?

2. தன் சகோதரர்களிடம் யோசேப்பு அன்பாக என்ன சொல்கிறார்?

3. யோசேப்பின் சகோதரர்கள் வந்திருப்பதைக் கேள்விப்படுகையில் பார்வோன் என்ன சொல்கிறார்?

4. எகிப்துக்கு இடம் மாறுகையில் யாக்கோபின் குடும்பம் எவ்வளவு பெரிதாயிருந்தது?

5. யாக்கோபின் குடும்பம் பிற்பாடு எப்படி அழைக்கப்பட்டது, ஏன்?

கூடுதல் கேள்விகள்:

1. ஆதியாகமம் 45:1-28-ஐ வாசி.

தம் ஊழியர்களுக்குச் செய்யப்படும் தீமையை யெகோவாவால் நன்மையாக மாற்ற முடியும் என்பதை யோசேப்பின் இந்தச் சம்பவம் எப்படிக் காட்டுகிறது? (ஆதி. 45:5-8; ஏசா. 8:10; பிலி. 1:12-14)

2. ஆதியாகமம் 46:1-27-ஐ வாசி.

எகிப்துக்குப் போகும் வழியில் யாக்கோபுக்கு யெகோவா எப்படி நம்பிக்கையூட்டுகிறார்? (ஆதி. 46:1-4, NW அடிக்குறிப்பு)

கதை 26

யோபு​—⁠கடவுளுக்கு உண்மையுள்ளவராக இருக்கிறார்

1. யோபு யார்?

2. சாத்தான் என்ன செய்ய நினைத்தான், அதைச் செய்ய அவனால் முடிந்ததா?

3. என்ன செய்யும்படி சாத்தானை யெகோவா அனுமதித்தார், ஏன்?

4. ‘கடவுளைச் சபித்துவிட்டு உயிரை விடும்’ என்று யோபுவின் மனைவி ஏன் சொன்னாள்? (படத்தைப் பார்.)

5. இரண்டாவது படத்தில் பார்க்கிறபடி, யோபுவை யெகோவா எப்படி ஆசீர்வதித்தார், ஏன்?

6. யோபுவைப் போல் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தால், நாமும் என்ன ஆசீர்வாதங்களைப் பெறுவோம்?

கூடுதல் கேள்விகள்:

1. யோபு 1:1-22-ஐ வாசி.

இன்று கிறிஸ்தவர்கள் எப்படி யோபுவைப் பின்பற்றலாம்? (யோபு 1:1; பிலி. 2:15; 2 பே. 3:14)

2. யோபு 2:1-13-ஐ வாசி.

சாத்தானின் துன்புறுத்தலுக்கு யோபுவும் அவருடைய மனைவியும் எப்படி ஒருவருக்கொருவர் வித்தியாசமாகப் பிரதிபலித்தார்கள்? (யோபு 2:9, 10; நீதி. 19:3; மீ. 7:7; மல். 3:14)

3. யோபு 42:10-17-ஐ வாசி.

(அ) உண்மையோடு வாழ்ந்ததால் யோபுவுக்குக் கிடைத்த ஆசீர்வாதத்திற்கும் இயேசுவுக்கு கிடைத்த ஆசீர்வாதத்திற்கும் இடையேயுள்ள ஒப்புமைகள் யாவை? (யோபு 42:12; பிலி. 2:9-11)

(ஆ) கடவுளிடம் தொடர்ந்து உத்தமத்தோடு இருந்ததற்காக யோபு பெற்ற ஆசீர்வாதங்கள் நமக்கு எப்படி உற்சாகமளிக்கின்றன? (யோபு 42:10, 12; எபி. 6:10; யாக். 1:2-4, 12; 5:11)

கதை 27

ஒரு கெட்ட ராஜா எகிப்தை ஆளுகிறான்

1. படத்தில், சவுக்குடன் நிற்கிற ஆள் யார், அவன் யாரை அடிக்கிறான்?

2. யோசேப்பு இறந்த பிறகு இஸ்ரவேலருக்கு என்ன ஆனது?

3. இஸ்ரவேலரை நினைத்து எகிப்தியர் ஏன் பயந்தார்கள்?

4. இஸ்ரவேல் தாய்மார்களுக்குப் பிரசவம் பார்க்கும் பெண்களிடம் பார்வோன் என்ன சொன்னான்?

கூடுதல் கேள்விகள்:

1. யாத்திராகமம் 1:6-22-ஐ வாசி.

(அ) ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்கை எவ்வழியில் யெகோவா நிறைவேற்ற ஆரம்பித்தார்? (யாத். 1:7; ஆதி. 12:2; அப். 7:17)

(ஆ) உயிரின் பரிசுத்தத்தன்மைக்கு அந்த எபிரெய மருத்துவச்சிகள் எப்படி மதிப்பு காட்டினார்கள்? (யாத். 1:17; ஆதி. 9:6)

(இ) யெகோவாவுக்கு உண்மையோடிருந்ததால் இந்த மருத்துவச்சிகள் எப்படி ஆசீர்வதிக்கப்பட்டார்கள்? (யாத். 1:20, 21; நீதி. 19:17)

(ஈ) ஆபிரகாமின் வாக்குப்பண்ணப்பட்ட வித்து சம்பந்தமான யெகோவாவின் நோக்கத்தைக் குலைத்துப் போட சாத்தான் எப்படி முயன்றான்? (யாத். 1:22; மத். 2:16)

கதை 28

குழந்தை மோசே காப்பாற்றப்பட்ட விதம்

1. படத்தில் பார்க்கிற குழந்தை யார், அது யாருடைய விரலைப் பிடித்துக் கொண்டிருக்கிறது?

2. மோசேயின் அம்மா தன் குழந்தையை எகிப்தியர் கொன்று போடாமல் இருப்பதற்கு என்ன செய்தாள்?

3. படத்திலுள்ள சிறு பெண் யார், அவள் என்ன செய்தாள்?

4. இக்குழந்தை பார்வோனின் மகளுடைய கண்ணில் பட்டதும், மிரியாம் என்ன சொன்னாள்?

5. மோசேயின் அம்மாவிடம் அந்த இளவரசி என்ன சொன்னாள்?

கூடுதல் கேள்வி:

1. யாத்திராகமம் 2:1-10-ஐ வாசி.

குழந்தையாக இருக்கையிலேயே மோசேக்கு பயிற்சி அளித்து கற்பிக்க அவருடைய அம்மாவுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது, இன்று பெற்றோருக்கு இது என்ன முன்மாதிரியை வைக்கிறது? (யாத். 2:9, 10; உபா. 6:6-9; நீதி. 22:6; எபே. 6:4; 2 தீ. 3:15)

கதை 29

மோசே ஏன் ஓடிப்போனார்

1. மோசே எங்கு வளர்ந்தார், தன்னுடைய சொந்த அப்பா, அம்மாவைப் பற்றி அவர் என்ன அறிந்திருந்தார்?

2. மோசேக்கு 40 வயதிருக்கும்போது அவர் என்ன செய்தார்?

3. சண்டை போட்டுக் கொண்டிருந்த ஓர் இஸ்ரவேலனிடம் மோசே என்ன சொன்னார், அதற்கு அந்த ஆள் என்ன கேட்டான்?

4. மோசே எகிப்தை விட்டு ஏன் ஓடிப்போனார்?

5. மோசே எங்கு ஓடிப்போனார், அங்கு யாரைச் சந்தித்தார்?

6. எகிப்திலிருந்து ஓடிப்போன பிறகு 40 வருஷம் அவர் என்ன செய்தார்?

கூடுதல் கேள்விகள்:

1. யாத்திராகமம் 2:11-25-ஐ வாசி.

மோசேக்கு பல வருடங்கள் எகிப்தியரின் ஞானம் கற்பிக்கப்பட்ட போதிலும் யெகோவாவிடமும் அவருடைய ஜனங்களிடமும் எப்படி விசுவாசத்தைக் காட்டினார்? (யாத். 2:11, 12; எபி. 11:24)

2. அப்போஸ்தலர் 7:22-29-ஐ வாசி.

எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை விடுவிக்க மோசே தானாகவே முயன்றதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (அப். 7:23-25; 1 பே. 5:6, 10)

கதை 30

எரிகிற புதர்

1. படத்தில் பார்க்கிற மலையின் பெயர் என்ன?

2. ஆடுகளைக் கூட்டிக்கொண்டு மோசே அந்த மலை வரை போனபோது என்ன அதிசயத்தைப் பார்த்தாரென்று விவரமாகச் சொல்.

3. எரிகிற அந்தப் புதரிலிருந்து வந்த குரல் என்ன சொன்னது, அது யாருடைய குரல்?

4. தமது ஜனத்தை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவர வேண்டுமென கடவுள் சொன்னபோது மோசே என்ன பதிலளித்தார்?

5. தன்னை யார் அனுப்பியது என ஜனங்கள் கேட்டால் என்ன சொல்லும்படி மோசேயிடம் கடவுள் சொன்னார்?

6. கடவுளே தன்னை அனுப்பினார் என்பதை மோசே எப்படி நிரூபித்துக் காட்டுவார்?

கூடுதல் கேள்விகள்:

1. யாத்திராகமம் 3:1-22-ஐ வாசி.

கடவுளுடைய அமைப்பில் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு நாம் தகுதியற்றவர்களாக உணர்ந்தாலும்கூட யெகோவா நமக்குப் பக்கபலமாக இருப்பார் என்பதற்கு மோசேயின் அனுபவம் எப்படி உறுதியளிக்கிறது? (யாத். 3:11, 13; 2 கொ. 3:5, 6)

2. யாத்திராகமம் 4:1-20-ஐ வாசி.

(அ) மீதியான் தேசத்தில் 40 வருடங்களைக் கழித்தபோது மோசேயின் மனநிலையில் என்ன மாற்றம் ஏற்பட்டது, சபையில் சிலாக்கியங்களைப் பெறுவதற்கு முயற்சி செய்பவர்கள் இதிலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (யாத். 2:11, 12; 4:10, 13; மீ. 6:8; 1 தீ. 3:1, 6, 10)

(ஆ) யெகோவாவின் அமைப்பு மூலம் நாம் சிட்சிக்கப்பட்டாலும்கூட மோசேயின் உதாரணம் நமக்கு என்ன நம்பிக்கையை அளிக்கிறது? (யாத். 4:12-14; சங். 103:14; எபி. 12:4-11)

கதை 31

மோசேயும் ஆரோனும் பார்வோனை சந்திக்கிறார்கள்

1. மோசேயும் ஆரோனும் அற்புதங்களைச் செய்தபோது இஸ்ரவேலர் எதை நம்பினார்கள்?

2. மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் என்ன சொன்னார்கள், அதற்கு பார்வோன் என்ன பதிலளித்தான்?

3. படத்தில் பார்க்கிறபடி, ஆரோன் தனது கோலை கீழே போட்டபோது என்ன நடந்தது?

4. பார்வோனுக்கு யெகோவா எப்படிப் பாடம் புகட்டினார், அப்போது பார்வோன் என்ன செய்தான்?

5. பத்தாவது வாதைக்குப் பின் என்ன நடந்தது?

கூடுதல் கேள்விகள்:

1. யாத்திராகமம் 4:27-31; 5:1-23-ஐ வாசி.

என்ன அர்த்தத்தில் ‘நான் யெகோவாவை அறியேன்’ என்று பார்வோன் சொன்னான்? (யாத். 5:2; 1 சா. 2:12; ரோ. 1:21)

2. யாத்திராகமம் 6:1-13, 26-30-ஐ வாசி.

(அ) என்ன அர்த்தத்தில் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் யெகோவா தம்மை தெரியப்படுத்தவில்லை? (யாத். 3:13, 14; 6:3; ஆதி. 12:8)

(ஆ) மோசே தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்வதற்கு தகுதியற்றவராக உணர்ந்தபோதிலும் அவரை யெகோவா பயன்படுத்தியது நம்மை எவ்வாறு உணர வைக்கிறது? (யாத். 6:12, 30; லூக். 21:13-15)

3. யாத்திராகமம் 7:1-13-ஐ வாசி.

(அ) மோசேயும் ஆரோனும் யெகோவாவின் நியாயத்தீர்ப்பு செய்திகளை பார்வோனிடம் தைரியமாகப் பேசியதன் மூலம் இன்று கடவுளுடைய ஊழியர்களுக்கு என்ன மாதிரியை வைத்தார்கள்? (யாத். 7:2, 3, 6; அப். 4:29-31)

(ஆ) எகிப்தியரின் கடவுட்களைவிட தாம் உயர்ந்தவர் என்பதை யெகோவா எப்படிக் காட்டினார்? (யாத். 7:12; 1 நா. 29:12)

கதை 32

10 வாதைகள்

1. எகிப்தில் யெகோவா உண்டாக்கிய முதல் மூன்று வாதைகள் என்னென்ன என்று இந்தப் படங்களைப் பார்த்து சொல்.

2. முதல் மூன்று வாதைகளுக்கும் மற்ற வாதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

3. நான்காவது, ஐந்தாவது, ஆறாவது வாதைகள் என்னென்ன?

4. ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது வாதைகளைப் பற்றி விவரமாகச் சொல்.

5. பத்தாவது வாதைக்கு முன் என்ன செய்யும்படி இஸ்ரவேலரிடம் யெகோவா சொன்னார்?

6. பத்தாவது வாதை என்ன, அதற்குப் பின் என்ன நடந்தது?

கூடுதல் கேள்விகள்:

1. யாத்திராகமம் 7:19–8:23-ஐ வாசி.

(அ) யெகோவா உண்டாக்கிய முதல் இரண்டு வாதைகளை எகிப்தியரின் மந்திரவாதிகளும் உண்டாக்கிய போதிலும் மூன்றாவது வாதைக்குப் பிறகு அவர்கள் எதை ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று? (யாத். 8:18, 19; மத். 12:24-28)

(ஆ) தமது ஜனங்களை யெகோவாவால் பாதுகாக்க முடியும் என்பதை நான்காவது வாதை எப்படி நிரூபித்தது, இதை அறிந்திருப்பது ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ கடவுளுடைய மக்களை எப்படி உணரச் செய்யும்? (யாத். 8:22, 23; வெளி. 7:13, 14; 2 நா. 16:9)

2. யாத்திராகமம் 8:24; 9:3, 6, 10, 11, 14, 16, 23-25; 10:13-15, 21-23-ஐ வாசி.

(அ) இந்தப் பத்து வாதைகள் மூலம் எந்த இரண்டு வர்க்கத்தினர் அம்பலப்படுத்தப்பட்டனர், இன்றுள்ள இந்த வர்க்கத்தினரைப் பற்றிய நம் எண்ணத்தை இது எவ்வாறு பாதிக்கிறது? (யாத். 8:10, 18, 19; 9:14)

(ஆ) சாத்தானை ஏன் இன்றுவரை யெகோவா அனுமதித்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள யாத்திராகமம் 9:16 நமக்கு எவ்வாறு உதவுகிறது? (ரோ. 9:21, 22)

3. யாத்திராகமம் 12:21-32-ஐ வாசி.

பஸ்கா எவ்வாறு அநேகருக்கு இரட்சிப்பை அளித்தது, அந்தப் பஸ்கா யாரைக் குறித்தது? (யாத். 12:21-23; யோவா. 1:29; ரோ. 5:18, 19, 21; 1 கொ. 5:7)

கதை 33

செங்கடலைக் கடந்து செல்லுதல்

1. பெண்கள், பிள்ளைகளோடுகூட எத்தனை இஸ்ரவேல் ஆண்கள் எகிப்தை விட்டு வெளியேறினார்கள், அவர்களோடு சேர்ந்து வேறு யாரும் வெளியேறினார்கள்?

2. இஸ்ரவேலரைப் போகவிட்ட பின் பார்வோன் என்ன நினைத்தான், அதனால் அவன் என்ன செய்தான்?

3. தம்முடைய ஜனங்களை எகிப்தியர் தாக்காமல் இருக்க யெகோவா என்ன செய்தார்?

4. மோசே தன்னுடைய கோலை செங்கடலின் மேல் நீட்டியதும் என்ன நடந்தது, அப்போது இஸ்ரவேலர் என்ன செய்தார்கள்?

5. இஸ்ரவேலரைப் பிடிக்க எகிப்தியர் கடலுக்குள் வேகமாய்ப் பாய்ந்ததும் என்ன நடந்தது?

6. தப்பிப்பிழைத்ததற்கான சந்தோஷத்தையும் நன்றியையும் யெகோவாவுக்கு இஸ்ரவேலர் எப்படிக் காட்டினர்?

கூடுதல் கேள்விகள்:

1. யாத்திராகமம் 12:33-36-ஐ வாசி.

தம்முடைய ஜனங்கள் எகிப்தியரின் கீழ் அடிமைகளாகப் பட்ட பாடுகளுக்கெல்லாம் பலன் கிடைக்கும்படி யெகோவா எப்படிப் பார்த்துக்கொண்டார்? (யாத். 3:21, 22; 12:35, 36)

2. யாத்திராகமம் 14:1-31-ஐ வாசி.

யாத்திராகமம் 14:13, 14-ல் உள்ள மோசேயின் வார்த்தைகள், வரவிருக்கும் அர்மகெதோன் யுத்தத்தை எதிர்கொள்ள இன்று யெகோவாவின் ஊழியர்களுக்கு எப்படி உதவுகின்றன? (2 நா. 20:17; சங். 91:8)

3. யாத்திராகமம் 15:1-8, 20, 21-ஐ வாசி.

(அ) யெகோவாவின் ஊழியர்கள் ஏன் அவரைப் புகழ்ந்து பாட வேண்டும்? (யாத். 15:1, 2; சங். 105:2, 3; வெளி. 15:3, 4)

(ஆ) யெகோவாவைப் புகழ்ந்து பாடுவதில் மிரியாமும், மற்ற பெண்களும் இன்று கிறிஸ்தவப் பெண்களுக்கு என்ன முன்மாதிரி வைத்தார்கள்? (யாத். 15:20, 21; சங். 68:11, NW)

கதை 34

புது விதமான உணவு

1. படத்தில், அந்த மக்கள் தரையிலிருந்து எதை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், அதன் பெயர் என்ன?

2. மன்னாவை எடுப்பது சம்பந்தமாக ஜனங்களிடம் மோசே என்ன சொல்கிறார்?

3. ஆறாவது நாளில் என்ன செய்யும்படி ஜனங்களிடம் யெகோவா சொல்கிறார், ஏன்?

4. ஏழாம் நாளுக்காக மன்னாவைச் சேர்த்து வைக்கும்போது யெகோவா என்ன அற்புதத்தைச் செய்கிறார்?

5. எவ்வளவு காலம் மன்னாவை உணவாக ஜனங்களுக்கு யெகோவா அளிக்கிறார்?

கூடுதல் கேள்விகள்:

1. யாத்திராகமம் 16:1-36; எண்ணாகமம் 11:7-9-ஐ வாசி.

(அ) கிறிஸ்தவ சபையில் பொறுப்புகளைக் கவனிப்போருக்கு மதிப்பு கொடுப்பது சம்பந்தமாக யாத்திராகமம் 16:8 என்ன சொல்கிறது? (எபி. 13:17)

(ஆ) யெகோவாவைச் சார்ந்திருப்பதன் அவசியம் வனாந்தரத்திலிருந்த இஸ்ரவேலருக்கு எப்படித் தினம் தினம் நினைப்பூட்டப்பட்டது? (யாத். 16:14-16, 35; உபா. 8:2, 3)

(இ) அந்த மன்னா அடையாள அர்த்தத்தில் யாரைக் குறிப்பதாக இயேசு சொன்னார், ‘வானத்திலிருந்து வந்த அந்த அப்பத்திலிருந்து’ நாம் எப்படி நன்மையடைகிறோம்? (யோவா. 6:31-35, 40)

2. யோசுவா 5:10-12-ஐ வாசி.

இஸ்ரவேலர் எத்தனை ஆண்டுகள் மன்னாவைச் சாப்பிட்டனர், இது எப்படி அவர்களுக்கு ஒரு பரீட்சையாக இருந்தது, இந்த விஷயத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (யாத் 16:35; எண். 11:4-6; 1 கொ. 10:10, 11)

கதை 35

யெகோவா சட்டங்களைக் கொடுக்கிறார்

1. எகிப்தைவிட்டு வெளியேறி ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு இஸ்ரவேலர் எங்குக் கூடாரம் போடுகிறார்கள்?

2. ஜனங்கள் என்ன செய்ய வேண்டுமென்று தாம் விரும்புவதாக யெகோவா சொல்கிறார், அதற்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

3. யெகோவா ஏன் இரண்டு தட்டையான கற்களை மோசேயிடம் கொடுக்கிறார்?

4. பத்துக் கட்டளைகளைத் தவிர வேறு என்ன சட்டங்களையும் இஸ்ரவேலருக்கு யெகோவா கொடுக்கிறார்?

5. என்ன இரண்டு சட்டங்களை மிகப் பெரிய சட்டங்கள் என்று இயேசு கிறிஸ்து சொன்னார்?

கூடுதல் கேள்விகள்:

1. யாத்திராகமம் 19:1-25; 20:1-21; 24:12-18; 31:18-ஐ வாசி.

யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பதில் என்னென்ன காரியங்கள் உட்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள யாத்திராகமம் 19:8 எவ்வாறு நமக்கு உதவுகிறது? (மத். 16:24; 1 பே. 4:1-3)

2. உபாகமம் 6:4-6; லேவியராகமம் 19:18; மத்தேயு 22:36-40-ஐ வாசி.

கடவுளையும் அயலாரையும் நேசிப்பதைக் கிறிஸ்தவர்கள் எப்படிக் காட்டுகிறார்கள்? (மாற். 6:34; அப். 4:20; ரோ. 15:2)

கதை 36

பொன் கன்றுக்குட்டி

1. படத்தில் ஜனங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், ஏன்?

2. யெகோவா ஏன் கோபமடைகிறார், ஜனங்கள் செய்யும் காரியத்தைப் பார்த்ததும் மோசே என்ன செய்கிறார்?

3. அந்த ஆட்கள் சிலரிடம் என்ன செய்யும்படி மோசே சொல்கிறார்?

4. இந்தக் கதையிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்?

கூடுதல் கேள்விகள்:

1. யாத்திராகமம் 32:1-35-ஐ வாசி.

(அ) மெய் வணக்கத்தோடு பொய் வணக்கத்தைக் கலப்பது பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என இந்தப் பதிவு காட்டுகிறது? (யாத். 32:4-6, 10; 1 கொ. 10:7, 11)

(ஆ) இசை, நடனம் போன்ற பொழுதுபோக்குகளைத் தேர்ந்தெடுப்பதில் கிறிஸ்தவர்கள் எப்படிக் கவனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்? (யாத். 32:18, 19; எபே. 5:15, 16; 1 யோ. 2:15-17)

(இ) நீதியின் பக்கம் நிற்பதில் லேவி கோத்திரத்தார் எப்படி ஒரு சிறந்த முன்மாதிரி வைத்தார்கள்? (யாத். 32:25-28; சங். 18:25)

கதை 37

வணக்கத்திற்காக ஒரு கூடாரம்

1. படத்திலுள்ள கட்டிடம் எப்படி அழைக்கப்படுகிறது, இது எதற்காக பயன்படுத்தப்பட்டது?

2. இந்தக் கூடாரத்தை எளிதில் பிரிக்க முடிகிற விதத்தில் கட்டும்படி யெகோவா ஏன் மோசேயிடம் சொன்னார்?

3. கூடாரத்தின் கடைசியிலுள்ள அந்தச் சிறிய அறையில் வைக்கப்பட்டுள்ள பெட்டி என்ன, அந்தப் பெட்டிக்குள் என்னென்ன வைக்கப்பட்டிருக்கின்றன?

4. யாரைப் பிரதான ஆசாரியனாக யெகோவா தேர்ந்தெடுக்கிறார், இவர் என்ன உதவி செய்கிறார்?

5. அந்தக் கூடாரத்தின் பெரிய அறையில் இருக்கிற மூன்று பொருட்கள் என்னென்ன என்று சொல்.

6. ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் இருக்கிற இரண்டு பொருட்கள் யாவை, அவை எதற்காக பயன்படுத்தப்படுகின்றன?

கூடுதல் கேள்விகள்:

1. யாத்திராகமம் 25:8-40; 26:1-37, 27:1-8; 28:1-ஐ வாசி.

“சாட்சிப் பெட்டியின்” மீதிருந்த கேருபீன்கள் எதற்கு அடையாளமாக இருந்தன? (யாத். 25:20, 22; எண். 7:89; 2 இரா. 19:15)

2. யாத்திராகமம் 30:1-10, 17-21; 34:1, 2; எபிரெயர் 9:1-5-ஐ வாசி.

(அ) ஆசரிப்புக் கூடாரத்தில் சேவை செய்யும் ஆசாரியர்கள் தங்களுடைய சரீரத்தைச் சுத்தமாக வைப்பதன் முக்கியத்துவத்தை யெகோவா ஏன் வலியுறுத்தினார், இன்று இந்தப் பதிவு நம்மை எவ்விதமாக வைத்துக்கொள்ள தூண்ட வேண்டும்? (யாத். 30:18-21; 40:30, 31; எபி. 10:22)

(ஆ) எபிரெய கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் கடிதம் எழுதிய சமயத்தில் ஆசரிப்புக் கூடாரமும் நியாயப்பிரமாணமும் நடைமுறையில் இல்லாதிருந்ததை அவர் எப்படிக் காட்டுகிறார்? (எபி. 9:1, 9; 10:1)

கதை 38

12 வேவுகாரர்கள்

1. படத்திலுள்ள திராட்சக்குலை எப்படி இருக்கிறது, இதை எங்கிருந்து கொண்டு வந்திருக்கிறார்கள்?

2. மோசே 12 வேவுகாரர்களை ஏன் கானானுக்கு அனுப்புகிறார்?

3. திரும்பி வந்த பத்து வேவுகாரர்கள் மோசேயிடம் என்ன சொல்கிறார்கள்?

4. யெகோவாவில் நம்பிக்கை வைத்திருப்பதை இரண்டு வேவுகாரர்கள் எப்படிக் காட்டுகிறார்கள், அவர்களுடைய பெயர் என்ன?

5. யெகோவா ஏன் கோபமடைகிறார், அதனால் மோசேயிடம் என்ன சொல்கிறார்?

கூடுதல் கேள்விகள்:

1. எண்ணாகமம் 13:1-33-ஐ வாசி.

(அ) தேசத்தை வேவு பார்க்க யாரெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், அவர்களுக்கு எப்படிப்பட்ட பெரிய சிலாக்கியம் இருந்தது? (எண். 13:2, 3, 18-20)

(ஆ) யோசுவா மற்றும் காலேபின் கண்ணோட்டம் மற்ற வேவுகாரர்களின் கண்ணோட்டத்திலிருந்து ஏன் வித்தியாசப்பட்டதாக இருந்தது, இது நமக்கு எதைக் கற்பிக்கிறது? (எண். 13:28-30; மத். 17:20; 2 கொ. 5:7)

2. எண்ணாகமம் 14:1-38-ஐ வாசி.

(அ) யெகோவாவின் பூமிக்குரிய பிரதிநிதிகளுக்கு எதிராக முறுமுறுக்காதபடி நாம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? (எண். 14:2, 3, 27; மத். 25:40, 45; 1கொ. 10:10)

(ஆ) தம்முடைய ஊழியர்கள் ஒவ்வொருவர் மீதும் யெகோவாவுக்கு அக்கறை இருக்கிறது என்பதை எண்ணாகமம் 14:24 எப்படிக் காட்டுகிறது? (1 இரா. 19:18; நீதி. 15:3)

கதை 39

ஆரோனுடைய கோல் பூ பூக்கிறது

1. மோசே மற்றும் ஆரோனின் அதிகாரத்திற்கு விரோதமாக யார் கலகம் செய்கிறார்கள், அவர்கள் மோசேயிடம் என்ன சொல்கிறார்கள்?

2. கோராகிடமும் அவனைப் பின்பற்றுகிற 250 பேரிடமும் மோசே என்ன சொல்கிறார்?

3. ஜனங்களிடம் மோசே என்ன சொல்கிறார், அவர் பேசி முடித்ததும் என்ன நடக்கிறது?

4. கோராகுவுக்கும் அவனைப் பின்பற்றுகிற 250 பேருக்கும் என்ன நடக்கிறது?

5. ஆரோனின் மகன் எலெயாசார், செத்துப்போனவர்களின் தூப கலசங்களை எடுத்து என்ன செய்கிறார், ஏன்?

6. ஆரோனின் கோல் பூ பூக்கும்படி யெகோவா ஏன் செய்தார்? (படத்தைப் பார்.)

கூடுதல் கேள்விகள்:

1. எண்ணாகமம் 16:1-49-ஐ வாசி.

(அ) கோராகுவும் அவனைப் பின்பற்றியவர்களும் என்ன செய்தார்கள், இது ஏன் யெகோவாவுக்கு எதிரான கலகமாக இருந்தது? (எண். 16:9, 10, 18; லேவி. 10:1, 2; நீதி. 11:2)

(ஆ) கோராகுவும் ‘சபைக்குத் தலைவர்களாகிய இருநூற்று ஐம்பது பேரும்’ என்ன தவறான மனப்பான்மையை வளர்த்திருந்தார்கள்? (எண். 16:1-3; நீதி. 15:33; ஏசா. 49:7)

2. எண்ணாகமம் 17:1-11; 26:10-ஐ வாசி.

(அ) ஆரோனின் கோல் பூ பூத்தது எதை அடையாளம் காட்டியது, அதை ஏன் உடன்படிக்கைப் பெட்டிக்குள் வைக்கும்படி யெகோவா சொன்னார்? (எண். 17:5, 8, 10; எபி. 9:4)

(ஆ) ஆரோனுடைய கோல் அடையாளம் காட்டியது நமக்கு என்ன முக்கிய பாடத்தைக் கற்பிக்கிறது? (எண். 17:10; அப். 20:28; பிலி. 2:14; எபி. 13:17)

கதை 40

மோசே கற்பாறையை அடிக்கிறார்

1. இஸ்ரவேலர் வனாந்தரத்தில் இருக்கும்போது அவர்களை யெகோவா எப்படிக் காத்து வருகிறார்?

2. காதேசில் கூடாரம் போட்டிருக்கையில் இஸ்ரவேலர் எதற்காக முறுமுறுக்கிறார்கள்?

3. ஜனங்களுக்கும் அவர்களுடைய மிருகங்களுக்கும் யெகோவா எப்படித் தண்ணீர் கொடுக்கிறார்?

4. படத்தில், தன்னைத்தானே சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பவர் யார், அவர் ஏன் அப்படிச் சுட்டிக்காட்டுகிறார்?

5. மோசேயையும் ஆரோனையும் பார்த்து யெகோவா ஏன் கோபப்படுகிறார், அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார்?

6. ஓர் என்ற மலையில் என்ன சம்பவிக்கிறது, இஸ்ரவேலரின் அடுத்த பிரதான ஆசாரியனாக ஆகிறவர் யார்?

கூடுதல் கேள்விகள்:

1. எண்ணாகமம் 20:1-13, 22-29; உபாகமம் 29:5-ஐ வாசி.

(அ) வனாந்தரத்தில் இஸ்ரவேலரை யெகோவா கவனித்து வந்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (உபா. 29:5; மத். 6:31; எபி. 13:5; யாக். 1:17)

(ஆ) மோசேயும் ஆரோனும் தம்மை இஸ்ரவேலருக்கு முன்பாக பரிசுத்தப்படுத்தாமல் போனதை யெகோவா எப்படிக் கருதினார்? (எண். 20:12; 1 கொ. 10:12; வெளி. 4:11)

(இ) யெகோவா கொடுத்த தண்டனைக்கு மோசே பிரதிபலித்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (எண். 12:3; 20:12, 27, 28; உபா. 32:4; எபி. 12:7-11)

கதை 41

வெண்கலப் பாம்பு

1. படத்தில் அந்தக் கம்பத்தைச் சுற்றிக்கொண்டிருப்பது என்ன, அதைக் கம்பத்தில் வைக்கும்படி மோசேயிடம் யெகோவா ஏன் சொன்னார்?

2. கடவுள் எத்தனையோ நல்ல காரியங்களைச் செய்திருந்த போதிலும் ஜனங்கள் எப்படி நன்றிகெட்டவர்களாக நடந்துகொள்கிறார்கள்?

3. ஜனங்களைத் தண்டிப்பதற்காக விஷப் பாம்புகளை யெகோவா அனுப்பிய பிறகு மோசேயிடம் அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

4. ஒரு வெண்கலப் பாம்பை உண்டாக்கும்படி மோசேயிடம் யெகோவா ஏன் சொல்கிறார்?

5. இந்தக் கதையிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?

கூடுதல் கேள்விகள்:

1. எண்ணாகமம் 21:4-9-ஐ வாசி.

(அ) யெகோவா செய்த ஏற்பாடுகளுக்கு எதிராக இஸ்ரவேலர் முறையிட்டது நமக்கு எப்படி எச்சரிக்கையாக அமைகிறது? (எண். 21:5, 6; ரோ. 2:4)

(ஆ) பிற்பட்ட நூற்றாண்டுகளில் இந்த வெண்கலப் பாம்பை இஸ்ரவேலர் எதற்காக பயன்படுத்தினர், எசேக்கியா ராஜா என்ன நடவடிக்கை எடுத்தார்? (எண். 21:9; 2 இரா. 18:1-4)

2. யோவான் 3:14, 15-ஐ வாசி.

வெண்கலப் பாம்பை ஒரு கம்பத்தில் வைத்தது இயேசு கிறிஸ்துவை கழுமரத்தில் ஏற்றியதற்கு எப்படி ஒரு படமாக இருந்தது? (கலா. 3:13; 1 பே. 2:24)

கதை 42

ஒரு கழுதை பேசுகிறது

1. பாலாக் யார், அவன் ஏன் பிலேயாமை அழைக்கிறான்?

2. பிலேயாமின் கழுதை ஏன் வழியில் படுத்துவிடுகிறது?

3. பிலேயாமிடம் அந்தக் கழுதை என்ன சொல்கிறது?

4. பிலேயாமிடம் ஒரு தேவதூதன் என்ன சொல்கிறார்?

5. இஸ்ரவேலரைச் சபிக்க பிலேயாம் முயலுகிற போதிலும் அவன் என்ன செய்து விடுகிறான்?

கூடுதல் கேள்விகள்:

1. எண்ணாகமம் 21:21-35-ஐ வாசி.

எமோரியரின் ராஜாவான சீகோனையும் பாசானின் ராஜாவான ஓக்கையும் இஸ்ரவேலர் ஏன் முறியடித்தார்கள்? (எண். 21:21, 23, 33, 34)

2. எண்ணாகமம் 22:1-40-ஐ வாசி.

இஸ்ரவேலரை பிலேயாம் சபிக்க முயன்றதற்குக் காரணம் என்ன, இதிலிருந்து என்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்? (எண். 22:16, 17; நீதி. 6:16, 18; 2 பே. 2:15; யூ. 11)

3. எண்ணாகமம் 23:1-30-ஐ வாசி.

பிலேயாம் யெகோவாவை வணங்குபவன் போல் பேசினாலும் அவனுடைய செயல்கள் எப்படி வித்தியாசமாக இருந்தன? (எண். 23:3, 11-14; 1 சா. 15:22)

4. எண்ணாகமம் 24:1-25-ஐ வாசி.

யெகோவாவின் நோக்கம் நிறைவேறுமென்ற நம் விசுவாசத்தை இந்த பைபிள் சம்பவம் எப்படிப் பலப்படுத்துகிறது? (எண். 24:10; ஏசா. 54:17)

கதை 43

யோசுவா தலைவர் ஆகிறார்

1. படத்தில் மோசேயுடன் நிற்கும் இரண்டு பேர் யார்?

2. யோசுவாவிடம் யெகோவா என்ன சொல்கிறார்?

3. நேபோ மலை மீது மோசே ஏன் ஏறிப்போகிறார், அங்கே அவரிடம் யெகோவா என்ன சொல்கிறார்?

4. மோசே மரிக்கும்போது அவருக்கு எத்தனை வயது?

5. ஜனங்கள் ஏன் விசனப்பட்டு அழுகிறார்கள், என்றாலும் அவர்கள் ஏன் பிறகு சந்தோஷப்படுகிறார்கள்?

கூடுதல் கேள்விகள்:

1. எண்ணாகமம் 27:12-23-ஐ வாசி.

யெகோவாவிடமிருந்து யோசுவா என்ன முக்கிய வேலையைப் பெற்றுக்கொண்டார், இன்று தம் மக்களை யெகோவா எப்படிக் கவனித்து வருகிறார்? (எண். 27:15-19; அப். 20:28; எபி. 13:7)

2. உபாகமம் 3:23-29-ஐ வாசி.

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் மோசேயையும் ஆரோனையும் யெகோவா ஏன் அனுமதிக்கவில்லை, இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (உபா. 3:25-27; எண். 20:12, 13)

3. உபாகமம் 31:1-8, 14-23-ஐ வாசி.

யெகோவா கொடுத்த தண்டனையை மோசே தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார் என்பதை மரிப்பதற்கு முன் இஸ்ரவேலரிடம் அவர் சொன்ன என்ன வார்த்தைகள் காட்டுகின்றன? (உபா. 31:6-8, 23)

4. உபாகமம் 32:45-52-ஐ வாசி.

கடவுளுடைய வார்த்தை நம் வாழ்க்கையை எப்படிப் பாதிக்க வேண்டும்? (உபா. 32:47; லேவி. 16:5; எபி. 4:2)

5. உபாகமம் 34:1-12-ஐ வாசி.

யெகோவாவை மோசே நேருக்கு நேர் பார்க்காவிட்டாலும், இருவருக்கும் இடையே இருந்த பந்தத்தைப் பற்றி உபாகமம் 34:12 என்ன சொல்கிறது? (யாத். 33:11, 20; எண். 12:8)

கதை 44

வேவுகாரர்களை ராகாப் ஒளித்து வைக்கிறாள்

1. ராகாப் எங்கு வசிக்கிறாள்?

2. படத்தில் பார்க்கிற இரண்டு ஆண்கள் யார், அவர்கள் ஏன் எரிகோவுக்கு வந்திருக்கிறார்கள்?

3. ராகாபுக்கு எரிகோவின் ராஜா என்ன கட்டளையிடுகிறான், ஆனால், அவள் என்ன பதிலளிக்கிறாள்?

4. அந்த இரண்டு ஆட்களுக்கும் ராகாப் எப்படி உதவி செய்கிறாள், தனக்கு எந்த விதத்தில் தயவு காட்டும்படி அவள் கேட்கிறாள்?

5. அந்த இரண்டு வேவுகாரர்கள் ராகாபுக்கு என்ன வாக்குக் கொடுக்கிறார்கள்?

கூடுதல் கேள்விகள்:

1. யோசுவா 2:1-24-ஐ வாசி.

எரிகோவுக்கு விரோதமாக இஸ்ரவேலர் சென்றபோது யாத்திராகமம் 23:27-⁠ல் உள்ள யெகோவாவின் வாக்குறுதி எப்படி நிறைவேறியது? (யோசு. 2:9-11)

2. எபிரெயர் 11:31-ஐ வாசி.

விசுவாசத்தின் முக்கியத்துவத்தை ராகாபின் உதாரணம் எப்படிச் சிறப்பித்துக் காட்டுகிறது? (ரோ. 1:17; எபி. 10:39; யாக். 2:25)

கதை 45

யோர்தான் நதியைக் கடந்து செல்லுதல்

1. இஸ்ரவேலர் யோர்தான் நதியைக் கடப்பதற்காக யெகோவா என்ன அற்புதத்தைச் செய்கிறார்?

2. இஸ்ரவேலர் யோர்தான் நதியைக் கடப்பதற்குத் தங்களுடைய விசுவாசத்தின் அடையாளமாக என்ன செய்ய வேண்டியிருக்கிறது?

3. நதியின் தரையிலிருந்து 12 பெரிய கற்களை எடுத்து வரும்படி யோசுவாவிடம் யெகோவா ஏன் சொல்கிறார்?

4. ஆசாரியர்கள் யோர்தானை விட்டு வெளியே வந்ததும் என்ன நடக்கிறது?

கூடுதல் கேள்விகள்:

1. யோசுவா 3:1-17-ஐ வாசி.

(அ) இந்தப் பதிவில் விளக்கப்பட்டுள்ளபடி, யெகோவாவின் உதவியையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (யோசு. 3:13, 15; நீதி. 3:5; யாக். 2:22, 26)

(ஆ) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு இஸ்ரவேலர் கடக்கும் சமயத்தில் யோர்தான் நதி எப்படி இருந்தது, அது யெகோவாவின் பெயரை எப்படி மகிமைப்படுத்தியது? (யோசு. 3:15; 4:18; சங். 66:5-7)

2. யோசுவா 4:1-18-ஐ வாசி.

யோர்தானிலிருந்து எடுத்து கில்காலில் வைக்கப்பட்ட அந்த 12 கற்கள் எதற்கு அடையாளமாக இருந்தன? (யோசு. 4:4-7)

கதை 46

எரிகோவின் மதில்கள்

1. போர் வீரர்களையும் ஆசாரியர்களையும் ஆறு நாட்களுக்கு என்ன செய்யும்படி யெகோவா சொல்கிறார்?

2. ஏழாம் நாள் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

3. படத்தில் பார்க்கிறபடி எரிகோவின் மதில்கள் என்ன ஆகின்றன?

4. அங்கே ஜன்னலிலிருந்து ஒரு சிவப்பு நிற கயிறு ஏன் தொங்கிக் கொண்டிருக்கிறது?

5. அந்த ஜனங்களையும் பட்டணத்தையும் என்ன செய்யும்படி போர் வீரர்களிடம் யோசுவா சொல்கிறார், ஆனால் வெள்ளி, பொன், செம்பு, இரும்பு ஆகியவற்றை அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

6. அந்த இரண்டு வேவுகாரர்களிடம் யோசுவா என்ன சொல்கிறார்?

கூடுதல் கேள்விகள்:

1. யோசுவா 6:1-25-ஐ வாசி.

(அ) ஏழாம் நாள் இஸ்ரவேலர் எரிகோவைச் சுற்றி வந்தது, இந்தக் கடைசி நாட்களில் யெகோவாவின் சாட்சிகள் செய்யும் பிரசங்க வேலைக்கு எப்படி இணையாக இருக்கிறது? (யோசு. 6:15, 16; ஏசா. 60:22; மத். 24:14; 1 கொ. 9:16)

(ஆ) யோசுவா 6:26-ல் உள்ள தீர்க்கதரிசனம் சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வாறு நிறைவேறியது, இது யெகோவாவின் வார்த்தையைக் குறித்து நமக்கு எதைக் கற்பிக்கிறது? (1 இரா. 16:34; ஏசா. 55:11)

கதை 47

இஸ்ரவேலில் ஒரு திருடன்

1. படத்தில், எரிகோவிலிருந்து எடுத்த பொருட்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறவன் யார், இவனுக்கு உதவி செய்து கொண்டிருப்பவர்கள் யார்?

2. ஆகானும் அவனுடைய குடும்பத்தாரும் செய்தது ஏன் படுமோசமான காரியம்?

3. ஆயி பட்டணத்தாருடன் செய்த போரில் இஸ்ரவேலர் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணத்தை யோசுவா கேட்கும்போது யெகோவா என்ன சொல்கிறார்?

4. ஆகானும் அவனுடைய குடும்பத்தாரும் யோசுவாவுக்கு முன் நிறுத்தப்பட்டபோது என்ன நடக்கிறது?

5. ஆகானுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்ன முக்கிய பாடத்தைக் கற்பிக்கிறது?

கூடுதல் கேள்விகள்:

1. யோசுவா 7:1-26-ஐ வாசி.

(அ) படைப்பாளருக்கும் தனக்கும் இருந்த பந்தத்தைப் பற்றி யோசுவா செய்த ஜெபங்கள் என்ன தெரிவிக்கின்றன? (யோசு. 7:7-9; சங். 119:145; 1 யோ. 5:14)

(ஆ) ஆகானின் உதாரணம் என்ன காட்டுகிறது, இது எப்படி நமக்கு ஓர் எச்சரிப்பாக இருக்கிறது? (யோசு. 7:11, 14, 15; நீதி. 15:3; 1 தீ. 5:24; எபி. 4:13)

2. யோசுவா 8:1-29-ஐ வாசி.

இன்று கிறிஸ்தவ சபையில் நம் ஒவ்வொருவருக்கும் என்ன பொறுப்பு உள்ளது? (யோசு. 7:13; லேவி. 5:1; நீதி. 28:13)

கதை 48

விவேகமுள்ள கிபியோனியர்

1. கிபியோனியர் எப்படி அருகிலுள்ள மற்ற கானானிய பட்டணத்தாரிலிருந்து வித்தியாசப்பட்டவர்களாய் இருக்கிறார்கள்?

2. படத்தில் காட்டப்பட்டுள்ளபடி கிபியோனியர் என்ன செய்கிறார்கள், ஏன்?

3. யோசுவாவும் இஸ்ரவேல் தலைவர்களும் கிபியோனியரிடம் என்ன வாக்குக் கொடுக்கிறார்கள், ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு என்ன தெரிய வருகிறது?

4. கிபியோனியர் இஸ்ரவேலரோடு சமாதானம் செய்துகொண்டதை மற்ற பட்டணத்து ராஜாக்கள் கேள்விப்படும்போது என்ன நடக்கிறது?

கூடுதல் கேள்விகள்:

1. யோசுவா 9:1-27-ஐ வாசி.

(அ) ‘தேசத்தின் குடிகளையெல்லாம் அழிக்க’ யெகோவா கட்டளையிட்டிருந்த போதிலும், கிபியோனியரைக் காப்பாற்றியது அவருடைய என்ன குணங்களைச் சிறப்பித்துக் காட்டுகிறது? (யோசு. 9:22, 24; மத். 9:13; அப். 10:34, 35; 2 பே. 3:9)

(ஆ) கிபியோனியரிடம் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறாதிருந்ததில், இன்று கிறிஸ்தவர்களுக்கு யோசுவா எப்படிச் சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார்? (யோசு. 9:18, 19; மத். 5:37; எபே. 4:25)

2. யோசுவா 10:1-5-ஐ வாசி.

இன்று திரள் கூட்டத்தார் எப்படி கிபியோனியரைப் பின்பற்றுகிறார்கள், அதனால் எதற்கு ஆளாகிறார்கள்? (யோசு. 10:4; சக. 8:23; மத். 25:35-40; வெளி. 12:17)

கதை 49

சூரியன் அசையாமல் நிற்கிறது

1. படத்தில், யோசுவா என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார், ஏன்?

2. யோசுவாவுக்கும் அவருடைய படை வீரர்களுக்கும் யெகோவா எப்படி உதவுகிறார்?

3. எதிரி ராஜாக்கள் எத்தனை பேரை யோசுவா தோற்கடிக்கிறார், அதற்கு எத்தனை வருஷங்கள் ஆகின்றன?

4. கானான் தேசத்தை யோசுவா ஏன் பிரித்துக் கொடுக்கிறார்?

5. யோசுவா மரிக்கும்போது அவருக்கு எத்தனை வயது, பிற்பாடு இஸ்ரவேல் ஜனங்களுக்கு என்ன நடக்கிறது?

கூடுதல் கேள்விகள்:

1. யோசுவா 10:6-15-ஐ வாசி.

இஸ்ரவேலருக்காக சூரியனையும் சந்திரனையும் அசையாமல் நிற்கும்படி யெகோவா செய்தது இன்று நமக்கு என்ன உறுதியை அளிக்கிறது? (யோசு. 10:8, 10, 12, 13; சங். 18:3; நீதி. 18:10)

2. யோசுவா 12:7-24-ஐ வாசி.

கானானில் 31 ராஜாக்களை உண்மையில் முறியடித்தவர் யார், இன்று நமக்கு ஏன் இது முக்கியமாய் இருக்கிறது? (யோசு. 12:7; 24:11-13; உபா. 31:8; லூக். 21:9, 25-28)

3. யோசுவா 14:1-5-ஐ வாசி.

இஸ்ரவேல் கோத்திரத்தாருக்கு தேசம் எவ்வாறு பிரித்துக் கொடுக்கப்பட்டது, பரதீஸில் சுதந்தரமாகக் கிடைக்கும் இடங்களைக் குறித்து இது எதைக் காட்டுகிறது? (யோசு. 14:2; ஏசா. 65:21; எசே. 47:21-23; 1 கொ. 14:33)

4. நியாயாதிபதிகள் 2:8-13-ஐ வாசி.

யோசுவாவைப் போல், இன்று விசுவாச துரோகத்தைத் தடுப்பவர் யார்? (நியா. 2:8, 10, 11; மத். 24:45-47; 2 தெ. 2:3-6; தீத். 1:7-9; வெளி. 1:1; 2:1, 2)

கதை 50

தைரியமுள்ள இரண்டு பெண்கள்

1. நியாயாதிபதிகள் யார், சிலருடைய பெயர்களைச் சொல்.

2. தெபொராளுக்கு என்ன விசேஷித்த சிலாக்கியம் இருக்கிறது, அவள் வேறெதுவும் செய்ய வேண்டியிருக்கிறது?

3. யாபீனும் அவனுடைய படைத்தலைவனான சிசெராவும் இஸ்ரவேலரைப் பயமுறுத்தியபோது, யெகோவாவின் என்ன செய்தியை பாராக்கிடம் தெபொராள் சொல்கிறாள், வெற்றி பெற்ற பெருமை யாருக்குக் கிடைக்கும் என அவள் சொல்கிறாள்?

4. தான் ஒரு தைரியமுள்ள பெண் என்பதை யாகேல் எப்படிக் காட்டுகிறாள்?

5. யாபீன் ராஜா கொல்லப்பட்ட பிறகு என்ன நடக்கிறது?

கூடுதல் கேள்விகள்:

1. நியாயாதிபதிகள் 2:14-22-ஐ வாசி.

யெகோவாவின் கோபத்தை இஸ்ரவேலர் எப்படித் தங்கள் மீது வருவித்து கொண்டார்கள், இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (நியா. 2:20; நீதி. 3:1, 2; எசே. 18:21-23)

2. நியாயாதிபதிகள் 4:1-24-ஐ வாசி.

தெபொராள் மற்றும் யாகேலிடமிருந்து இன்று கிறிஸ்தவப் பெண்கள் விசுவாசத்திற்கும் தைரியத்திற்குமான என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? (நியா. 4:4, 8, 9, 14, 21, 22; நீதி. 31:30; 1 கொ. 16:13)

3. நியாயாதிபதிகள் 5:1-31-ஐ வாசி.

பாராக்கும் தெபொராளும் பாடிய வெற்றிப் பாடல், வரப்போகிற அர்மகெதோன் யுத்தத்தைப் பற்றி செய்யப்படும் ஜெபமாக எப்படிப் பயன்படுத்தப்படலாம்? (நியா. 5:3, 31; 1 நா. 16:8-10; வெளி. 7:9, 10; 16:16; 19:19-21)

கதை 51

ரூத்தும் நகோமியும்

1. மோவாப் தேசத்திற்கு நகோமி செல்வது ஏன்?

2. ரூத், ஒர்பாள் ஆகியோர் யார்?

3. தங்களுடைய ஜனங்களிடத்திற்குப் போகும்படி நகோமி சொல்கையில் ரூத்தும் ஒர்பாளும் என்ன செய்கிறார்கள்?

4. போவாஸ் யார், ரூத்துக்கும் நகோமிக்கும் அவர் எப்படி உதவுகிறார்?

5. போவாஸுக்கும் ரூத்துக்கும் பிறக்கும் பிள்ளையின் பெயர் என்ன, அந்தப் பெயரை நாம் ஏன் ஞாபகத்தில் வைக்க வேண்டும்?

கூடுதல் கேள்விகள்:

1. ரூத் 1:1-17-ஐ வாசி.

(அ) ரூத் தன்னுடைய பற்றுமாறா அன்பை எப்படி அழகாக விவரிக்கிறாள்? (ரூத் 1:16, 17)

(ஆ) இன்று பூமியிலுள்ள அபிஷேகம் பண்ணப்பட்டோரிடம் ‘வேறே ஆடுகள்’ காட்டும் மனப்பான்மையை ரூத்தின் மனப்பான்மை எப்படிப் படம் பிடித்துக் காட்டுகிறது? (யோவா. 10:16; சக. 8:23)

2. ரூத் 2:1-23-ஐ வாசி.

இன்றுள்ள இளம் பெண்களுக்கு ரூத் எப்படிச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறாள்? (ரூத் 2:17, 18; நீதி. 23:22; 31:15)

3. ரூத் 3:5-13-ஐ வாசி.

(அ) ரூத் ஓர் இளைஞனைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பாமல் தன்னைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பியதை போவாஸ் எப்படிக் கருதினார்?

(ஆ) ரூத் வெளிக்காட்டிய மனப்பான்மையிலிருந்து பற்றுமாறா அன்பு பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ரூத் 3:10; 1 கொ. 13:4, 5)

4. ரூத் 4:7-17-ஐ வாசி

இன்று கிறிஸ்தவ ஆண்கள் எப்படி போவாஸைப் போல் இருக்கலாம்? (ரூத் 4:9, 10; 1 தீ. 3:1, 12, 13; 5:8)

கதை 52

கிதியோனும் அவருடைய 300 ஆட்களும்

1. இஸ்ரவேலர் ஏகப்பட்ட பிரச்சினையில் மாட்டிக்கொள்வது எப்படி, ஏன்?

2. கிதியோனின் படையில் அளவுக்கதிகமான ஆட்கள் இருப்பதாக யெகோவா ஏன் சொல்கிறார்?

3. பயப்படுகிற எல்லா ஆட்களையும் வீட்டுக்குப் போய்விடும்படி கிதியோன் சொன்ன பிறகு மீதி எத்தனை பேர் இருக்கிறார்கள்?

4. கிதியோனின் படை ஆட்களை வெறும் 300 பேராக யெகோவா எப்படிக் குறைக்கிறார் என்று படத்தைப் பார்த்துச் சொல்.

5. அந்த 300 பேரை கிதியோன் எப்படி ஒழுங்கமைக்கிறார், யுத்தத்தில் இஸ்ரவேலர் எப்படி வெற்றி பெறுகிறார்கள்?

கூடுதல் கேள்விகள்:

1. நியாயாதிபதிகள் 6:36-40-ஐ வாசி.

(அ) யெகோவாவின் சித்தத்தை கிதியோன் எப்படி உறுதிப்படுத்திக்கொண்டார்?

(ஆ) யெகோவாவின் சித்தம் என்னவென்பதை இன்று நாம் எப்படித் தெரிந்துகொள்கிறோம்? (நீதி. 2:3-6; மத். 7:7-11; 2 தீ. 3:16, 17)

2. நியாயாதிபதிகள் 7:1-25-ஐ வாசி.

(அ) கவனக்குறைவாக இருந்தவர்களைப் போல் அல்லாமல் உஷாராக இருந்த 300 பேரிடமிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (நியா. 7:3, 6; ரோ. 13:11, 12; எபே. 5:15-17)

(ஆ) கிதியோன் செய்ததை அப்படியே பின்பற்றிய 300 பேரைப் போல, பெரிய கிதியோனான இயேசு கிறிஸ்துவை நாம் எப்படிப் பின்பற்றுகிறோம்? (நியா. 7:17; மத். 11:29, 30; 28:19, 20; 1 பே. 2:21)

(இ) யெகோவாவின் அமைப்பில் நமக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் அதில் திருப்தியுடன் சேவை செய்வதற்கு நியாயாதிபதிகள் 7:21 நமக்கு எப்படி உதவுகிறது? (1 கொ. 4:2; 12:14-18; யாக். 4:10)

3. நியாயாதிபதிகள் 8:1-3-ஐ வாசி.

ஒரு சகோதரருடனோ சகோதரியுடனோ ஏற்பட்ட மனஸ்தாபத்தைத் தீர்க்க வேண்டிய சமயத்தில், எப்பிராயீமியரின் வாக்குவாதத்தை கிதியோன் சமாளித்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (நீதி. 15:1; மத். 5:23, 24; லூக். 9:48)

கதை 53

யெப்தா செய்த சத்தியம்

1. யெப்தா யார், அவர் எப்படிப்பட்ட காலத்தில் வாழ்ந்தார்?

2. யெகோவாவிடம் யெப்தா என்ன சத்தியம் செய்கிறார்?

3. அம்மோனியரிடம் வெற்றி பெற்று வீடு திரும்பியதும் யெப்தா ஏன் வேதனையடைகிறார்?

4. யெப்தா செய்த சத்தியத்தைப் பற்றி அறிந்துகொண்ட அவருடைய மகள் என்ன சொல்கிறாள்?

5. யெப்தாவின் மகளை ஜனங்கள் ஏன் நேசிக்கிறார்கள்?

கூடுதல் கேள்விகள்:

1. நியாயாதிபதிகள் 10:6-18-ஐ வாசி.

யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாக நடந்த இஸ்ரவேலரிடமிருந்து நாம் என்ன எச்சரிப்பைப் பெறுகிறோம்? (நியா. 10:6, 15, 16; ரோ. 15:4; வெளி. 2:10)

2. நியாயாதிபதிகள் 11:1-11, 29-40-ஐ வாசி.

(அ) யெப்தா தன் மகளை ‘சர்வாங்க தகனபலியாகக்’ கொடுத்தது ஒரு நரபலியாக தீயில் போடுவதை அர்த்தப்படுத்தவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்? (நியா. 11:31; லேவி. 16:24; உபா. 18:10, 12)

(ஆ) எந்த விதத்தில் யெப்தா தன் மகளை ஒரு பலியாக அளித்தார்?

(இ) யெகோவாவுக்குப் பொருத்தனை செய்த விஷயத்தில் யெப்தா காட்டிய மனப்பான்மையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (நியா. 11:35, 39; பிர. 5:4, 5; மத். 16:24)

(ஈ) முழுநேர ஊழியம் செய்ய விரும்பும் இளம் கிறிஸ்தவர்களுக்கு யெப்தாவின் மகள் எப்படிச் சிறந்த மாதிரியாக இருக்கிறாள்? (நியா. 11:36; மத். 6:33; பிலி. 3:8)

கதை 54

மிகவும் பலமுள்ள மனிதன்

1. இதுவரை வாழ்ந்தவர்களிலேயே மிக மிக பலமுள்ள மனிதனின் பெயர் என்ன, அவருக்கு இத்தனை பலத்தைக் கொடுத்தது யார்?

2. ஒரு சந்தர்ப்பத்தில் சிம்சோன் ஒரு பெரிய சிங்கத்தை என்ன செய்கிறார்? படத்தைப் பார்த்துச் சொல்.

3. படத்தில் பார்க்கிறபடி, தெலீலாளிடம் சிம்சோன் என்ன இரகசியத்தைச் சொல்லி விடுகிறார், அதன் பிறகு பெலிஸ்தர் அவரை எப்படிப் பிடித்துச் செல்கிறார்கள்?

4. விரோதிகளான 3,000 பெலிஸ்தரை சிம்சோன் எப்படிச் சாகடித்துவிட்டு, தானும் சாகிறார்?

கூடுதல் கேள்விகள்:

1. நியாயாதிபதிகள் 13:1-14-ஐ வாசி.

பிள்ளைகளை வளர்ப்பதில் மனோவாவும் அவருடைய மனைவியும் பெற்றோர்களுக்கு என்ன சிறந்த மாதிரியை வைக்கிறார்கள்? (நியா. 13:8; சங். 127:4; எபே. 6:4)

2. நியாயாதிபதிகள் 14:5-9; 15:9-16-ஐ வாசி.

(அ) சிம்சோனைப் பற்றிய பதிவுகள், அதாவது சிங்கத்தைக் கொன்றது, தன்னைக் கட்டியிருந்த புதுக் கயிறுகளை முறித்தது, கழுதையின் தாடை எலும்பினால் 1,000 பேரைக் கொன்றது ஆகிய பதிவுகள் யெகோவாவின் பரிசுத்த ஆவியின் செயலைப் பற்றி என்ன வெளிப்படுத்துகின்றன?

(ஆ) இன்று பரிசுத்த ஆவி நமக்கு எப்படி உதவி செய்கிறது? (நியா. 14:6; 15:14; சக. 4:6; அப். 4:31)

3. நியாயாதிபதிகள் 16:18-31-ஐ வாசி.

கெட்ட சகவாசத்தால் சிம்சோனுக்கு என்ன ஆனது, இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (நியா. 16:18, 19; 1 கொ. 15:33)

கதை 55

ஒரு குட்டிப் பையன் கடவுளுக்குச் சேவை செய்கிறான்

1. படத்திலுள்ள குட்டிப் பையனின் பெயர் என்ன, மற்றவர்கள் யார் யார்?

2. ஒருநாள் யெகோவாவின் ஆசரிப்புக் கூடாரத்திற்கு போயிருக்கையில் அன்னாள் எதற்காக ஜெபம் செய்தாள், அவளுடைய ஜெபத்திற்கு யெகோவா எப்படிப் பதிலளித்தார்?

3. யெகோவாவின் கூடாரத்தில் சேவை செய்வதற்காக சாமுவேலைக் கூட்டிக்கொண்டு வந்தபோது அவனுக்கு எத்தனை வயது, ஒவ்வொரு வருடமும் அவனுடைய அம்மா அவனுக்கு என்ன கொண்டு வருகிறாள்?

4. ஏலியின் மகன்களுடைய பெயர் என்ன, அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

5. சாமுவேலை யெகோவா எப்படிக் கூப்பிடுகிறார், அவனிடம் என்ன விஷயத்தைச் சொல்கிறார்?

6. சாமுவேல் வளர்ந்த பிறகு எப்படிப்பட்ட ஆளாக ஆகிறார், அவர் வயதானவராக ஆகும்போது என்ன நடக்கிறது?

கூடுதல் கேள்விகள்:

1. ஒன்று சாமுவேல் 1:1-28-ஐ வாசி.

(அ) மெய் வணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில், குடும்பத் தலைவர்களுக்கு எல்கானா என்ன சிறந்த முன்மாதிரி வைக்கிறார்? (1 சா. 1:3, 21; மத். 6:33; பிலி. 1:10, NW)

(ஆ) சிக்கலான பிரச்சினைகளைச் சமாளிப்பதில் அன்னாளின் முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (1 சா. 1:10, 11; சங். 55:22; ரோ. 12:12)

2. ஒன்று சாமுவேல் 2:11-36-ஐ வாசி.

யெகோவாவைவிட தன் மகன்களையே ஏலி பெரிதாக நினைத்தார் என்று எப்படிச் சொல்லலாம், இது நமக்கு எப்படி ஓர் எச்சரிக்கையாக இருக்கிறது? (1 சா. 2:22-24, 27, 29; உபா. 21:18-21; மத். 10:36, 37)

3. ஒன்று சாமுவேல் 4:16-18-ஐ வாசி.

போர்க் களத்திலிருந்து பயங்கரமான என்ன நான்கு செய்திகள் வருகின்றன, அவற்றைக் கேட்டதும் ஏலிக்கு என்ன சம்பவிக்கிறது?

4. ஒன்று சாமுவேல் 8:4-9-ஐ வாசி.

யெகோவாவை இஸ்ரவேலர் எவ்வாறு பெரிதும் அவமதித்தார்கள், இன்று நாம் அவருடைய ராஜ்யத்தை எப்படி உண்மையோடு ஆதரிக்கலாம்? (1 சா. 8:5, 7; யோவா. 17:16; யாக். 4:4)

கதை 56

சவுல்—இஸ்ரவேலின் முதல் ராஜா

1. படத்தில் சாமுவேல் என்ன செய்து கொண்டிருக்கிறார், ஏன்?

2. யெகோவாவுக்கு சவுலை ஏன் பிடித்திருக்கிறது, சவுல் எப்படிப்பட்ட ஆள்?

3. சவுலின் மகனுடைய பெயர் என்ன, அந்த மகன் என்ன செய்கிறார்?

4. பலி செலுத்துவதற்கு சாமுவேல் வரும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக சவுல் ஏன் பலி செலுத்துகிறார்?

5. சவுலைப் பற்றிய இந்தக் கதையிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

கூடுதல் கேள்விகள்:

1. ஒன்று சாமுவேல் 9:15-21; 10:17-27-ஐ வாசி.

சிலர் தன்னைத் தரக்குறைவாக பேசியபோது, அவசரப்பட்டு பதிலடி கொடுப்பதைத் தவிர்க்க அடக்க குணம் சவுலுக்கு எப்படி உதவியது? (1 சா. 9:21, 22, 27; நீதி. 17:27)

2. ஒன்று சாமுவேல் 13:5-14-ஐ வாசி.

கில்காலில் சவுல் செய்த தவறு என்ன? (1 சா. 10:8; 13:8, 9, 13)

3. ஒன்று சாமுவேல் 15:1-35-ஐ வாசி.

(அ) அமலேக்கின் ராஜாவான ஆகாகின் விஷயத்தில், சவுல் என்ன பயங்கரமான பாவத்தைச் செய்தார்? (1 சா. 15:2, 3, 8, 9, 22)

(ஆ) சவுல் தான் செய்தவற்றை நியாயப்படுத்துவதற்கும் பழியை மற்றவர்கள் மீது போடுவதற்கும் என்ன சொன்னார்? (1 சா. 15:24)

(இ) நமக்கு ஆலோசனை கொடுக்கப்படுகையில், என்ன எச்சரிப்புக்கு நாம் செவிசாய்க்க வேண்டும்? (1 சா. 15:19-21; சங். 141:5; நீதி. 9:8, 9; 11:2)

கதை 57

தாவீதைக் கடவுள் தேர்ந்தெடுக்கிறார்

1. படத்திலுள்ள அந்தப் பையனின் பெயர் என்ன, அவன் ஒரு தைரியசாலி என்று நமக்கு எப்படித் தெரியும்?

2. தாவீது எங்கு வாழ்கிறான், அவனுடைய அப்பா மற்றும் தாத்தாவின் பெயர் என்ன?

3. பெத்லகேமிலுள்ள ஈசாயின் வீட்டிற்குப் போகும்படி சாமுவேலிடம் யெகோவா ஏன் சொல்கிறார்?

4. ஈசாய் தன்னுடைய மகன்களில் ஏழு பேரை சாமுவேலிடம் கூட்டிக்கொண்டு வரும்போது என்ன நடக்கிறது?

5. தாவீதை உள்ளே அழைத்து வந்ததும் சாமுவேலிடம் யெகோவா என்ன சொல்கிறார்?

கூடுதல் கேள்விகள்:

1. ஒன்று சாமுவேல் 17:34, 35-ஐ வாசி.

தாவீதின் தைரியத்தையும் யெகோவா மீது அவர் சார்ந்திருந்ததையும் இந்தச் சம்பவங்கள் எப்படிச் சிறப்பித்துக் காட்டுகின்றன? (1 சா. 17:37)

2. ஒன்று சாமுவேல் 16:1-14-ஐ வாசி.

(அ) 1 சாமுவேல் 16:7-ல் உள்ள யெகோவாவின் வார்த்தைகள் பட்சபாதம் காட்டாதிருப்பதற்கும் வெளித்தோற்றத்தைப் பார்த்து தப்புக்கணக்கு போடாதிருப்பதற்கும் நமக்கு எப்படி உதவுகின்றன? (அப். 10:34, 35; 1 தீ. 2:4)

(ஆ) யெகோவா தம்முடைய பரிசுத்த ஆவியை ஒருவரிடமிருந்து நீக்கும்போது கெட்ட ஆவி, அதாவது கெட்டதைச் செய்யும் உந்துதல் அந்த வெற்றிடத்தைப் பிடித்துக்கொள்ளும் என்பதை சவுலின் உதாரணம் எப்படிக் காட்டுகிறது? (1 சா. 16:14; மத். 12:43-45; கலா. 5:16)

கதை 58

தாவீதும் கோலியாத்தும்

1. இஸ்ரவேல் படையினரிடம் கோலியாத் என்ன சவால் விடுகிறான்?

2. கோலியாத் எவ்வளவு பெரிய உருவமுடையவன், கோலியாத்தைக் கொல்பவனுக்கு என்ன கொடுப்பதாக சவுல் ராஜா வாக்குக் கொடுக்கிறார்?

3. ‘நீ சின்னப் பையனாக இருப்பதால் கோலியாத்துடன் போர் செய்ய முடியாது’ என தாவீதிடம் சவுல் கூறியபோது அவன் என்ன சொல்கிறான்?

4. கோலியாத்துக்குப் பதிலளிக்கையில், யெகோவா மீது நம்பிக்கை இருப்பதை தாவீது எப்படித் தெரிவிக்கிறான்?

5. படத்தில் பார்க்கிறபடி, எதை வைத்து கோலியாத்தை தாவீது கொல்கிறான், அதன் பிறகு பெலிஸ்தருக்கு என்ன நடக்கிறது?

கூடுதல் கேள்விகள்:

1. ஒன்று சாமுவேல் 17:1-54-ஐ வாசி.

(அ) தாவீதின் தைரியத்திற்குக் காரணம் என்ன, அவருடைய தைரியத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (1 சா. 17:37, 45; எபே. 6:10, 11)

(ஆ) விளையாட்டுகளிலோ பொழுதுபோக்குகளிலோ ஈடுபடுகையில், கோலியாத் காட்டியதைப் போன்ற போட்டி மனப்பான்மையைக் கிறிஸ்தவர்கள் ஏன் தவிர்க்க வேண்டும்? (1 சா. 17:8; கலா. 5:26; 1 தீ. 4:8)

(இ) கடவுளுடைய துணை தனக்கிருக்கிறது என தாவீது விசுவாசித்ததை அவருடைய வார்த்தைகள் எப்படிக் காட்டுகின்றன? (1 சா. 17:45-47; 2 நா. 20:15)

(ஈ) இது இரண்டு படைகளுக்கு இடையில் நடந்த ஒரு போர் என்பதைவிட பொய்க் கடவுட்களுக்கும் மெய்க் கடவுளான யெகோவாவுக்கும் இடையில் நடந்த போர் என இப்பதிவு எப்படிக் காட்டுகிறது? (1 சா. 17:43, 46, 47)

(உ) யெகோவா மீது நம்பிக்கை வைப்பதில் தாவீதின் முன்மாதிரியை அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர் எப்படிப் பின்பற்றுகிறார்கள்? (1 சா. 17:37; எரே. 1:17-19; வெளி. 12:17)

கதை 59

தாவீது ஏன் ஓடிப்போக வேண்டும்

1. தாவீதின் மீது சவுல் ஏன் பொறாமைப்படுகிறார்? ஆனால் சவுலின் மகன் யோனத்தான் எப்படி வித்தியாசமானவராக இருக்கிறார்?

2. ஒருநாள் சவுலுக்காகச் சுரமண்டலத்தை தாவீது வாசித்துக் கொண்டிருக்கும்போது என்ன நடக்கிறது?

3. தன்னுடைய மகள் மீகாளை கல்யாணம் செய்துகொள்வதற்கு முன் தாவீது என்ன செய்ய வேண்டுமென சவுல் சொல்கிறார், ஏன் அப்படிச் சொல்கிறார்?

4. சவுலுக்காகச் சுரமண்டலத்தை தாவீது வாசிக்கையில் மூன்றாவது தடவை என்ன நடக்கிறது, படத்தைப் பார்த்து சொல்.

5. தாவீதின் உயிரைப் பாதுகாக்க மீகாள் எப்படி உதவுகிறாள், அதற்குப் பின் ஏழு ஆண்டுகளுக்கு தாவீது என்ன செய்ய வேண்டியிருக்கிறது?

கூடுதல் கேள்விகள்:

1. ஒன்று சாமுவேல் 18:1-30-ஐ வாசி.

(அ) தாவீதிடம் யோனத்தானுக்கு இருந்த பலமான அன்பு, ‘வேறே ஆடுகளுக்கும்’ ‘சிறுமந்தைக்கும்’ இடையிலான அன்புக்கு எப்படி முன்நிழலாக இருந்தது? (1 சா. 18:1; யோவா. 10:16; லூக். 12:32; சக. 8:23)

(ஆ) முறைப்படி யோனத்தானே சவுலின் வாரிசாக இருந்தாலும், ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு யோனத்தான் ஒப்பற்ற விதத்தில் கீழ்ப்படிந்ததை 1 சாமுவேல் 18:4 எப்படிக் காட்டுகிறது?

(இ) பொறாமை கொடிய பாவத்திற்கு வழிநடத்தும் என்பதை சவுலின் உதாரணம் எப்படிக் காட்டுகிறது, இது நமக்கு என்ன எச்சரிப்பை அளிக்கிறது? (1 சா. 18:7-9, 25; யாக். 3:14-16)

2. ஒன்று சாமுவேல் 19:1-17-ஐ வாசி.

யோனத்தான் எப்படி உயிருக்குப் பயப்படாமல் தைரியமாக 1 சாமுவேல் 19:4, 5-ல் உள்ள வார்த்தைகளைச் சொன்னார்? (1 சா. 19:1, 6)

கதை 60

அபிகாயிலும் தாவீதும்

1. படத்தில் தாவீதைச் சந்திக்க வருகிற அந்தப் பெண்ணின் பெயர் என்ன, அவள் எப்படிப்பட்டவள்?

2. நாபால் யார்?

3. உதவி கேட்டு தாவீது தன்னுடைய ஆட்களில் சிலரை நாபாலிடம் அனுப்புவது ஏன்?

4. தாவீதின் ஆட்களிடம் நாபால் என்ன சொல்கிறான், அதைக் கேட்ட தாவீது என்ன செய்கிறார்?

5. தான் ஒரு புத்திசாலியான பெண் என்பதை அபிகாயில் எப்படிக் காட்டுகிறாள்?

கூடுதல் கேள்விகள்:

1. ஒன்று சாமுவேல் 22:1-4-ஐ வாசி.

கிறிஸ்தவ சகோதரத்துவத்திற்குள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்பதற்கு தாவீதின் குடும்பத்தார் எப்படிச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்கள்? (நீதி. 17:17; 1 தெ. 5:14)

2. ஒன்று சாமுவேல் 25:1-43-ஐ வாசி.

(அ) நாபாலைப் பற்றி பைபிள் ஏன் மிக மோசமாக விவரிக்கிறது? (1 சா. 25:2-5, 10, 14, 21, 25)

(ஆ) அபிகாயிலின் உதாரணத்திலிருந்து இன்று கிறிஸ்தவ மனைவிகள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (1 சா. 25:32, 33; நீதி. 31:26; எபே. 5:24)

(இ) என்ன இரண்டு தவறான காரியங்கள் செய்வதிலிருந்து தாவீதை அபிகாயில் தடுத்தாள்? (1 சா. 25:31, 33; ரோ. 12:19; எபே. 4:26)

(ஈ) அபிகாயிலின் வார்த்தைகளுக்கு தாவீது பிரதிபலித்த விதம், பெண்களை யெகோவா கருதும் விதமாகவே இன்றுள்ள ஆண்களும் கருதுவதற்கு எப்படி உதவுகிறது? (அப். 21:8, 9; ரோ. 2:11; 1 பே. 3:7)

கதை 61

தாவீது ராஜாவாகிறார்

1. சவுல் தன் முகாமில் தூங்கிக் கொண்டிருந்தபோது தாவீதும் அபிசாயும் என்ன செய்தார்கள்?

2. சவுலிடம் தாவீது என்ன கேள்விகளைக் கேட்கிறார்?

3. சவுலை விட்டு வந்த பிறகு தாவீது எங்கே போகிறார்?

4. தாவீது மிகவும் சோகமடைந்து ஓர் அழகிய பாடலை எழுதுவதற்குக் காரணம் என்ன?

5. தாவீதை எப்ரோனில் ராஜாவாக்கும்போது அவருக்கு எத்தனை வயது, அவருடைய மகன்களில் சிலருடைய பெயர் என்ன?

6. பிற்பாடு ராஜாவாக தாவீது எங்கே ஆட்சி செய்கிறார்?

கூடுதல் கேள்விகள்:

1. ஒன்று சாமுவேல் 26:1-25-ஐ வாசி.

(அ) 1 சாமுவேல் 26:11-ல் குறிப்பிடப்பட்டுள்ள தாவீதின் வார்த்தைகள் தேவராஜ்ய ஏற்பாட்டைக் குறித்த என்ன மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றன? (சங். 37:7; ரோ. 13:2)

(ஆ) அன்போடு தயவு காட்ட நாம் ஊக்கமாக முயற்சியெடுக்கையில் அதற்கு யாரேனும் நன்றிகெட்டத்தனமாய் நடந்தால், 1 சாமுவேல் 26:23-ல் உள்ள தாவீதின் வார்த்தைகள் சரியான மனப்பான்மையோடு இருக்க நமக்கு எப்படி உதவும்? (1 இரா. 8:32; சங். 18:20)

2. இரண்டு சாமுவேல் 1:26-ஐ வாசி.

தாவீது மற்றும் யோனத்தானைப் போல இன்று கிறிஸ்தவர்கள் எப்படி ‘ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பைக்’ காட்டலாம்? (1 பே. 4:8, NW; கொலோ. 3:14; 1 யோ. 4:12)

3. இரண்டு சாமுவேல் 5:1-10-ஐ வாசி.

(அ) தாவீது எத்தனை வருடங்கள் ராஜாவாக அரசாண்டார், இந்தக் காலப்பகுதி எப்படிப் பிரிக்கப்படுகிறது? (2 சா. 5:4, 5)

(ஆ) தாவீதின் உயர்வுக்குக் காரணம் என்ன, இன்று நமக்கு இது எப்படி ஒரு நினைப்பூட்டுதலாக இருக்கிறது? (1 சா. 16:13; 1 கொ. 1:31; பிலி. 4:13)

கதை 62

தாவீதின் வீட்டில் பிரச்சினை

1. யெகோவாவின் உதவியோடு, கடைசியில் கானான் தேசம் என்ன ஆகிறது?

2. ஒரு சாயங்கால நேரத்தில் அரண்மனை மாடியில் தாவீது இருக்கும்போது என்ன நடக்கிறது?

3. தாவீதின் மீது யெகோவா ஏன் பயங்கரமாகக் கோபப்படுகிறார்?

4. படத்தில் பார்க்கிறபடி, தாவீது செய்த பாவங்களை உணர்த்துவதற்காக யாரை யெகோவா அனுப்புகிறார், தாவீதுக்கு என்ன நடக்கும் என அந்த நபர் சொல்கிறார்?

5. தாவீதுக்கு என்னென்ன பிரச்சினைகள் உண்டாகின்றன?

6. தாவீதுக்குப் பிறகு இஸ்ரவேலில் யார் ராஜாவாக ஆகிறார்?

கூடுதல் கேள்விகள்:

1. இரண்டு சாமுவேல் 11:1-27-ஐ வாசி.

(அ) யெகோவாவின் சேவையில் எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பது எப்படி நமக்கு ஒரு பாதுகாப்பாய் அமைகிறது?

(ஆ) பாவம் செய்ய தாவீது எப்படித் தூண்டப்பட்டார், இன்று யெகோவாவின் ஊழியர்களுக்கு இது என்ன எச்சரிப்பைத் தருகிறது? (2 சா. 11:2; மத். 5:27-29; 1 கொ. 10:12; யாக். 1:14, 15)

2. இரண்டு சாமுவேல் 12:1-18-ஐ வாசி.

(அ) தாவீதுக்கு நாத்தான் ஆலோசனை கொடுத்த விதத்திலிருந்து மூப்பர்களும் பெற்றோர்களும் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (2 சா. 12:1-4; நீதி. 12:18; மத். 13:34)

(ஆ) தாவீதுக்கு யெகோவா ஏன் இரக்கம் காட்டினார்? (2 சா. 12:13; சங். 32:5; 2 கொ. 7:9, 10)

கதை 63

ஞானமுள்ள சாலொமோன் ராஜா

1. சாலொமோனிடம் யெகோவா என்ன கேட்டார், அதற்கு அவர் என்ன பதிலளித்தார்?

2. சாலொமோன் தம்மிடம் கேட்ட காரியத்தைக் குறித்து யெகோவா சந்தோஷப்பட்டதால், எதையெல்லாம் கொடுப்பதாக வாக்குக் கொடுக்கிறார்?

3. என்ன பெரிய பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்கு இரண்டு பெண்கள் சாலொமோனிடம் வருகிறார்கள்?

4. படத்தில் பார்க்கிறபடி, இந்தப் பிரச்சினையை சாலொமோன் எப்படித் தீர்க்கிறார்?

5. சாலொமோனின் ஆட்சி காலம் எப்படியிருக்கிறது, ஏன்?

கூடுதல் கேள்விகள்:

1. ஒன்று இராஜாக்கள் 3:3-28-ஐ வாசி.

(அ) இன்று கடவுளுடைய அமைப்பில் பொறுப்பிலுள்ள ஆண்கள், 1 இராஜாக்கள் 3:7-ல் சாலொமோன் இதயப்பூர்வமாக சொன்ன வார்த்தைகளிலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (சங். 119:105; நீதி. 3:5, 6)

(ஆ) சரியான காரியங்களுக்காக ஜெபம் செய்வதற்கு சாலொமோனின் விண்ணப்பம் எப்படி ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறது? (1 இரா. 3:9, 11; நீதி. 30:8, 9; 1 யோ. 5:14)

(இ) இரண்டு பெண்களுக்கு இடையே இருந்த பிரச்சினையை சாலொமோன் தீர்த்து வைத்தது, பெரிய சாலொமோனாகிய இயேசு கிறிஸ்துவின் ஆட்சியைக் குறித்து நமக்கு என்ன நம்பிக்கையை அளிக்கிறது? (1 இரா. 3:28; ஏசா. 9:6, 7; 11:2-4)

2. ஒன்று இராஜாக்கள் 4:29-34-ஐ வாசி.

(அ) கீழ்ப்படிதலுள்ள இருதயத்தைத் தரும்படி சாலொமோன் கேட்டதால் யெகோவா அவருக்கு என்னவெல்லாம் கொடுத்தார்? (1 இரா. 4:29)

(ஆ) ஜனங்கள் சாலொமோனின் ஞானத்தைக் கேட்டறிய வெகு தூரம் பயணித்து வந்தார்கள் என்றால், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதைக் குறித்து நமக்கு என்ன மனநிலை இருக்க வேண்டும்? (1 இரா. 4:29, 34; யோவா. 17:3; 2 தீ. 3:16)

கதை 64

சாலொமோன் ஆலயத்தைக் கட்டுகிறார்

1. யெகோவாவின் ஆலயத்தை சாலொமோன் கட்டி முடிக்க எவ்வளவு காலம் எடுக்கிறது, அதற்கு ஏன் எக்கச்சக்கமான பணம் செலவாகிறது?

2. ஆலயத்தில் எத்தனை முக்கிய அறைகள் இருக்கின்றன, உள்ளறைக்குள் என்ன வைக்கப்படுகிறது?

3. ஆலயம் கட்டி முடிக்கப்படுகிறபோது ஜெபத்தில் சாலொமோன் என்ன சொல்கிறார்?

4. சாலொமோனின் ஜெபத்தைக் குறித்து தாம் சந்தோஷப்படுவதை யெகோவா எப்படிக் காட்டுகிறார்?

5. சாலொமோனின் மனைவிகள் அவரை என்ன செய்யும்படி தூண்டுகிறார்கள், இதனால் சாலொமோனுக்கு என்ன நடக்கிறது?

6. சாலொமோன் மீது யெகோவா ஏன் கோபப்படுகிறார், அவரிடம் யெகோவா என்ன சொல்கிறார்?

கூடுதல் கேள்விகள்:

1. ஒன்று நாளாகமம் 28:9, 10-ஐ வாசி.

1 நாளாகமம் 28:9, 10-ல் உள்ள தாவீதின் வார்த்தைகளைக் கவனிக்கையில், நம் அன்றாட வாழ்க்கையில் நாம் என்ன செய்ய முயல வேண்டும்? (சங். 19:14; பிலி. 4:8, 9)

2. இரண்டு நாளாகமம் 6:12-21, 32-42-ஐ வாசி.

(அ) மனிதரால் கட்டப்படுகிற எந்தவொரு கட்டிடமும் மகா உன்னத கடவுள் வாசம் பண்ணுவதற்குப் போதுமானதல்ல என்பதை சாலொமோன் எப்படிச் சொல்கிறார்? (2 நா. 6:18; அப். 17:24, 25)

(ஆ) 2 நாளாகமம் 6:32, 33-ல் உள்ள சாலொமோனின் வார்த்தைகள் யெகோவாவைப் பற்றி என்ன சொல்கின்றன? (அப். 10:34, 35; கலா. 2:6)

3. இரண்டு நாளாகமம் 7:1-5-ஐ வாசி.

யெகோவாவின் மகிமையைக் கண்ட இஸ்ரவேலர் யெகோவாவைத் துதிக்க தூண்டப்பட்டது போல, யெகோவாவின் ஆசீர்வாதம் அவருடைய ஜனங்கள் மீது இருப்பதைக் குறித்து தியானிப்பது என்ன செய்யும்படி நம்மைத் தூண்ட வேண்டும்? (2 நா. 7:3; சங். 22:22; 34:1; 96:2)

4. ஒன்று இராஜாக்கள் 11:9-13-ஐ வாசி.

கடைசிவரை உண்மையோடு நிலைத்திருப்பதன் முக்கியத்துவத்தை சாலொமோனின் வாழ்க்கை எப்படிக் காட்டுகிறது? (1 இரா. 11:4, 9; மத். 10:22; வெளி. 2:10)

கதை 65

ராஜ்யம் பிரிக்கப்படுகிறது

1. படத்திலுள்ள இரண்டு ஆட்களின் பெயர் என்ன, அவர்கள் யார்?

2. அகியா தன்னுடைய மேலங்கியை என்ன செய்கிறார், அப்படிச் செய்வதன் அர்த்தம் என்ன?

3. யெரொபெயாமை என்ன செய்வதற்கு சாலொமோன் முயற்சி செய்கிறார்?

4. ஜனங்கள் யெரொபெயாமை பத்து கோத்திரங்களுக்கு ராஜாவாக ஏன் அமர்த்துகிறார்கள்?

5. யெரொபெயாம் ஏன் இரண்டு பொன் கன்றுக்குட்டிகளைச் செய்கிறார், சீக்கிரத்தில் அந்தத் தேசம் பூராவும் என்ன நடக்கிறது?

6. எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்திற்கும் இரண்டு கோத்திர ராஜ்யத்திற்கும் என்ன நடக்கிறது?

கூடுதல் கேள்விகள்:

1. ஒன்று இராஜாக்கள் 11:26-43-ஐ வாசி.

யெரொபெயாம் எப்படிப்பட்டவர், தம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவருக்கு என்ன செய்யப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்தார்? (1 இரா. 11:28, 38)

2. ஒன்று இராஜாக்கள் 12:1-33-ஐ வாசி.

(அ) அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வது சம்பந்தமாக பெற்றோரும் மூப்பர்களும் ரெகொபெயாமின் கெட்ட முன்மாதிரியிலிருந்து என்ன தெரிந்துகொள்ளலாம்? (1 இரா. 12:13; பிர. 7:7; 1 பே. 5:2, 3)

(ஆ) வாழ்க்கையில் முக்கியமான தீர்மானங்களை எடுக்கையில் நம்பகமான வழிநடத்துதலுக்கு இளைஞர்கள் யாரிடம் செல்ல வேண்டும்? (1 இரா. 12:6, 7; நீதி. 1:8, 9; 2 தீ. 3:16, 17; எபி. 13:7)

(இ) கன்றுக்குட்டி வணக்கத்திற்காக இரண்டு மையங்களை ஏற்படுத்துவதற்கு யெரொபெயாமை தூண்டியது எது, யெகோவா மீது துளியும் விசுவாசமில்லாததை இது எப்படிக் காட்டியது? (1 இரா. 11:37; 12:26-28)

(ஈ) மெய் வணக்கத்திற்கு எதிராக கலகம் செய்வதில் பத்து கோத்திர ராஜ்யத்தின் ஜனங்களை வழிநடத்தியவர் யார்? (1 இரா. 12:32, 33)

கதை 66

யேசபேல்—ஒரு பொல்லாத ராணி

1. யேசபேல் யார்?

2. ஒருநாள் ஆகாப் ஏன் சோகமாக இருக்கிறார்?

3. நாபோத்தின் திராட்சத் தோட்டத்தைத் தன் கணவன் ஆகாபுக்கு வாங்கிக் கொடுக்க யேசபேல் என்ன செய்கிறாள்?

4. யேசபேலைத் தண்டிக்க யெகோவா யாரை அனுப்புகிறார்?

5. படத்தில் பார்க்கிறபடி, யேசபேலின் அரண்மனையை யெகூ நெருங்கியதும் என்ன நடக்கிறது?

கூடுதல் கேள்விகள்:

1. ஒன்று இராஜாக்கள் 16:29-33; 18:3, 4-ஐ வாசி.

ஆகாப் ராஜாவின் காலத்தில் இஸ்ரவேலில் நிலைமை எந்தளவு மோசமாக இருந்தது? (1 இரா. 14:9)

2. ஒன்று இராஜாக்கள் 21:1-16-ஐ வாசி.

(அ) நாபோத் தைரியத்தையும் யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியையும் எப்படிக் காட்டினார்? (1 இரா. 21:1-3; லேவி. 25:23-28)

(ஆ) நாம் ஏமாற்றமடைகையில் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என ஆகாபின் உதாரணம் காட்டுகிறது? (1 இரா. 21:4; ரோ. 5:3-5)

3. இரண்டு இராஜாக்கள் 9:30-37-ஐ வாசி.

யெகோவாவின் சித்தத்தைச் செய்வதில் யெகூ தீவிர ஆர்வம் காட்டியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (2 இரா. 9:4-10; 2 கொ. 9:1, 2; 2 தீ. 4:2)

கதை 67

யெகோவா மீது யோசபாத் நம்பிக்கை வைக்கிறார்

1. யோசபாத் யார், இவர் யாருடைய காலத்தில் வாழ்கிறார்?

2. இஸ்ரவேல் ஜனங்கள் ஏன் பயப்படுகிறார்கள், அதனால் பலர் என்ன செய்கிறார்கள்?

3. யோசபாத்தின் ஜெபத்திற்கு யெகோவா எப்படிப் பதிலளிக்கிறார்?

4. யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன் யெகோவா என்ன காரியத்தைச் செய்கிறார்?

5. யோசபாத்திடமிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

கூடுதல் கேள்விகள்:

1. இரண்டு நாளாகமம் 20:1-30-ஐ வாசி.

(அ) ஆபத்தான சூழ்நிலைகளில் கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை யோசபாத் எப்படிக் காட்டினார்? (2 நா. 20:12; சங். 25:15; 62:1)

(ஆ) தமது ஜனங்களிடம் பேசுவதற்கு யெகோவா எப்போதுமே யாரையாவது பயன்படுத்தியிருப்பதால், இன்றும்கூட அவர் யாரைப் பயன்படுத்துகிறார்? (2 நா. 20:14, 15; மத். 24:45-47; யோவா. 15:15)

(இ) ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தம்’ ஆரம்பிக்கும்போது நாமும்கூட எப்படி யோசபாத் இருந்ததைப் போன்ற அதே சூழ்நிலையில் இருப்போம்? (2 நா. 20:15, 17; 32:8; வெளி. 16:14, 16)

(ஈ) லேவியர்களைப் பின்பற்றி, இன்று பயனியர்களும் மிஷனரிகளும் உலகளாவிய பிரசங்க வேலைக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்? (2 நா. 20:19; ரோ. 10:13-15; 2 தீ. 4:2)

கதை 68

மறுபடியும் உயிர் பெறுகிற இரண்டு பையன்கள்

1. படத்திலுள்ள மூன்று பேர் யார், அந்தச் சின்னப் பையனுக்கு என்ன நடக்கிறது?

2. அந்தப் பையனுக்காக எலியா என்ன கேட்டு ஜெபிக்கிறார், அடுத்து என்ன நடக்கிறது?

3. எலியாவின் உதவியாளர் யார்?

4. சூனேமிலுள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்கு எலிசா ஏன் அழைக்கப்படுகிறார்?

5. எலிசா என்ன செய்கிறார், செத்துப்போன அந்தப் பிள்ளைக்கு என்ன சம்பவிக்கிறது?

6. எலியாவும் எலிசாவும் செய்த காரியங்கள் யெகோவாவின் என்ன சக்தியைக் காட்டுகின்றன?

கூடுதல் கேள்விகள்:

1. ஒன்று இராஜாக்கள் 17:8-24-ஐ வாசி.

(அ) எலியாவின் கீழ்ப்படிதலும் விசுவாசமும் எப்படிச் சோதிக்கப்பட்டன? (1 இரா. 17:9; 19:1-4, 10)

(ஆ) சாறிபாத் விதவையின் விசுவாசம் ஏன் குறிப்பிடத்தக்கது? (1 இரா. 17:12-16; லூக் 4:25, 26)

(இ) சாறிபாத் விதவையைப் பற்றிய விஷயம், மத்தேயு 10:41, 42-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகள் உண்மை என்பதை எப்படிக் காட்டுகிறது? (1 இரா. 17:10-12, 17, 23, 24)

2. இரண்டு இராஜாக்கள் 4:8-37-ஐ வாசி.

(அ) உபசரிப்பதைப் பற்றி சூனேம் நகரத்து பெண்ணின் உதாரணம் நமக்கு என்ன கற்பிக்கிறது? (2 இரா. 4:8; லூக் 6:38; ரோ. 12:13; 1 யோ. 3:17)

(ஆ) இன்று கடவுளுடைய ஊழியர்களுக்கு எந்த வழிகளிலெல்லாம் இரக்கத்தைக் காட்டலாம்? (அப். 20:35; 28:1, 2; கலா. 6:9, 10; எபி. 6:10)

கதை 69

பலம்படைத்த ஒருவருக்கு ஒரு சிறுமி உதவுகிறாள்

1. படத்திலுள்ள சிறுமி அந்தப் பெண்ணிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறாள்?

2. படத்திலுள்ள அந்தப் பெண் யார், அந்தப் பெண்ணின் வீட்டில் இச்சிறுமி என்ன செய்கிறாள்?

3. நாகமானிடம் என்ன சொல்லும்படி எலிசா தன் ஊழியக்காரனுக்குக் கட்டளையிடுகிறார், நாகமானுக்கு ஏன் கோபம் வந்துவிடுகிறது?

4. தன்னுடைய வேலைக்காரர்கள் சொன்ன பேச்சை நாகமான் கேட்கும்போது என்ன நடக்கிறது?

5. நாகமான் கொடுத்த பரிசை வாங்கிக்கொள்ள எலிசா ஏன் மறுக்கிறார், ஆனால் கேயாசி என்ன செய்கிறான்?

6. கேயாசிக்கு என்ன நடக்கிறது, இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

கூடுதல் கேள்விகள்:

1. இரண்டு இராஜாக்கள் 5:1-27-ஐ வாசி.

(அ) அந்த இஸ்ரவேல் சிறுமியின் முன்மாதிரி இன்றுள்ள சிறு பிள்ளைகளை எப்படி ஊக்குவிக்கலாம்? (2 இரா. 5:3; சங். 8:2; 148:12, 13)

(ஆ) நமக்கு வேதப்பூர்வ ஆலோசனை கொடுக்கப்படுகையில் நாகமானின் உதாரணத்தை மனதில் வைப்பது ஏன் நல்லது? (2 இரா. 5:15; எபி. 12:5, 6; யாக். 4:6)

(இ) எலிசாவுக்கும் கேயாசிக்கும் இடையிலான வேறுபாட்டிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? (2 இரா. 5:9, 10, 14-16, 20; மத். 10:8; அப். 5:1-5)

கதை 70

யோனாவும் பெரிய மீனும்

1. யோனா யார், அவரை யெகோவா என்ன செய்யச் சொல்கிறார்?

2. யெகோவா சொன்ன இடத்திற்குப் போக யோனாவுக்கு இஷ்டமில்லாததால், எங்கே போகிறார்?

3. புயலை நிறுத்துவதற்கு என்ன செய்யும்படி அந்தப் படகோட்டிகளிடம் யோனா சொல்கிறார்?

4. படத்தில் பார்க்கிறபடி, தண்ணீருக்குள் யோனா மூழ்கிக் கொண்டிருக்கும்போது என்ன நடக்கிறது?

5. அந்தப் பெரிய மீனின் வயிற்றில் யோனா எத்தனை நாட்கள் இருக்கிறார், அங்கே அவர் என்ன செய்கிறார்?

6. அந்தப் பெரிய மீன் அவரைக் கக்கிப் போட்ட பிறகு, அவர் எங்கே போகிறார், இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

கூடுதல் கேள்விகள்:

1. யோனா 1:1-17-ஐ வாசி.

நினிவே மக்களுக்குப் பிரசங்கிக்கும்படி கொடுத்த நியமிப்பை யோனா எப்படிக் கருதினார்? (யோனா 1:2, 3; நீதி. 3:7; பிர. 8:12)

2. யோனா 2:1, 2, 10-ஐ வாசி.

நம்முடைய ஜெபங்களுக்கு யெகோவா பதிலளிப்பார் என்பதை யோனாவின் அனுபவம் எப்படி உறுதியளிக்கிறது? (சங். 22:24; 34:6; 1 யோ. 5:14)

3. யோனா 3:1-10-ஐ வாசி.

(அ) ஆரம்பத்தில் யோனா தனக்குக் கொடுத்த வேலையை செய்யாமல் போனாலும் தொடர்ந்து அவரை யெகோவா பயன்படுத்தியதிலிருந்து நாம் என்ன ஊக்கத்தைப் பெறுகிறோம்? (சங். 103:14; 1 பே. 5:10)

(ஆ) நினிவே மக்களுடைய விஷயத்தில் யோனாவின் அனுபவம், நம் பிராந்தியத்திலுள்ள மக்களை முன்கூட்டியே நியாயந்தீர்ப்பது பற்றி நமக்கு என்ன கற்பிக்கிறது? (யோனா 3:6-9; பிர. 11:6; அப். 13:48)

கதை 71

கடவுள் வாக்குக் கொடுத்திருக்கும் ஒரு பரதீஸ்

1. ஏசாயா யார், அவர் எப்போது வாழ்ந்தார், அவருக்கு யெகோவா எதைக் காட்டினார்?

2. “பரதீஸ்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன, இந்தப் படத்தைப் பார்க்கும்போது உனக்கு எது ஞாபகத்துக்கு வருகிறது?

3. புதிய பரதீஸைப் பற்றி என்ன எழுதும்படி ஏசாயாவிடம் யெகோவா சொல்கிறார்?

4. ஆதாமும் ஏவாளும் தங்களுடைய அழகிய வீட்டை ஏன் இழந்தார்கள்?

5. தம்மை நேசிக்கிற ஜனங்களுக்கு என்ன தரப் போவதாக யெகோவா வாக்குக் கொடுக்கிறார்?

கூடுதல் கேள்விகள்:

1. ஏசாயா 11:6-9-ஐ வாசி.

(அ) புதிய உலகில் மிருகங்களும் மனிதரும் சமாதானமாக இருப்பார்கள் என்பதை கடவுளுடைய வார்த்தை எப்படி விவரிக்கிறது? (சங். 148:10, 13; ஏசா. 65:25; எசே. 34:25)

(ஆ) ஏசாயாவின் வார்த்தைகள், இன்று யெகோவாவின் ஜனங்கள் மத்தியில் எப்படி ஆன்மீக ரீதியில் நிறைவேறி வருகின்றன? (ரோ. 12:2; எபே. 4:23, 24)

(இ) இப்போதும் புதிய உலகிலும் மனிதர் தங்களுடைய குணங்களை மாற்றிக்கொள்ளும்போது அதற்கான புகழ் யாருக்குப் போய்ச் சேர வேண்டும்? (ஏசா. 48:17, 18; கலா. 5:22, 23; பிலி. 4:7)

2. வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசி.

(அ) மனிதரிடத்தில் கடவுள் வாசம் செய்வது, பூமியில் சொல்லர்த்தமாக அல்ல, ஆனால் அடையாள அர்த்தத்தில் அவர்களோடு வாசம் செய்வதையே குறிக்கிறது என்பதை வேதவசனங்கள் எப்படிக் காட்டுகின்றன? (லேவி. 26:11, 12; 2 நா. 6:18; ஏசா. 66:1; வெளி. 21:2, 3, 22-24)

(ஆ) எப்படிப்பட்ட வருத்தமும் கண்ணீரும் ஒழிந்து போகும்? (லூக். 8:49-52; ரோ. 8:21, 22; வெளி. 21:4)

கதை 72

எசேக்கியா ராஜாவுக்கு கடவுள் உதவுகிறார்

1. படத்திலுள்ள நபர் யார், இவர் ஏன் பயங்கரமான பிரச்சினையில் சிக்கியிருக்கிறார்?

2. யாருடைய கடிதங்களை கடவுளுக்கு முன்பாக எசேக்கியா வைத்திருக்கிறார், கடவுளிடம் அவர் என்ன ஜெபிக்கிறார்?

3. எசேக்கியா எப்படிப்பட்ட ராஜா, ஏசாயா தீர்க்கதரிசி மூலம் என்ன செய்தியை யெகோவா அனுப்புகிறார்?

4. அசீரியர்களை யெகோவாவின் தூதன் என்ன செய்கிறார்? படத்தைப் பார்த்துச் சொல்.

5. இரண்டு கோத்திர ராஜ்யத்திலுள்ள ஜனங்கள் சிறிது காலத்திற்கு சமாதானமாக வாழ்ந்தாலும், எசேக்கியா இறந்த பிறகு என்ன நடக்கிறது?

கூடுதல் கேள்விகள்:

1. இரண்டு இராஜாக்கள் 18:1-36-ஐ வாசி.

(அ) அசீரியரின் சார்பாக பேச வந்த ரப்சாக்கே எவ்வாறு இஸ்ரவேலரின் விசுவாசத்தைக் குலைத்துப்போட முயன்றான்? (2 இரா. 18:19, 21; யாத். 5:2; சங். 64:3, 4)

(ஆ) விரோதிகளிடம் நடந்துகொள்ளும் விதத்தில், யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு எசேக்கியாவின் உதாரணத்தை மனதில் வைக்கிறார்கள்? (2 இரா. 18:36; சங். 39:1; நீதி. 26:4; 2 தீ. 2:24)

2. இரண்டு இராஜாக்கள் 19:1-37-ஐ வாசி.

(அ) கஷ்ட காலத்தில் இன்று யெகோவாவின் ஜனங்கள் எப்படி எசேக்கியாவைப் பின்பற்றுகிறார்கள்? (2 இரா. 19:1, 2; நீதி. 3:5, 6; எபி. 10:24, 25; யாக். 5:14, 15)

(ஆ) என்ன மூன்று விதங்களில் சனகெரிப் ராஜா தோல்வியைத் தழுவினான், அவன் யாருக்குத் தீர்க்கதரிசன படமாக இருக்கிறான்? (2 இரா. 19:32, 35, 37; வெளி. 20:2, 3)

3. இரண்டு இராஜாக்கள் 21:1-6, 16-ஐ வாசி.

எருசலேமை ஆண்ட மிகவும் கெட்ட ராஜாக்களில் மனாசேயும் ஒருவர் என்று ஏன் சொல்லலாம்? (2 நா. 33:4-6, 9)

கதை 73

இஸ்ரவேலின் கடைசி நல்ல ராஜா

1. யோசியா எத்தனை வயதில் ராஜாவாக ஆகிறார், அவர் ஏழு ஆண்டுகள் ராஜாவாக இருந்த பிறகு என்ன செய்ய ஆரம்பிக்கிறார்?

2. முதல் படத்தில் யோசியா என்ன செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறாய்?

3. ஆலயத்தை ஆட்கள் பழுது பார்த்துக் கொண்டிருக்கையில் பிரதான ஆசாரியர் அங்கே எதைக் கண்டுபிடிக்கிறார்?

4. யோசியா தன்னுடைய உடைகளை ஏன் கிழிக்கிறார்?

5. யெகோவாவிடமிருந்து வருகிற என்ன செய்தியை யோசியாவுக்கு உல்தாள் தீர்க்கதரிசினி சொல்லி அனுப்புகிறாள்?

கூடுதல் கேள்விகள்:

1. இரண்டு நாளாகமம் 34:1-28-ஐ வாசி.

(அ) குழந்தை பருவத்திலேயே சிலர் கஷ்டத்தைச் சகித்திருந்திருக்கலாம், அப்படிப்பட்டவர்களுக்கு யோசியா என்ன முன்மாதிரி வைக்கிறார்? (2 நா. 33:21-25; 34:1, 2; சங். 27:10)

(ஆ) யோசியா தனது ஆட்சியின் 8-ம், 12-ம், 18-ம் ஆண்டுகளில் மெய் வணக்கத்தை மேம்படுத்துவதற்காக என்னென்ன முக்கிய படிகளை எடுத்தார்? (2 நா. 34:3, 8)

(இ) வணக்கத்திற்காக நாம் கூடிவரும் இடங்களைப் பராமரிப்பதில் ராஜா யோசியாவும், பிரதான ஆசாரியன் இல்க்கியாவும் வைத்த முன்மாதிரிகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (2 நா. 34:9-13; நீதி. 11:14; 1 கொ. 10:31)

கதை 74

பயப்படாத ஒரு மனிதன்

1. படத்திலுள்ள வாலிபன் யார்?

2. ஒரு தீர்க்கதரிசியாக ஆகப்போவதைப் பற்றி எரேமியா என்ன நினைக்கிறார், ஆனால் அவரிடம் யெகோவா என்ன கூறுகிறார்?

3. ஜனங்களிடம் என்ன செய்தியை எரேமியா தொடர்ந்து அறிவிக்கிறார்?

4. எரேமியா தீர்க்கதரிசனம் சொல்வதைத் தடுக்க ஆசாரியர்கள் என்ன செய்கிறார்கள், தனக்குப் பயமே இல்லை என்பதை அவர் எப்படிக் காட்டுகிறார்?

5. இஸ்ரவேலர் கெட்ட வழிகளிலிருந்து திருந்தாமல் போகும்போது என்ன நடக்கிறது?

கூடுதல் கேள்விகள்:

1. எரேமியா 1:1-8-ஐ வாசி.

(அ) எரேமியாவின் உதாரணம் காட்டுகிறபடி, ஒருவர் யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கான தகுதியைக் கொடுப்பது யார்? (2 கொ. 3:5, 6)

(ஆ) இன்று கிறிஸ்தவ இளைஞர்களுக்கு எரேமியாவின் உதாரணம் என்ன உற்சாகத்தை அளிக்கிறது? (பிர. 12:1; 1 தீ. 4:12)

2. எரேமியா 10:1-5-ஐ வாசி.

விக்கிரகங்களை நம்புவது வீண் என்பதைக் காட்ட என்ன வலிமையான உதாரணத்தை எரேமியா பயன்படுத்துகிறார்? (எரே. 10:5; ஏசா. 46:7; ஆப. 2:19)

3. எரேமியா 26:1-16-ஐ வாசி.

(அ) இன்று எச்சரிப்பின் செய்தியை அறிவிக்கையில், “ஒரு வார்த்தையையும் குறைத்துப் போடாதே” என எரேமியாவுக்குக் கொடுத்த யெகோவாவின் கட்டளைக்கு அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர் எப்படிக் கவனம் செலுத்துகிறார்கள்? (எரே. 26:2; உபா. 4:2; அப். 20:27)

(ஆ) தேசங்களுக்கு யெகோவாவின் எச்சரிப்பை அறிவிப்பதில் இன்று யெகோவாவின் சாட்சிகளுக்கு எரேமியா என்ன சிறந்த முன்மாதிரியை வைக்கிறார்? (எரே. 26:8, 12, 14, 15; 2 தீ. 4:1-5)

4. இரண்டு இராஜாக்கள் 24:1-17-ஐ வாசி.

யூதா ஜனங்கள் யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாய் ஆனதால் அவர்களுக்கு என்னென்ன கஷ்டங்கள் வந்தன? (2 இரா. 24:2-4, 14)

கதை 75

பாபிலோனில் நான்கு இளைஞர்கள்

1. படத்தில் பார்க்கிற நான்கு இளைஞர்கள் யார், அவர்கள் ஏன் பாபிலோனில் இருக்கிறார்கள்?

2. இந்த நான்கு இளைஞர்களைப் பற்றியதில் நேபுகாத்நேச்சாரின் திட்டங்கள் என்ன, அதனால் தன் வேலைக்காரருக்கு அவன் என்ன கட்டளையிடுகிறான்?

3. தனக்கும் தன் மூன்று நண்பர்களுக்கும் சாப்பிடவும் குடிக்கவும் என்ன கொடுக்கும்படி தானியேல் கேட்கிறார்?

4. பத்து நாட்களுக்குக் காய்கறிகளைச் சாப்பிட்ட பிறகு, மற்ற இளைஞரோடு ஒப்பிட தானியேலும் அவருடைய நண்பர்களும் பார்க்க எப்படி இருக்கிறார்கள்?

5. தானியேலும் அவருடைய மூன்று நண்பர்களும் ராஜாவின் அரண்மனையில் எப்படி வேலைக்கு நியமிக்கப்படுகிறார்கள், எந்த விதத்தில் பூசாரிகளையும் ஞானிகளையும்விட அவர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்?

கூடுதல் கேள்விகள்:

1. தானியேல் 1:1-21-ஐ வாசி.

(அ) சோதனைகளைத் தவிர்க்கவும் பலவீனங்களைச் சமாளிக்கவும் எப்படிப்பட்ட முயற்சி தேவை? (தானி. 1:8; ஆதி. 39:7, 10; கலா. 6:9)

(ஆ) ‘ராஜ போஜனம்’ என சிலர் நினைக்கும் காரியங்களை அனுபவிப்பதற்கு இன்று இளைஞர்கள் எவ்வழிகளில் தூண்டப்படலாம் அல்லது வற்புறுத்தப்படலாம்? (தானி. 1:8; நீதி. 20:1; 2 கொ. 6:17–7:1)

(இ) உலகப்பிரகாரமான அறிவை வளர்த்துக்கொள்வது சம்பந்தமாக இந்த நான்கு எபிரெய இளைஞர்கள் பற்றிய பைபிள் பதிவு எதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது? (தானி. 1:20; ஏசா. 54:13; 1 கொ. 3:18-20)

கதை 76

எருசலேம் அழிக்கப்படுகிறது

1. படத்தில் பார்க்கிறபடி, எருசலேமுக்கும் இஸ்ரவேலருக்கும் என்ன நடக்கிறது?

2. எசேக்கியேல் யார், திடுக்கிட வைக்கிற என்ன காரியங்களை அவருக்கு யெகோவா காண்பிக்கிறார்?

3. இஸ்ரவேலர் யெகோவாவை மதிக்காததால், அவர் என்ன செய்யப் போவதாக சொல்கிறார்?

4. தனக்கு விரோதமாய் இஸ்ரவேலர் கலகம் செய்தபின் நேபுகாத்நேச்சார் என்ன செய்கிறான்?

5. இஸ்ரவேலருக்கு இந்தப் பயங்கர அழிவு வரும்படி யெகோவா ஏன் அனுமதிக்கிறார்?

6. இஸ்ரவேல் தேசம் எப்படி வெறிச்சோடிப்போன இடமாக ஆகிறது, எவ்வளவு காலத்திற்கு அப்படிக் கிடக்கிறது?

கூடுதல் கேள்விகள்:

1. இரண்டு இராஜாக்கள் 25:1-26-ஐ வாசி.

(அ) சிதேக்கியா யார், அவருக்கு என்ன சம்பவித்தது, இது பைபிள் தீர்க்கதரிசனத்தை எப்படி நிறைவேற்றியது? (2 இரா. 25:5-7; எசே. 12:13-15)

(ஆ) இஸ்ரவேலர் செய்த தவறுக்காக யெகோவா யாரிடம் கணக்குக் கேட்டார்? (2 இரா. 25:9, 11, 12, 18, 19; 2 நா. 36: 14, 17)

2. எசேக்கியேல் 8:1-18-ஐ வாசி.

சூரியனை வழிபட்ட விசுவாச துரோக இஸ்ரவேலரைக் கிறிஸ்தவமண்டலம் எப்படிப் பின்பற்றியிருக்கிறது? (எசே. 8:16; ஏசா. 5:20, 21; யோவா. 3:19-21; 2 தீ. 4:3)

கதை 77

அவர்கள் வணங்க மறுக்கிறார்கள்

1. பாபிலோனின் ராஜாவான நேபுகாத்நேச்சார் ஜனங்களுக்கு என்ன கட்டளை கொடுத்தான்?

2. தானியேலின் மூன்று நண்பர்கள் இந்தப் பொற்சிலையை ஏன் வணங்குவதில்லை?

3. அச்சிலையை வணங்கும்படி அந்த மூன்று எபிரெயர்களுக்கு நேபுகாத்நேச்சார் மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறபோது, யெகோவா மீதுள்ள நம்பிக்கையை அவர்கள் எப்படிக் காட்டுகிறார்கள்?

4. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை என்ன செய்யும்படி தன் ஆட்களிடம் நேபுகாத்நேச்சார் உத்தரவிடுகிறான்?

5. நெருப்புச் சூளையில் நேபுகாத்நேச்சார் என்ன பார்க்கிறான்?

6. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் கடவுளை அவன் ஏன் புகழ்ந்து துதிக்கிறான், இந்த மூவர் நமக்கு என்ன முன்மாதிரி வைக்கிறார்கள்?

கூடுதல் கேள்விகள்:

1. தானியேல் 3:1-30-ஐ வாசி.

(அ) விசுவாசப் பரீட்சைகளின்போது, இந்த மூன்று எபிரெய வாலிபர்கள் காட்டிய என்ன மனப்பான்மையைக் கடவுளுடைய ஊழியர்கள் பின்பற்ற வேண்டும்? (தானி. 3:17, 18; மத். 10:28; ரோ. 14:7, 8)

(ஆ) நேபுகாத்நேச்சாருக்கு யெகோவா தேவன் என்ன முக்கிய பாடத்தைக் கற்பித்தார்? (தானி. 3:28, 29; 4:34, 35)

கதை 78

சுவரில் எழுதப்படுகிற கையெழுத்து

1. யெகோவாவின் ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பாத்திரங்களையும் கிண்ணங்களையும் ஒரு பெரிய விருந்தின்போது பாபிலோனின் ராஜா உபயோகித்துக் கொண்டிருக்கையில் என்ன நடக்கிறது?

2. ஞானிகளிடம் பெல்ஷாத்சார் என்ன சொல்கிறான், ஆனால் அவர்களால் என்ன செய்ய முடியவில்லை?

3. ராஜாவின் அம்மா என்ன செய்யச் சொல்கிறார்?

4. ராஜாவிடம் தானியேல் சொல்கிறபடி, இந்த வார்த்தைகளை எழுதுவதற்குக் கடவுள் ஏன் இந்தக் கையை அனுப்பினார்?

5. சுவரிலுள்ள இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை தானியேல் எப்படி விளக்குகிறார்?

6. தானியேல் பேசிக்கொண்டிருக்கையிலேயே என்ன நடக்கிறது?

கூடுதல் கேள்விகள்:

1. தானியேல் 5:1-31-ஐ வாசி.

(அ) தேவ பயத்திற்கும், சுவரிலுள்ள வார்த்தைகளைப் பார்த்தபோது பெல்ஷாத்சார் அடைந்த பயத்திற்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல். (தானி. 5:6, 7; சங். 19:9; ரோ. 8:35-39)

(ஆ) பெல்ஷாத்சாருக்கும் பிரபுக்களுக்கும் முன்பாக தானியேல் எவ்வாறு மிக தைரியமாகப் பேசினார்? (தானி. 5:17, 18, 22, 26-28; அப். 4:30)

(இ) தானியேல் 5-ம் அதிகாரம் யெகோவாவின் சர்வலோக பேரரசுரிமையை எவ்விதத்தில் சிறப்பித்துக் காட்டுகிறது? (தானி. 4:17, 25; 5:21)

கதை 79

சிங்கங்களின் குகையில் தானியேல்

1. தரியு என்பவர் யார், தானியேலை அவர் எப்படிக் கருதுகிறார்?

2. பொறாமை பிடித்த சில ஆட்கள் தரியுவை என்ன செய்யச் சொல்கிறார்கள்?

3. இந்தப் புதிய சட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டாலும் தானியேல் என்ன செய்கிறார்?

4. தூக்கமே வராதளவுக்கு தரியு ஏன் ரொம்பவும் மனசங்கடப்படுகிறார், மறுநாள் காலை அவர் என்ன செய்கிறார்?

5. தரியு கேட்ட கேள்விக்கு தானியேல் என்ன பதிலளிக்கிறார்?

6. தானியேலை ஒழித்துக்கட்ட முயன்ற அந்தக் கெட்ட ஆட்களுக்கு என்ன நடக்கிறது, தன் ராஜ்யத்திலுள்ள எல்லோருக்கும் தரியு என்ன எழுதுகிறார்?

கூடுதல் கேள்விகள்:

1. தானியேல் 6:1-28-ஐ வாசி.

(அ) தானியேலுக்கு விரோதமாக செய்யப்பட்ட சதித்திட்டம், நம்முடைய காலத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை நிறுத்துவதற்கு விரோதிகள் செய்துள்ள காரியங்களை நமக்கு எப்படி நினைப்பூட்டுகின்றன? (தானி. 6:7; சங். 94:20; ஏசா. 10:1; ரோ. 8:31)

(ஆ) “மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு” கீழ்ப்பட்டிருப்பதில் இன்று கடவுளுடைய ஊழியர்கள் எவ்வாறு தானியேலின் மாதிரியைப் பின்பற்றலாம்? (தானி. 6:5, 10; ரோ. 13:1; அப். 5:29)

(இ) யெகோவாவை “இடைவிடாமல்” சேவிப்பதில் தானியேலின் மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (தானி. 6:16, 20; பிலி. 3:16; வெளி. 7:15)

கதை 80

கடவுளுடைய ஜனங்கள் பாபிலோனை விட்டு வெளியேறுகின்றனர்

1. படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, இஸ்ரவேலர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

2. ஏசாயாவின் மூலம் யெகோவா சொன்ன தீர்க்கதரிசனத்தை கோரேசு எப்படி நிறைவேற்றினார்?

3. எருசலேமுக்குத் திரும்பப் போக முடியாத இஸ்ரவேலரிடம் கோரேசு என்ன சொல்கிறார்?

4. எருசலேமுக்குத் திரும்ப எடுத்துச் செல்வதற்காக வேறு எதையும்கூட ஜனங்களிடம் கோரேசு கொடுக்கிறார்?

5. எருசலேமுக்குப் போய்ச் சேர எவ்வளவு காலம் எடுக்கிறது?

6. எருசலேம் ஜனங்களில்லாமல் இப்போது எத்தனை ஆண்டுகள் வெறிச்சோடிக் கிடக்கிறது?

கூடுதல் கேள்விகள்:

1. ஏசாயா 44:28; 45:1-4-ஐ வாசி.

(அ) கோரேசுவைப் பற்றிய தீர்க்கதரிசனம் கண்டிப்பாக நிறைவேறும் என்பதை யெகோவா எப்படி வலியுறுத்தினார்? (ஏசா. 55:10, 11; ரோ. 4:17)

(ஆ) எதிர்காலத்தை முன்னறிவிக்கும் திறமை யெகோவா தேவனுக்கு இருப்பதை கோரேசு பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனம் எப்படிக் காட்டுகிறது? (ஏசா. 42:9; 45:21; 46:10, 11; 2 பே. 1:20)

2. எஸ்றா 1:1-11-ஐ வாசி.

எருசலேமுக்குத் திரும்பிப் போக முடியாதவர்கள் செய்ததைப் போல, இன்று முழுநேர சேவையில் ஈடுபட முடிந்தவர்களுடைய ‘கைகளை’ நாம் எப்படித் ‘திடப்படுத்தலாம்’? (எஸ்றா 1:4, 6; ரோ. 12:13; கொலோ. 4:12)

கதை 81

கடவுளுடைய உதவியில் நம்பிக்கை வைத்தல்

1. பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு எத்தனை பேர் நீண்ட தூரப் பயணம் செய்கிறார்கள், அவர்கள் அங்குப் போய்ச் சேரும்போது அந்த இடம் எப்படிக் கிடக்கிறது?

2. அங்குப் போய்ச் சேர்ந்த பிறகு இஸ்ரவேலர் எதைக் கட்ட ஆரம்பிக்கிறார்கள், ஆனால் எதிரிகள் என்ன செய்கிறார்கள்?

3. ஆகாய், சகரியா என்பவர்கள் யார், ஜனங்களுக்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

4. பாபிலோனுக்கு தத்னாய் ஏன் கடிதம் எழுதி அனுப்புகிறான், அவன் என்ன பதிலைப் பெறுகிறான்?

5. கடவுளுடைய ஆலயத்தைச் சரி செய்ய வேண்டியிருப்பதைப் பற்றி கேள்விப்பட்டதும் எஸ்றா என்ன செய்கிறார்?

6. படத்தில் பார்க்கிறபடி, எஸ்றா எதற்காக ஜெபம் செய்கிறார், அவருடைய ஜெபம் எப்படிப் பதிலளிக்கப்படுகிறது, இது நமக்கு எதைக் கற்பிக்கிறது?

கூடுதல் கேள்விகள்:

1. எஸ்றா 3:1-13-ஐ வாசி.

ஏதோவொரு இடத்தில் கடவுளுடைய மக்கள் கூடிவருவதற்குச் சபையே இல்லையென்றால் நாம் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும்? (எஸ்றா 3:3, 6; அப். 17:16, 17; எபி. 13:15)

2. எஸ்ரா 4:1-7-ஐ வாசி.

அவிசுவாசிகளோடு தொடர்பு வைப்பது சம்பந்தமாக யெகோவாவின் ஜனங்களுக்கு செருபாபேல் என்ன முன்மாதிரி வைத்தார்? (யாத். 34:12; 1 கொ. 15:33; 2 கொ. 6:14-17)

3. எஸ்றா 5:1-5, 17; 6:1-22-ஐ வாசி.

(அ) ஆலயம் கட்டும் வேலையை விரோதிகளால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? (எஸ்றா 5:5; ஏசா. 54:17)

(ஆ) விரோதிகள் எதிர்க்கையில் யெகோவாவின் வழிநடத்துதலை நாடுவதற்கு யூதருடைய மூப்பர்கள் செய்த காரியம் கிறிஸ்தவ மூப்பர்களுக்கு எப்படி உற்சாகமளிக்கிறது? (எஸ்றா 6:14, சங். 32:8; ரோ. 8:31; யாக். 1:5)

4. எஸ்றா 8:21-23, 28-36-ஐ வாசி.

ஒரு காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன், எஸ்றாவின் என்ன மாதிரியைப் பின்பற்றுவது சிறந்ததாக இருக்கும்? (எஸ்றா 8:23; சங். 127:1, 2; நீதி. 10:22; யாக். 4:13-15)

கதை 82

மொர்தெகாயும் எஸ்தரும்

1. மொர்தெகாயும் எஸ்தரும் யார்?

2. ஆகாஸ்வேரு ராஜா ஏன் ஒரு புதிய மனைவியைத் தேர்ந்தெடுக்கிறார், யாரைத் தேர்ந்தெடுக்கிறார்?

3. ஆமான் யார், எதனால் அவனுக்குப் பயங்கர கோபம் வருகிறது?

4. என்ன சட்டம் கொண்டு வரப்படுகிறது, மொர்தெகாயிடமிருந்து செய்தி கிடைத்த பிறகு எஸ்தர் என்ன செய்கிறாள்?

5. ஆமானுக்கு என்ன நடக்கிறது, ஆனால் மொர்தெகாய் எப்படிப்பட்ட ஆளாக ஆகிறார்?

6. விரோதிகளிடமிருந்து இஸ்ரவேலர் எப்படிப் பாதுகாக்கப்படுகிறார்கள்?

கூடுதல் கேள்விகள்:

1. எஸ்தர் 2:12-18-ஐ வாசி.

‘சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியை’ வளர்த்துக்கொள்வது முக்கியம் என்பதை எஸ்தர் எப்படிக் காட்டினாள்? (எஸ்தர் 2:15; 1 பே. 3:1-5)

2. எஸ்தர் 4:1-17-ஐ வாசி.

மெய் வணக்கத்தின் சார்பாக செயல்படுவதற்கு எஸ்தருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது போல, நம்முடைய பக்தியையும் யெகோவாவுக்குப் பற்றுறுதியையும் காட்டுவதற்கு இன்று நமக்கு என்ன சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டுள்ளது? (எஸ்தர் 4:13, 14; மத். 5:14-16; 24:14)

3. எஸ்தர் 7:1-6-ஐ வாசி.

துன்புறுத்தல் வருமென தெரிந்தே இன்று கடவுளுடைய மக்கள் அநேகர் எவ்வாறு எஸ்தரைப் போல செயல்பட்டிருக்கிறார்கள்? (எஸ்தர் 7:4; மத். 10:16-22; 1 பே. 2:12)

கதை 83

எருசலேமின் மதில்கள்

1. எருசலேம் நகரத்தில் மதில்கள் இல்லாததைக் குறித்து இஸ்ரவேலர் எப்படி உணர்ந்தார்கள்?

2. நெகேமியா யார்?

3. நெகேமியாவின் வேலை என்ன, அது ஏன் முக்கியமானது?

4. என்ன செய்தியைக் கேட்டு நெகேமியா வருத்தப்படுகிறார், அதனால் அவர் என்ன செய்கிறார்?

5. ராஜா அகாஸ்வேரு நெகேமியாவுக்கு எப்படித் தயவு காட்டுகிறார்?

6. விரோதிகள் தடுக்காதபடி, கட்டிட வேலைக்கு நெகேமியா எப்படி ஏற்பாடு செய்கிறார்?

கூடுதல் கேள்விகள்:

1. நெகேமியா 1:4-6; 2:1-20-ஐ வாசி.

நெகேமியா எப்படி யெகோவாவின் வழிநடத்துதலைத் நாடினார்? (நெ. 2:4, 5; ரோ. 12:12; 1 பே. 4:7)

2. நெகேமியா 3:3-5-ஐ வாசி.

தெக்கோவா ஊரார் அவர்களுடைய பிரபுக்களிலிருந்து வித்தியாசப்பட்டவர்களாய் இருந்தார்கள் என்ற விஷயம் மூப்பர்களுக்கும் உதவி ஊழியர்களுக்கும் என்ன பாடத்தைக் கற்பிக்கிறது? (நெ. 3:5, 27; 2 தெ. 3:7-10; 1 பே. 5:5)

3. நெகேமியா 4:1-23-ஐ வாசி.

(அ) கடும் எதிர்ப்பின் மத்தியிலும் தொடர்ந்து மதிலைக் கட்டுவதற்கு இஸ்ரவேலரை எது தூண்டியது? (நெ. 4:6, 8, 9; சங். 50:15; ஏசா. 65:13, 14)

(ஆ) இஸ்ரவேலரின் உதாரணம் இன்று நம்மை எவ்விதத்தில் ஊக்குவிக்கிறது?

4. நெகேமியா 6:15-ஐ வாசி.

எருசலேமின் மதில்கள் 2 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்ட விஷயம், விசுவாசத்தின் வல்லமையைக் குறித்து எதைக் காட்டுகிறது? (சங். 56:3, 4; மத். 17:20; 19:26)

கதை 84

ஒரு தேவதூதன் மரியாளைச் சந்திக்கிறார்

1. இந்தப் படத்திலுள்ள பெண் யார்?

2. காபிரியேல் தூதன் மரியாளிடம் என்ன சொல்கிறார்?

3. மரியாள் ஓர் ஆணுடன் வாழாவிட்டாலும், அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்பதை காபிரியேல் தூதன் அவளிடம் எப்படிச் சொல்கிறார்?

4. தன் சொந்தக்காரியான எலிசபெத்தை மரியாள் போய்ப் பார்க்கும்போது அங்கு என்ன நடக்கிறது?

5. மரியாளுக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறதென்று யோசேப்புக்குத் தெரிந்ததும் அவர் என்ன நினைக்கிறார், ஆனால் அவர் ஏன் தன் மனதை மாற்றிக்கொள்கிறார்?

கூடுதல் கேள்விகள்:

1. லூக்கா 1:26-56-ஐ வாசி.

(அ) பரலோகத்திலிருந்த கடவுளுடைய குமாரனுடைய உயிர், மரியாளின் கருப்பைக்கு மாற்றப்பட்டபோது அவளுடைய கருமுட்டையில் அபூரணத்தன்மை இருந்ததா என்பதைப் பற்றி லூக்கா 1:35 என்ன காட்டுகிறது? (ஆகா. 2:11-13; யோவா. 6:69; எபி. 7:26; 10:5)

(ஆ) பிறப்பதற்கு முன்பே இயேசு எவ்வாறு கனப்படுத்தப்பட்டார்? (லூக். 1:41-43)

(இ) இன்று விசேஷ ஊழிய சிலாக்கியங்களைப் பெறுகிற கிறிஸ்தவர்களுக்கு மரியாள் என்ன சிறந்த மாதிரியை வைக்கிறாள்? (லூக். 1:38, 46-49; 17:10; நீதி. 11:2)

2. மத்தேயு 1:18-25-ஐ வாசி.

இயேசுவுக்கு இம்மானுவேல் என்ற பெயர் வைக்கப்படாவிட்டாலும், மனிதனாக அவர் வகித்த பாகம் அதன் அர்த்தத்தை எப்படி நிறைவேற்றியது? (மத். 1:22, 23; யோவா. 14:8-10; எபி. 1:1-3)

கதை 85

இயேசு ஒரு தொழுவத்தில் பிறக்கிறார்

1. படத்திலுள்ள சிறு குழந்தை யார், அந்தக் குழந்தையை மரியாள் எங்கே படுக்க வைக்கிறாள்?

2. மிருகங்கள் இருக்கிற தொழுவத்தில் இயேசு ஏன் பிறந்தார்?

3. படத்தில் பார்க்கிறபடி, இந்தத் தொழுவத்திற்கு வருகிறவர்கள் யார், அவர்களிடம் தேவதூதன் என்ன சொல்லியிருந்தார்?

4. இயேசு ஏன் விசேஷித்தவராக இருக்கிறார்?

5. இயேசுவைக் கடவுளுடைய குமாரன் என்று ஏன் அழைக்கலாம்?

கூடுதல் கேள்விகள்:

1. லூக்கா 2:1-20-ஐ வாசி.

(அ) இயேசுவின் பிறப்பு பற்றிய தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதில் அகுஸ்து ராயன் என்ன பங்கு வகித்தார்? (லூக். 2:1-4; மீ. 5:2)

(ஆ) ஒரு நபர், இங்குச் சொல்லப்பட்டுள்ள “நற்பிரியமுள்ள மனிதரில்” ஒருவராக எப்படி ஆகலாம்? (லூக். 2:14, NW; மத். 16:24; யோவா. 17:3; அப். 3:19; எபி. 11:6)

(இ) இரட்சகரின் பிறப்பைக் குறித்து தாழ்மையுள்ள யூத மேய்ப்பர்கள் மகிழ்ச்சி அடைந்தார்களென்றால், இன்று கடவுளுடைய ஊழியர்கள் மகிழ்ச்சியடைவதற்கு என்ன மிகப் பெரிய காரணம் இருக்கிறது? (லூக். 2:10, 11; எபே. 3:8, 9; வெளி. 11:15; 14:6)

கதை 86

ஒரு நட்சத்திரத்தால் வழிநடத்தப்பட்ட ஆட்கள்

1. படத்திலுள்ள ஆட்கள் யார், அவர்களில் ஒருவர் ஏன் ஒரு பிரகாசமான நட்சத்திரத்தைச் சுட்டிக்காட்டுகிறார்?

2. ஏரோது ராஜா ஏன் மனக்கலக்கம் அடைகிறான், அதனால் அவன் என்ன செய்கிறான்?

3. பிரகாசமான அந்த நட்சத்திரம் அந்த ஆட்களை எங்கே வழிநடத்துகிறது, ஆனால் அவர்கள் ஏன் வேறு வழியாய் தங்களுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போய் விடுகிறார்கள்?

4. ஏரோது என்ன கட்டளையிடுகிறான், ஏன்?

5. யோசேப்பை யெகோவா என்ன செய்யச் சொல்கிறார்?

6. இந்தப் புதிய நட்சத்திரத்தை அனுப்பியது யார், ஏன்?

கூடுதல் கேள்வி:

1. மத்தேயு 2:1-23-ஐ வாசி.

சாஸ்திரிகள் இயேசுவைப் பார்க்க வந்தபோது, அவருக்கு எத்தனை வயது, அவர் எங்கே இருந்தார்? (மத். 2:1, 11, 16)

கதை 87

ஆலயத்தில் இளம் இயேசு

1. படத்திலுள்ள இயேசுவுக்கு எத்தனை வயது, அவர் எங்கே இருக்கிறார்?

2. ஒவ்வொரு வருடமும் யோசேப்பு தன் குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு எங்கே போகிறார்?

3. வீட்டிற்குக் கிளம்பி வரும் வழியில் ஒரு நாள் முழுக்க பயணப்பட்டு வந்தபின் யோசேப்பும் மரியாளும் ஏன் எருசலேமுக்குத் திரும்புகிறார்கள்?

4. யோசேப்பும் மரியாளும் இயேசுவை எங்குக் கண்டுபிடிக்கிறார்கள், அங்குள்ள ஜனங்கள் எல்லோரும் ஏன் ஆச்சரியப்படுகிறார்கள்?

5. தன் தாயான மரியாளிடம் இயேசு என்ன சொல்கிறார்?

6. கடவுளைப் பற்றி கற்றுக்கொள்வதில் நாம் எப்படி இயேசுவைப் போல் இருக்கலாம்?

கூடுதல் கேள்விகள்:

1. லூக்கா 2:41-52-ஐ வாசி.

(அ) வருடாந்தர பண்டிகைகளில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுமென நியாயப்பிரமாணம் குறிப்பிட்டிருக்கிற போதிலும் இன்றைய பெற்றோருக்கு யோசேப்பும் மரியாளும் என்ன சிறந்த மாதிரியை வைக்கிறார்கள்? (லூக். 2:41; உபா. 16:16; 31:12; நீதி. 22:6)

(ஆ) பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருப்பதில் இன்றுள்ள இளைஞர்களுக்கு இயேசு என்ன சிறந்த மாதிரியை வைக்கிறார்? (லூக். 2:51; உபா. 5:16; நீதி. 23:22; கொலோ. 3:20)

2. மத்தேயு 13:53-56-ஐ வாசி.

பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள இயேசுவின் சொந்த சகோதரர்கள் நால்வரின் பெயர்கள் யாவை, அவர்களில் இருவர் பிற்பாடு எப்படிக் கிறிஸ்தவ சபையில் சேவை செய்தார்கள்? (மத். 13:55; அப். 12:17; 15:6, 13; 21:18; கலா. 1:19; யாக். 1:1; யூ. 1)

கதை 88

இயேசுவை யோவான் முழுக்காட்டுகிறார்

1. படத்திலுள்ள இரண்டு பேர் யார்?

2. ஒரு நபர் எப்படி முழுக்காட்டப்படுகிறார்?

3. பொதுவாக யாரை யோவான் முழுக்காட்டுகிறார்?

4. என்ன விசேஷ காரணத்திற்காகத் தம்மை முழுக்காட்டும்படி யோவானிடம் இயேசு கேட்கிறார்?

5. இயேசு முழுக்காட்டப்பட்டதைக் குறித்து தாம் சந்தோஷப்படுவதை யெகோவா எப்படிக் காட்டுகிறார்?

6. இயேசு 40 நாட்களுக்குத் தனிமையான ஓர் இடத்திற்குப் போய் விடுகையில் என்ன நடக்கிறது?

7. இயேசுவின் முதல் சீஷர்களில் சிலர் யார், இயேசுவின் முதல் அற்புதம் எது?

கூடுதல் கேள்விகள்:

1. மத்தேயு 3:13-17-ஐ வாசி.

தம்முடைய சீஷர்கள் முழுக்காட்டப்படுவதற்கு இயேசு என்ன மாதிரி வைத்தார்? (சங். 40:7, 8; மத். 28:19, 20; லூக். 3:21, 22)

2. மத்தேயு 4:1-11-ஐ வாசி.

இயேசு வேதவசனங்களை திறம்பட பயன்படுத்தியது, பைபிளைத் தவறாமல் படிக்க நம்மை எப்படி உற்சாகப்படுத்துகிறது? (மத். 4:5-7; 2 பே. 3:17, 18; 1 யோ. 4:1)

3. யோவான் 1:29-51-ஐ வாசி.

முழுக்காட்டுபவரான யோவான் தன்னுடைய சீஷர்களை யாரிடம் வழிநடத்தினார், இன்று அவரை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (யோவா. 1:29, 35, 36; 3:30; மத். 23:10)

4. யோவான் 2:1-12-ஐ வாசி.

யெகோவா தம் ஊழியர்களுக்கு நன்மையான எதையும் கொடுக்காமல் இருந்துவிடுவதில்லை என்பதை இயேசுவின் முதல் அற்புதம் எப்படிக் காட்டியது? (யோவா. 2:9, 10; சங். 84:11; யாக். 1:17)

கதை 89

ஆலயத்தை இயேசு சுத்தப்படுத்துகிறார்

1. ஆடு, மாடுகளையும் பறவைகளையும் ஏன் ஆலயத்தில் விற்கிறார்கள்?

2. எது இயேசுவுக்குக் கோபமூட்டுகிறது?

3. இந்தப் படத்தில் பார்க்கிறபடி, இயேசு என்ன செய்கிறார், புறா விற்கிற ஆட்களிடம் அவர் என்ன கட்டளையிடுகிறார்?

4. இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள், அவர் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறபோது எது அவர்களுடைய ஞாபகத்திற்கு வருகிறது?

5. இயேசு எந்த மாகாணத்தின் வழியாகக் கலிலேயாவுக்குத் திரும்பிச் செல்கிறார்?

கூடுதல் கேள்வி:

1. யோவான் 2:13-25-ஐ வாசி.

ஆலயத்திலிருந்த காசுக்காரர்கள் மீது இயேசு கோபப்பட்டதை வைத்துப் பார்க்கும்போது, ராஜ்ய மன்றத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து நமக்கு என்ன சரியான எண்ணம் இருக்க வேண்டும்? (யோவா. 2:15, 16; 1 கொ. 10:24, 31-33)

கதை 90

கிணற்றின் அருகே ஒரு பெண்ணுடன்

1. சமாரியாவில் ஒரு கிணற்றருகே இயேசு ஏன் நின்றுவிடுகிறார், அங்கே ஒரு பெண்ணிடம் என்ன சொல்கிறார்?

2. அந்தப் பெண் ஏன் ஆச்சரியப்படுகிறாள், அவளிடம் இயேசு என்ன சொல்கிறார், ஏன்?

3. இயேசு எந்தத் தண்ணீரைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதாக அந்தப் பெண் நினைக்கிறாள், ஆனால் உண்மையில் எந்தத் தண்ணீரைப் பற்றி இயேசு பேசுகிறார்?

4. தன்னைப் பற்றி இயேசு சொன்னதைக் கேட்டு அவள் ஏன் வியந்து போகிறாள், இயேசுவுக்கு இந்த விஷயங்களெல்லாம் எப்படித் தெரியும்?

5. கிணற்றருகே வந்த அந்தப் பெண்ணின் விஷயத்திலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

கூடுதல் கேள்விகள்:

1. யோவான் 4:5-43-ஐ வாசி.

(அ) இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி, வித்தியாசப்பட்ட இன அல்லது சமுதாய பின்னணியைச் சேர்ந்தவர்களிடத்தில் நாம் என்ன மனப்பான்மை காட்ட வேண்டும்? (யோவா. 4:9; 1 கொ. 9:22; 1 தீ. 2:3, 4; தீத். 2:11)

(ஆ) இயேசுவின் சீஷராக ஆகுபவருக்கு என்ன ஆன்மீக நன்மைகள் கிடைக்கின்றன? (யோவா. 4:14; ஏசா. 58:11; 2 கொ. 4:16)

(இ) கற்றுக்கொண்டதை மற்றவர்களிடம் சொல்வதற்கு மனமுள்ளவளாய் இருந்த சமாரியப் பெண்ணைப் போல நாமும் எப்படி நம்முடைய போற்றுதலைக் காட்டலாம்? (யோவா. 4:7, 28; மத். 6:33; லூக். 10:40-42)

கதை 91

ஒரு மலைமேல் இயேசு கற்பிக்கிறார்

1. இந்தப் படத்தில், இயேசு எங்கே கற்பித்துக் கொண்டிருக்கிறார், அவருக்கு ரொம்ப பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் யார்?

2. இந்த 12 அப்போஸ்தலர்களின் பெயர்கள் என்ன?

3. இயேசு எந்த ராஜ்யத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்?

4. எதற்காக ஜெபிக்கும்படி ஜனங்களுக்கு இயேசு கற்பிக்கிறார்?

5. ஒருவரையொருவர் நடத்த வேண்டிய விதத்தைப் பற்றி இயேசு என்ன சொல்கிறார்?

கூடுதல் கேள்விகள்:

1. மத்தேயு 5:1-12-ஐ வாசி.

ஆன்மீகத் தேவையைக் குறித்து நாம் உணர்வுடையோராய் இருக்கிறோம் என்பதை எவ்வழிகளில் காட்டலாம்? (மத். 5:3, NW; ரோ. 10:13-15; 1 தீ. 4:13, 15, 16)

2. மத்தேயு 5:21-26-ஐ வாசி.

சகோதரர்களோடு நாம் வைத்திருக்கும் பந்தம் யெகோவாவோடு நாம் வைத்திருக்கும் பந்தத்தைப் பாதிக்கிறது என்பதை மத்தேயு 5:23, 24 எப்படிக் கோடிட்டுக் காட்டுகிறது? (மத். 6:14, 15; சங். 133:1; கொலோ. 3:13; 1 யோ. 4:20)

3. மத்தேயு 6:1-8-ஐ வாசி.

எந்தெந்த விதங்களில் கிறிஸ்தவர்கள் சுய நீதியுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ளக் கூடாது? (லூக். 18:11, 12; 1 கொ. 4:6, 7; 2 கொ. 9:7)

4. மத்தேயு 6:25-34-ஐ வாசி.

பொருள் தேவைகளுக்காக யெகோவாவை நம்பியிருப்பதன் அவசியத்தைப் பற்றி இயேசு என்ன கற்பித்தார்? (யாத். 16:4; சங். 37:25; பிலி. 4:6)

5. மத்தேயு 7:1-11-ஐ வாசி.

மத்தேயு 7:5-ல் உள்ள தத்ரூபமான விவரிப்பு நமக்கு எதைக் கற்பிக்கிறது? (மத். 7:5; நீதி. 26:12; ரோ. 2:1; 14:10; யாக். 4:11, 12)

கதை 92

மரித்தோரை இயேசு உயிர்த்தெழுப்புகிறார்

1. இந்தப் படத்திலுள்ள சிறு பெண்ணின் அப்பா யார், அவரும் அவருடைய மனைவியும் ஏன் மிகவும் கவலைப்படுகிறார்கள்?

2. இயேசுவை யவீரு கண்டுபிடித்ததும் என்ன செய்கிறார்?

3. யவீருவின் வீட்டிற்கு இயேசு போய்க் கொண்டிருக்கும்போது என்ன நடக்கிறது, போகும் வழியில் யவீருவுக்கு என்ன தகவல் கிடைக்கிறது?

4. யவீருவின் வீட்டிலுள்ள ஜனங்கள், இயேசுவைப் பார்த்து ஏன் ஏளனமாகச் சிரிக்கிறார்கள்?

5. அந்தப் பெண்ணின் அப்பா அம்மாவையும் அப்போஸ்தலர்களில் மூவரையும் அந்தப் பிள்ளை வைக்கப்பட்டிருக்கிற அறைக்குள் அழைத்துச் சென்ற பிறகு இயேசு என்ன செய்கிறார்?

6. வேறு யாரையெல்லாம் இயேசு உயிர்த்தெழுப்பியிருக்கிறார், இது எதைக் காட்டுகிறது?

கூடுதல் கேள்விகள்:

1. லூக்கா 8:40-56-ஐ வாசி.

பெரும்பாடுள்ள ஸ்திரீயிடமாகப் பரிவையும் நியாயத்தன்மையையும் இயேசு எப்படிக் காட்டினார், இதிலிருந்து இன்று கிறிஸ்தவ மூப்பர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (லூக். 8:43, 44, 47, 49; லேவி. 15:25-27; மத். 9:12, 13; கொலோ. 3:12-14)

2. லூக்கா 7:11-17-ஐ வாசி.

அன்பானவர்களை மரணத்தில் பறிகொடுத்தவர்கள், நாயீன் ஊரைச் சேர்ந்த விதவையிடம் இயேசு நடந்துகொண்ட விதத்திலிருந்து ஏன் மிகுந்த ஆறுதலை கண்டடையலாம்? (லூக். 7:13; 2 கொ. 1:3, 4; எபி. 4:15)

3. யோவான் 11:17-44-ஐ வாசி.

அன்பான ஒருவர் மரிக்கையில் துக்கித்து அழுவது சகஜமே என்பதை இயேசு எப்படிக் காட்டினார்? (யோவா. 11:33-36, 38; 2 சா. 18:33; 19:1-4)

கதை 93

திரளான ஜனங்களுக்கு இயேசு உணவளிக்கிறார்

1. முழுக்காட்டுபவரான யோவானுக்கு என்ன பயங்கரமான சம்பவம் நடந்துவிட்டது, அதைக் குறித்து இயேசு எப்படி உணருகிறார்?

2. தம்மைப் பின்தொடர்ந்து வந்தோருக்கு இயேசு எப்படி உணவளிக்கிறார், மீதி எவ்வளவு உணவு சேர்க்கப்படுகிறது?

3. இரவில் சீஷர்கள் ஏன் பயப்படுகிறார்கள், பேதுருவுக்கு என்ன ஆகிறது?

4. இரண்டாம் தடவை இயேசு எப்படி ஆயிரக்கணக்கானோருக்கு உணவளிக்கிறார்?

5. கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவாக இயேசு பூமியை ஆளும்போது அந்த ஆட்சி ஏன் மிக நன்றாக இருக்கும்?

கூடுதல் கேள்விகள்:

1. மத்தேயு 14:1-32-ஐ வாசி.

(அ) மத்தேயு 14:23-32-ல் உள்ள பதிவு பேதுருவின் சுபாவத்தை எப்படித் தெளிவாகக் காட்டுகிறது?

(ஆ) பேதுரு, முன்பின் யோசிக்காமல் நடந்துகொள்ளும் சுபாவத்தை விட்டுவிட்டு நன்கு முதிர்ச்சியுள்ளவராக ஆனார் என்பதை பைபிள் பதிவு எப்படிக் காட்டுகிறது? (மத். 14:27-30; யோவா. 18:10; 21:7; அப். 2:14, 37-40; 1 பே. 5: 6, 10)

2. மத்தேயு 15:29-38-ஐ வாசி.

தம் பிதா கொடுத்த உணவுக்கு இயேசு எப்படி மதிப்பு காட்டினார்? (மத். 15:37; யோவா. 6:12; கொலோ. 3:15)

3. யோவான் 6:1-21-ஐ வாசி.

அரசியல் விவகாரங்களில் இன்று கிறிஸ்தவர்கள் எப்படி இயேசுவின் மாதிரியைப் பின்பற்றலாம்? (யோவா. 6:15; மத். 22:21; ரோ. 12:2; 13:1-4)

கதை 94

சிறு பிள்ளைகளை அவர் நேசிக்கிறார்

1. நீண்ட தூரம் பயணம் செய்து திரும்பி வருகையில் சீஷர்கள் எதற்காகச் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்?

2. இயேசு ஏன் ஒரு சிறு பையனை அழைத்து, சீஷர்கள் முன்பாக அவனை நிறுத்துகிறார்?

3. அப்போஸ்தலர்கள் எந்த விதத்தில் சிறு பிள்ளைகளைப் போல இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்?

4. சில மாதங்களுக்குப் பிறகு, சிறு பிள்ளைகளைத் தாம் நேசிப்பதை இயேசு எப்படிக் காட்டினார்?

கூடுதல் கேள்விகள்:

1. மத்தேயு 18:1-4-ஐ வாசி.

கற்பிப்பதற்கு இயேசு ஏன் உவமைகளைப் பயன்படுத்தினார்? (மத். 13:34, 36; மாற். 4:33, 34)

2. மத்தேயு 19:13-15-ஐ வாசி.

ராஜ்ய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்குச் சிறு பிள்ளைகளின் என்ன குணங்களை நாம் பின்பற்ற வேண்டும்? (சங். 25:9; 138:6; 1 கொ. 14:20)

3. மாற்கு 9:33-37-ஐ வாசி.

முதன்மையான ஸ்தானங்களைப் பெற விரும்புவதைப் பற்றி சீஷர்களுக்கு இயேசு என்ன கற்பித்தார்? (மாற். 9:35; மத். 20:25, 26; கலா. 6:3; பிலி. 2:5-8)

4. மாற்கு 10:13-16-ஐ வாசி.

இயேசு எந்தளவுக்குச் சிநேகப்பான்மையானவராய் இருந்தார், அவருடைய முன்மாதிரியிலிருந்து கிறிஸ்தவ மூப்பர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (மாற். 6:30-34; பிலி. 2:1-4; 1 தீ. 4:12)

கதை 95

இயேசு கற்பிக்கிற விதம்

1. இயேசுவிடம் ஓர் ஆள் என்ன கேள்வியைக் கேட்கிறான், ஏன்?

2. சில சமயங்களில் இயேசு எதைச் சொல்லி கற்பிக்கிறார், யூதர்களையும் சமாரியர்களையும் பற்றி நாம் ஏற்கெனவே என்ன தெரிந்திருக்கிறோம்?

3. இயேசு சொன்ன கதையின்படி, எரிகோவுக்குப் போகும் வழியில் ஒரு யூதனுக்கு என்ன நடக்கிறது?

4. அந்த வழியே செல்கிற ஒரு யூத ஆசாரியனும் லேவியனும் அதைப் பார்த்து என்ன செய்கிறார்கள்?

5. இந்தப் படத்தில் பார்க்கிறபடி, அடித்துப்போடப்பட்ட அந்த யூதனுக்கு யார் உதவி செய்கிறான்?

6. இயேசு இந்தக் கதையை சொல்லி முடித்ததும் என்ன கேள்வி கேட்கிறார், அதற்கு அந்த ஆள் என்ன பதில் சொல்கிறான்?

கூடுதல் கேள்விகள்:

1. லூக்கா 10:25-37-ஐ வாசி.

(அ) நியாயப்பிரமாணத்தை நன்கு அறிந்த அந்த ஆள் தம்மிடம் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல், விஷயத்தைப் புரிந்துகொள்வதற்கு இயேசு எப்படி உதவினார்? (லூக். 10:26; மத். 16:13-16)

(ஆ) கேட்போரின் மனதிலுள்ள தப்பெண்ணத்தைப் போக்க இயேசு எப்படி உவமைகளைப் பயன்படுத்தினார்? (லூக். 10:36, 37; 18:9-14; தீத். 1:9)

கதை 96

நோயுற்றவர்களை இயேசு சுகப்படுத்துகிறார்

1. இஸ்ரவேல் தேசம் முழுக்க பிரயாணம் செய்கையில் இயேசு என்ன செய்கிறார்?

2. இயேசு முழுக்காட்டப்பட்டு ஏறக்குறைய மூன்று வருடங்களுக்குப் பிறகு சீஷர்களிடம் அவர் என்ன சொல்கிறார்?

3. இந்தப் படத்திலுள்ள ஆட்கள் யார், இந்தப் பெண்ணுக்கு இயேசு என்ன செய்கிறார்?

4. மதத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போதெல்லாம் இயேசு கொடுக்கிற பதில் அவர்களை ஏன் தலைகுனிய வைக்கிறது?

5. இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் எரிகோவுக்கு அருகே இருக்கையில் குருடரான இரண்டு பிச்சைக்காரர்களுக்கு இயேசு என்ன செய்கிறார்?

6. இயேசு ஏன் அற்புதங்களைச் செய்கிறார்?

கூடுதல் கேள்விகள்:

1. மத்தேயு 15:30, 31-ஐ வாசி.

யெகோவாவுடைய வல்லமையை என்ன அருமையான விதத்தில் இயேசு வெளிக்காட்டினார், புதிய உலகைப் பற்றி யெகோவா கொடுத்துள்ள வாக்குறுதியை நாம் நன்கு புரிந்துகொள்வதற்கு இது எப்படி உதவுகிறது? (சங். 37:29; ஏசா. 33:24)

2. லூக்கா 13:10-17-ஐ வாசி.

ஓய்வுநாளில் இயேசு குறிப்பிடத்தக்க சில அற்புதங்களைச் செய்தது, அவருடைய ஆயிர வருட ஆட்சியில் மனிதகுலத்திற்கு அளிக்கப்போகும் பரிகாரத்தை எவ்விதத்தில் காட்டுகிறது? (லூக். 13:10-13; சங். 46:9; மத். 12:8; கொலோ. 2:16, 17; வெளி. 21:1-4)

3. மத்தேயு 20:29-34-ஐ வாசி.

ஜனங்களுக்கு உதவி செய்ய முடியாதளவுக்கு இயேசு எப்போதுமே ரொம்ப வேலையாக இருக்கவில்லை என்பதை இந்தப் பதிவு எப்படிக் காட்டுகிறது, இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (உபா. 15:7; யாக். 2:15, 16; 1 யோ. 3:17)

கதை 97

இயேசு ராஜாவாக வருகிறார்

1. எருசலேமுக்கு அருகிலுள்ள ஒரு சின்ன கிராமத்திற்கு இயேசு வருகையில் சீஷர்களை என்ன செய்யச் சொல்கிறார்?

2. இந்தப் படத்தில் பார்க்கிறபடி, நகரத்துக்கு அருகில் இயேசு வருகிறபோது என்ன நடக்கிறது?

3. குருடரையும் முடவரையும் இயேசு சுகப்படுத்துவதைப் பார்க்கிற சிறு பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?

4. எரிச்சலடைந்த ஆசாரியர்களிடம் இயேசு என்ன சொல்கிறார்?

5. இயேசுவைத் துதித்த சிறு பிள்ளைகளைப் போல நாம் எப்படி இருக்க முடியும்?

6. சீஷர்கள் எதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்?

கூடுதல் கேள்விகள்:

1. மத்தேயு 21:1-17-ஐ வாசி.

(அ) ரோம ஆட்சிக் காலத்தில் படைத் தலைவர்கள் வெற்றி பவனி வந்ததைப் போல் அல்லாமல் ஒரு ராஜாவாக இயேசு எப்படி எருசலேமுக்கு வந்தார்? (மத். 21:4, 5; சக. 9:9; பிலி. 2:5-8; கொலோ. 2:15)

(ஆ) ஆலயத்திற்குள் நுழைந்த இயேசுவைப் பார்த்து 118-ம் சங்கீதத்தின் வார்த்தைகளைச் சொன்ன சின்ன பையன்களிடமிருந்து இளைஞர்கள் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்? (மத். 21:9, 15; சங். 118:25, 26; 2 தீ. 3:15; 2 பே. 3:18)

2. யோவான் 12:12-16-ஐ வாசி.

இயேசுவைப் பற்றி ஆர்ப்பரித்த ஜனங்கள் குருத்தோலைகளைப் பிடித்திருந்தது எதை அடையாளப்படுத்துகிறது? (யோவா. 12:13; பிலி. 2:10; வெளி. 7:9, 10)

கதை 98

ஒலிவ மலையின் மேல்

1. இந்தப் படத்தில் இயேசு எங்கே இருக்கிறார், அவரோடு யாரெல்லாம் இருக்கிறார்கள்?

2. ஆலயத்தில் இயேசுவை ஆசாரியர்கள் என்ன செய்ய முயன்றார்கள், அவர்களைப் பார்த்து இயேசு என்ன சொன்னார்?

3. இயேசுவிடம் அப்போஸ்தலர்கள் என்ன கேட்கிறார்கள்?

4. பரலோகத்தில் ராஜாவாக தாம் ஆட்சி செய்யும்போது பூமியில் நடக்கப்போகும் சில காரியங்களைப் பற்றி அப்போஸ்தலர்களிடம் இயேசு ஏன் சொல்கிறார்?

5. பூமியிலுள்ள எல்லாத் தீமைக்கும் தாம் முடிவுகட்டுவதற்கு முன் என்ன வேலை நடக்கும் என இயேசு சொல்கிறார்?

கூடுதல் கேள்விகள்:

1. மத்தேயு 23:1-39-ஐ வாசி.

(அ) பட்டப் பெயர்களைப் பயன்படுத்துவது சரியானதே என பைபிள் குறிப்பிடுகிற போதிலும், கிறிஸ்தவ சபையில் முகஸ்துதிக்காகப் பட்டப் பெயர்களைப் பயன்படுத்துவது சம்பந்தமாக மத்தேயு 23:8-11-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் எதைக் காட்டுகின்றன? (மத். 23:8-11; அப். 26:25; ரோ. 13:7; 1 பே. 2:13, 14)

(ஆ) ஜனங்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதைத் தடுப்பதற்குப் பரிசேயர்கள் என்ன செய்தார்கள், இன்றும்கூட மதத் தலைவர்கள் இதேப் போன்ற தந்திரங்களை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? (மத். 23:13; லூக். 11:52; யோவா. 9:22; 12:42; 1 தெ. 2:16)

2. மத்தேயு 24:1-14-ஐ வாசி.

(அ) சகிப்புத்தன்மையின் முக்கியத்துவத்தை மத்தேயு 24:13 எப்படி வலியுறுத்துகிறது?

(ஆ) மத்தேயு 24:13-ல் குறிப்பிட்டுள்ள “முடிவு” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? (மத். 16:27; ரோ. 14:10-12; 2 கொ. 5:10)

3. மாற்கு 13:3-10-ஐ வாசி.

நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் அவசரத்தன்மையை மாற்கு 13:10-⁠ல் உள்ள எந்த வார்த்தை சுட்டிக்காட்டுகிறது, இயேசுவின் வார்த்தைகள் நம்மை என்ன செய்யத் தூண்ட வேண்டும்? (ரோ. 13:11, 12; 1 கொ. 7:29-31; 2 தீ. 4:2)

கதை 99

மேல் மாடியிலுள்ள ஓர் அறையில்

1. இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, இயேசுவும் அவருடைய 12 அப்போஸ்தலர்களும் மேல் மாடியில் இந்தப் பெரிய அறைக்கு ஏன் வந்திருக்கிறார்கள்?

2. அங்கிருந்து வெளியே போய்க் கொண்டிருப்பவன் யார், என்ன செய்வதற்காக அவன் போகிறான்?

3. பஸ்கா உணவைச் சாப்பிட்டு முடித்த பின், என்ன விசேஷித்த உணவை இயேசு கொடுக்கிறார்?

4. பஸ்காவைச் சாப்பிட்டது இஸ்ரவேலருக்கு எந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தியது, இந்த விசேஷித்த உணவு இயேசுவைப் பின்பற்றுவோருக்கு எதை நினைவுபடுத்துகிறது?

5. கர்த்தரின் இராப்போஜனத்தை முடித்த பிறகு, சீஷர்களிடம் இயேசு என்ன சொல்கிறார், அவர்கள் என்ன செய்கிறார்கள்?

கூடுதல் கேள்விகள்:

1. மத்தேயு 26:14-30-ஐ வாசி.

(அ) இயேசுவை யூதாஸ் காட்டிக்கொடுத்தது வேண்டுமென்றே செய்த காரியம்தான் என்பதை மத்தேயு 26:15 எப்படிக் காட்டுகிறது?

(ஆ) இயேசு சிந்திய இரத்தம் என்ன இரண்டு நோக்கங்களை நிறைவேற்றியது? (மத். 26:27, 28; எரே. 31:31-33; எபே. 1:7; எபி. 9:19, 20)

2. லூக்கா 22:1-39-ஐ வாசி.

என்ன கருத்தில் யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்? (லூக். 22:3; யோவா. 13:2; அப். 1:24, 25)

3. யோவான் 13:1-20-ஐ வாசி.

(அ) யோவான் 13:2-ஐ கவனிக்கையில், யூதாஸ் செய்த காரியத்திற்கு அவனைக் குற்றம்சாட்ட முடியுமா, இதிலிருந்து கடவுளுடைய ஊழியர்கள் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (ஆதி. 4:7; 2 கொ. 2:11; கலா. 6:1; யாக். 1:13, 14)

(ஆ) மனதில் பதிய வைக்கும் நடைமுறையான என்ன பாடத்தை இயேசு கற்பித்தார்? (யோவா. 13:15; மத். 23:11; 1 பே. 2:21)

4. யோவான் 17:1-26-ஐ வாசி.

என்ன கருத்தில் தம்முடைய சீஷர்கள் “ஒன்றாயிருக்கும்படி” இயேசு ஜெபித்தார்? (யோவா. 17:11, 21-23; ரோ. 13:8; 14:19; கொலோ. 3:14)

கதை 100

தோட்டத்தில் இயேசு

1. மேல் மாடியிலுள்ள அறையிலிருந்து கிளம்பி, இயேசுவும் அப்போஸ்தலர்களும் எங்கே போகிறார்கள், அவர்களிடம் இயேசு என்ன செய்யச் சொல்கிறார்?

2. அப்போஸ்தலர்கள் இருக்கிற இடத்திற்குத் திரும்பி வரும்போது அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பதை இயேசு பார்க்கிறார், இதுபோல் எத்தனை முறை நடக்கிறது?

3. தோட்டத்திற்கு யார் வருகிறார்கள், இந்தப் படத்தில் பார்க்கிறபடி யூதாஸ் காரியோத்து என்ன செய்கிறான்?

4. இயேசுவை யூதாஸ் ஏன் முத்தமிடுகிறான், பேதுரு என்ன செய்கிறார்?

5. பேதுருவிடம் இயேசு என்ன சொல்கிறார், ஆனால் தேவதூதர்கள் யாரையாவது அனுப்புமாறு கடவுளிடம் இயேசு ஏன் கேட்பதில்லை?

கூடுதல் கேள்விகள்:

1. மத்தேயு 26:36-56-ஐ வாசி.

(அ) சீஷர்களுக்கு இயேசு ஆலோசனை கொடுத்த விதம், இன்று கிறிஸ்தவ மூப்பர்களுக்கு எப்படி ஒரு சிறந்த மாதிரியாக இருக்கிறது? (மத். 20:25-28; 26:40, 41; கலா. 5:17; எபே. 4:29, 31, 32)

(ஆ) சக மனிதரைத் தாக்குவதற்கு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை இயேசு எப்படிக் கருதினார்? (மத். 26:52; லூக். 6:27, 28; யோவா. 18:36)

2. லூக்கா 22:39-53-ஐ வாசி.

கெத்செமனே தோட்டத்தில் இயேசுவைப் பலப்படுத்துவதற்கு ஒரு தேவதூதன் தோன்றியது, இயேசு விசுவாசத்தில் உறுதியற்றவராய் இருந்தாரென காட்டியதா? விளக்கமாகச் சொல். (லூக். 22:41-43; ஏசா. 49:8; மத். 4:10, 11; எபி. 5:7)

3. யோவான் 18:1-12-ஐ வாசி.

விரோதிகளிடமிருந்து தம் சீஷர்களை இயேசு எப்படிப் பாதுகாத்தார், இந்த உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (யோவா. 10:11, 12; 18:1, 6-9; எபி. 13:6; யாக். 2:25)

கதை 101

இயேசு கொல்லப்படுகிறார்

1. இயேசு மரிப்பதற்கு முக்கிய காரணம் யார்?

2. இயேசுவை மதத் தலைவர்கள் பிடித்துக்கொண்டு போகும்போது அப்போஸ்தலர்கள் என்ன செய்கிறார்கள்?

3. பிரதான ஆசாரியனான காய்பாவின் வீட்டில் என்ன நடக்கிறது?

4. பேதுரு ஏன் வெளியே போய் அழுகிறார்?

5. பிலாத்துவிடம் இயேசுவைத் திரும்ப கொண்டுவந்த பிறகு, ஆசாரியர்கள் என்ன செய்யச் சொல்லி கூச்சலிடுகிறார்கள்?

6. வெள்ளிக்கிழமை பிற்பகலில் இயேசுவை என்ன செய்கிறார்கள், தமக்கு அருகே கழுமரத்தில் அறையப்பட்டிருக்கிற கள்ளனிடம் இயேசு என்ன வாக்குக் கொடுக்கிறார்?

7. இயேசு சொன்ன அந்தப் பரதீஸ் எங்கே இருக்கும்?

கூடுதல் கேள்விகள்:

1. மத்தேயு 26:57-75-ஐ வாசி.

யூத உயர்நீதி மன்றத்தின் உறுப்பினர்களுடைய இருதயம் பொல்லாததாய் இருந்தது என்பதை அவர்கள் எவ்விதத்தில் காட்டினார்கள்? (மத். 26:59, 67, 68)

2. மத்தேயு 27:1-50-ஐ வாசி.

யூதாஸின் மனவருத்தம் உண்மையானதல்ல என்று நம்மால் ஏன் சொல்ல முடியும்? (மத். 27:3, 4; மாற். 3:29; 14:21; 2 கொ. 7:10, 11)

3. லூக்கா 22:54-71-ஐ வாசி.

இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இரவில் அவரை பேதுரு மறுதலித்ததிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (லூக். 22:60-62; மத். 26:31-35; 1 கொ. 10:12)

4. லூக்கா 23:1-49-ஐ வாசி.

தமக்கு அநீதி இழைக்கப்பட்டபோது இயேசு எப்படி நடந்துகொண்டார், இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (லூக். 23:33, 34; ரோ. 12:17-19; 1 பே. 2:23)

5. யோவான் 18:12-40-ஐ வாசி.

மனித பயத்தால் சிறிது நேரத்திற்கு பேதுரு தடுமாறியபோதிலும், பிற்பாடு ஒரு தலைசிறந்த அப்போஸ்தலராக ஆனார் என்பது எதைக் காட்டுகிறது? (யோவா. 18:25-27; 1 கொ. 4:2; 1 பே. 3:14, 15; 5:8, 9)

6. யோவான் 19:1-30-ஐ வாசி.

(அ) உணவு, உடை, உறைவிடம் போன்ற விஷயங்களில் இயேசு எப்படிச் சமநிலையோடு இருந்தார்? (யோவா. 2:1, 2, 9, 10; 19:23, 24; மத். 6:31, 32; 8:20)

(ஆ) மரிக்கப் போகும் சமயத்தில் இயேசு சொன்ன வார்த்தைகள், யெகோவாவின் பேரரசுரிமையைக் கடைசிவரை ஆதரிப்பதில் அவர் ஜெயம் கொண்டார் என எப்படிக் காட்டுகின்றன? (யோவா. 16:33; 19:30; 2 பே. 3:14; 1 யோ. 5:4)

கதை 102

இயேசு உயிரோடிருக்கிறார்

1. இந்தப் படத்திலுள்ள பெண்ணும் இரண்டு ஆண்களும் யார், அவர்கள் நிற்கும் இடம் எது?

2. இயேசுவின் கல்லறையைக் காவல் காக்க காவலர்களை அனுப்பி வைக்குமாறு அந்த ஆசாரியர்களிடம் பிலாத்து ஏன் சொல்கிறான்?

3. இயேசு மரித்த மூன்றாம் நாளன்று, அதிகாலையில் ஒரு தேவதூதன் என்ன செய்கிறார், ஆனால், ஆசாரியர்கள் என்ன செய்கிறார்கள்?

4. இயேசுவின் கல்லறையைப் பார்க்க வந்த சில பெண்கள் ஏன் ஆச்சரியப்படுகிறார்கள்?

5. பேதுருவும் யோவானும் ஏன் இயேசுவின் கல்லறைக்கு ஓடுகிறார்கள், அங்கே அவர்கள் எதைப் பார்க்கிறார்கள்?

6. இயேசுவின் உடலுக்கு என்ன ஆனது, தாம் உயிரோடு இருப்பதைச் சீஷர்களுக்குக் காட்டுவதற்காக அவர் என்ன செய்கிறார்?

கூடுதல் கேள்விகள்:

1. மத்தேயு 27:62-66; 28:1-15-ஐ வாசி.

இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட சமயத்தின்போது ஆசாரியர்களும் பரிசேயர்களும் மூப்பர்களும் எப்படிப் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்தார்கள்? (மத். 12:24, 31, 32; 28:11-15)

2. லூக்கா 24:1-12-ஐ வாசி.

பெண்களை நம்பகமான சாட்சிகளாக யெகோவா கருதுகிறார் என்பதை இயேசுவின் உயிர்த்தெழுதல் பதிவு எப்படிக் காட்டுகிறது? (லூக். 24:4, 9, 10; மத். 28:1-7)

3. யோவான் 20:1-12-ஐ வாசி.

ஒரு பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றால் பொறுமையாக இருப்பது அவசியம் என்பதை யோவான் 20:8, 9 வசனங்கள் எப்படிக் காட்டுகின்றன? (நீதி. 4:18; மத். 17:22, 23; லூக். 24:5-8; யோவா. 16:12)

கதை 103

பூட்டப்பட்ட அறைக்குள்

1. தோட்டக்காரர் என நினைத்த ஓர் ஆளிடம் மரியாள் என்ன சொல்கிறாள், ஆனால் அவர் இயேசுதான் என்பதை அவள் எப்படி அறிந்துகொள்கிறாள்?

2. இரண்டு சீஷர்கள் எம்மாவு என்ற கிராமத்திற்கு நடந்து போய்க்கொண்டிருக்கும்போது என்ன நடக்கிறது?

3. இந்த இரண்டு சீஷர்களும் இயேசுவைப் பார்த்ததாக அப்போஸ்தலர்களிடம் சொல்லும்போது என்ன ஆச்சரியமான காரியம் நடக்கிறது?

4. தம்மைப் பின்பற்றியவர்களுக்கு இயேசு எத்தனை முறை காட்சியளித்தார்?

5. கர்த்தரைப் பார்த்ததாக தோமாவிடம் சீஷர்கள் சொன்னபோது அவர் என்ன சொல்கிறார், எட்டு நாட்களுக்குப் பிற்பாடு என்ன நடக்கிறது?

கூடுதல் கேள்விகள்:

1. யோவான் 20:11-29-ஐ வாசி.

பாவங்களை மன்னிக்க மனிதருக்கு அதிகாரம் உண்டு என்றா யோவான் 20:23-⁠ல் இயேசு சொன்னார்? விளக்கமாகச் சொல். (சங். 49:2, 8; ஏசா. 55:7; 1 தீ. 2:5, 6; 1 யோ. 2:1, 2)

2. லூக்கா 24:13-43-ஐ வாசி.

பைபிள் சத்தியங்களை ஏற்றுக்கொள்வதற்காக நம் இருதயத்தை எப்படிப் பக்குவப்படுத்தலாம்? (லூக். 24:32, 33; எஸ்றா 7:10; மத். 5:3, NW; அப். 16:14; எபி. 5:11-14)

கதை 104

இயேசு பரலோகத்துக்குத் திரும்பிச் செல்கிறார்

1. ஒருமுறை எத்தனை சீஷர்களுக்கு இயேசு காட்சியளிக்கிறார்? அப்போது அவர்களிடம் எதைப் பற்றி பேசுகிறார்?

2. கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன, இயேசு பரலோகத்திலிருந்து ஆயிரம் வருடம் ஆட்சி செய்யும்போது பூமி எப்படி இருக்கும்?

3. இயேசு தம் சீஷர்களுக்கு எத்தனை நாட்களாக காட்சி அளித்துக்கொண்டிருந்தார், இப்போது அவர் என்ன செய்யப் போகிறார்?

4. இயேசு தம் சீஷர்களை விட்டுப்போவதற்கு முன், அவர்களை என்ன செய்யச் சொல்கிறார்?

5. இந்தப் படத்தில் என்ன நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறாய், அவர் எப்படி அவர்களுடைய கண்களுக்கு மறைவாகி விடுகிறார்?

கூடுதல் கேள்விகள்:

1. ஒன்று கொரிந்தியர் 15:3-8-ஐ வாசி.

இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றி அப்போஸ்தலன் பவுலால் ஏன் அவ்வளவு உறுதியாக பேச முடிந்தது, என்னென்ன விஷயங்களைப் பற்றி இன்று கிறிஸ்தவர்களால் உறுதியுடன் பேச முடியும்? (1 கொ. 15:4, 7, 8; ஏசா. 2:2, 3; மத். 24:14; 2 தீ. 3:1-5)

2. அப்போஸ்தலர் 1:1-11-ஐ வாசி.

அப்போஸ்தலர் 1:8-ல் முன்னறிவித்துள்ளபடி, பிரசங்க வேலை எந்தளவு விரிவாக நடைபெற்றது? (அப். 6:7; 9:31; 11:19-21; கொலோ. 1:23)

கதை 105

எருசலேமில் காத்திருக்கும்போது

1. இந்தப் படம் காட்டுகிறபடி, எருசலேமில் காத்துக்கொண்டிருந்த இயேசுவின் சீஷர்களுக்கு என்ன நடக்கிறது?

2. பண்டிகைக்காக எருசலேமுக்கு வந்தவர்கள் ஏன் ஆச்சரியம் அடைகிறார்கள்?

3. கூடிவந்த ஜனங்களுக்கு பேதுரு எதைப் பற்றி விளக்குகிறார்?

4. பேதுரு சொன்னதைக் கேட்ட பிறகு ஜனங்கள் எவ்வாறு உணருகிறார்கள், அவர்களை பேதுரு என்ன செய்யச் சொல்கிறார்?

5. பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று எத்தனை பேர் முழுக்காட்டப்படுகிறார்கள்?

கூடுதல் கேள்விகள்:

1. அப்போஸ்தலர் 2:1-47-ஐ வாசி.

(அ) இயேசுவின் மரணத்திற்கு யூத தேசத்தார் அனைவருமே காரணம் என்பதை அப்போஸ்தலர் 2:23, 36-ல் உள்ள பேதுருவின் வார்த்தைகள் எப்படிக் காட்டுகின்றன? (1 தெ. 2:14, 15)

(ஆ) வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுவதற்கு பேதுரு எப்படி ஒரு சிறந்த மாதிரி வைத்தார்? (அப். 2:16, 17, 29, 31, 36, 39; கொலோ. 4:6)

(இ) இயேசு வாக்குக் கொடுத்திருந்த ‘பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களில்’ முதலாவது திறவுகோலை பேதுரு எப்படிப் பயன்படுத்தினார்? (அப். 2:14, 22-24, 37, 38; மத். 16:19)

கதை 106

சிறையிலிருந்து விடுதலை

1. ஒரு மத்தியான வேளையில் பேதுருவும் யோவானும் ஆலயத்துக்குப் போகும்போது என்ன நடக்கிறது?

2. நொண்டியாயிருந்த ஒருவனிடம் பேதுரு என்ன சொல்கிறார், பணத்தைவிட மதிப்புள்ள எதை அவனுக்கு பேதுரு கொடுக்கிறார்?

3. மதத் தலைவர்கள் ஏன் கோபமடைகிறார்கள், பேதுருவையும் யோவானையும் அவர்கள் என்ன செய்கிறார்கள்?

4. மதத் தலைவர்களிடம் பேதுரு என்ன சொல்கிறார், அப்போஸ்தலர்களுக்கு என்ன எச்சரிப்பு கொடுக்கப்படுகிறது?

5. மதத் தலைவர்கள் ஏன் பொறாமைப்படுகிறார்கள், அப்போஸ்தலர்களை இரண்டாவது முறை சிறையில் போடும்போது என்ன நடக்கிறது?

6. அப்போஸ்தலர்களை நியாயசங்கத்துக்கு இழுத்துக் கொண்டுவரும்போது அவர்கள் எப்படிப் பதிலளிக்கிறார்கள்?

கூடுதல் கேள்விகள்:

1. அப்போஸ்தலர் 3:1-10-ஐ வாசி.

அற்புதங்களைச் செய்வதற்கான வல்லமை நமக்குக் கொடுக்கப்படாவிட்டாலும், ராஜ்ய செய்தியின் மதிப்பைப் புரிந்துகொள்ள அப்போஸ்தலர் 3:6-ல் உள்ள பேதுருவின் வார்த்தைகள் நமக்கு எப்படி உதவுகின்றன?

2. அப்போஸ்தலர் 4:1-31-ஐ வாசி.

ஊழியத்தில் எதிர்ப்பைச் சந்திக்கையில், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சகோதரர்களை நாம் எவ்விதத்தில் பின்பற்ற வேண்டும்? (அப். 4:29, 31; எபே. 6:18-20; 1 தெ. 2:2)

3. அப்போஸ்தலர் 5:17-42-ஐ வாசி.

கடந்த காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி, யெகோவாவின் சாட்சிகளல்லாத சிலர் பிரசங்க வேலை சம்பந்தமாக எப்படி நியாயத்தன்மை காண்பித்திருக்கிறார்கள்? (அப். 5:34-39)

கதை 107

ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படுகிறார்

1. ஸ்தேவான் யார், என்ன செய்வதற்குக் கடவுள் அவருக்கு உதவி செய்திருக்கிறார்?

2. ஸ்தேவான் எதை எடுத்துச் சொல்வதால் மதத் தலைவர்கள் பயங்கரமாகக் கோபப்படுகிறார்கள்?

3. அந்த ஆட்கள் ஸ்தேவானை நகரத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டு போய் என்ன செய்கிறார்கள்?

4. இந்தப் படத்தில், மேலங்கிகளைக் கவனித்துக்கொண்டு நிற்கிற அந்த வாலிபன் யார்?

5. ஸ்தேவான் மரிப்பதற்கு முன்பு, யெகோவாவிடம் என்ன சொல்லி ஜெபம் செய்கிறார்?

6. நமக்கு எதிராக யாரேனும் தீங்கு செய்தால் ஸ்தேவானைப் போல் நாம் என்ன செய்ய வேண்டும்?

கூடுதல் கேள்விகள்:

1. அப்போஸ்தலர் 6:8-15-ஐ வாசி.

யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலையை நிறுத்துவதற்காக மதத் தலைவர்கள் என்னென்ன சூழ்ச்சி வேலைகளைச் செய்திருக்கிறார்கள்? (அப். 6:9, 11, 13)

2. அப்போஸ்தலர் 7:1-60-ஐ வாசி.

(அ) நியாயசங்கத்திற்கு முன்பாக நற்செய்தியை ஆதரித்து ஸ்தேவான் திறம்பட பேசுவதற்கு எது உதவியது, இந்த உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (அப். 7:51-53; ரோ. 15:4; 2 தீ. 3:14-17; 1 பே. 3:15)

(ஆ) நம் வேலையை எதிர்ப்பவர்களிடமாக நாம் எப்படிப்பட்ட மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்? (அப். 7:58-60; மத். 5:44; லூக் 23:33, 34)

கதை 108

தமஸ்குவுக்குப் போகும் வழியில்

1. ஸ்தேவான் கொல்லப்பட்ட பிறகு சவுல் என்ன செய்கிறார்?

2. தமஸ்குவுக்குப் போகும் வழியில் சவுலுக்கு என்ன ஆச்சரியமான காரியம் நடக்கிறது?

3. சவுலை இயேசு என்ன செய்யச் சொல்கிறார்?

4. அனனியாவிடம் இயேசு என்ன சொல்கிறார், சவுலுக்கு எப்படி மறுபடியும் பார்வை கிடைக்கிறது?

5. சவுல் பிற்பாடு என்ன பெயரில் அறியப்படுகிறார், அவரைக் கடவுள் எப்படிப் பயன்படுத்துகிறார்?

கூடுதல் கேள்விகள்:

1. அப்போஸ்தலர் 8:1-4-ஐ வாசி.

புதிதாக உருவான கிறிஸ்தவ சபையை அடுத்தடுத்து துன்புறுத்தல்கள் தாக்கியது கிறிஸ்தவம் பரவுவதற்கு எப்படி உதவியது, நம்முடைய காலத்திலும் இது போன்ற என்ன காரியம் நடந்திருக்கிறது? (அப். 8:4; ஏசா. 54:17)

2. அப்போஸ்தலர் 9:1-20-ஐ வாசி.

சவுல் செய்ய வேண்டியிருந்த என்ன மூன்று வேலைகளை இயேசு வெளிப்படுத்தினார்? (அப். 9:15; 13:5; 26:1; 27:24; ரோ. 11:13)

3. அப்போஸ்தலர் 22:6-16-ஐ வாசி.

நாம் எப்படி அனனியாவைப் போல் இருக்கலாம், அது ஏன் முக்கியம்? (அப். 22:12; 1 தீ. 3:7; 1 பே. 1:14-16; 2:12)

4. அப்போஸ்தலர் 26:8-20-ஐ வாசி.

சவுல் ஒரு கிறிஸ்தவராக மாறியது, அவிசுவாசியான கணவனையோ மனைவியையோ உடையவர்களுக்கு எப்படி உற்சாகமளிக்கிறது? (அப். 26:11; 1 தீ. 1:14-16; 2 தீ. 4:2; 1 பே. 3:1-3)

கதை 109

கொர்நேலியுவை பேதுரு சந்திக்கிறார்

1. இந்தப் படத்தில் கீழே விழுந்து வணங்குபவர் யார்?

2. கொர்நேலியுவிடம் ஒரு தேவதூதன் என்ன சொல்கிறார்?

3. யோப்பாவிலுள்ள சீமோனுடைய வீட்டின் மேல் மாடியில் பேதுரு இருக்கையில் அவர் எதைப் பார்க்கும்படி கடவுள் செய்கிறார்?

4. தன் கால்களில் விழுந்து வணங்கக் கூடாது என கொர்நேலியுவிடம் பேதுரு ஏன் சொல்கிறார்?

5. பேதுருவுடன் வந்த யூத சீஷர்களுக்கு ஏன் ஆச்சரியமாகி விடுகிறது?

6. கொர்நேலியுவை பேதுரு சந்தித்ததிலிருந்து என்ன முக்கிய பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்?

கூடுதல் கேள்விகள்:

1. அப்போஸ்தலர் 10:1-48-ஐ வாசி.

ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பது பற்றி அப்போஸ்தலர் 10:42-⁠ல் உள்ள பேதுருவின் வார்த்தைகள் என்ன காட்டுகின்றன? (மத். 28:19; மாற். 13:10; அப். 1:8)

2. அப்போஸ்தலர் 11:1-18-ஐ வாசி.

புறஜாதியாரைக் குறித்த யெகோவாவின் நோக்கம் தெளிவானபோது பேதுரு என்ன மனப்பான்மையைக் காட்டினார், அவருடைய மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (அப். 11:17, 18; 2 கொ. 10:5; எபே. 5:17)

கதை 110

தீமோத்தேயு—பவுலின் புது உதவியாளர்

1. இந்தப் படத்தில் பார்க்கிற இளைஞனின் பெயர் என்ன, அவர் எங்கே வாழ்கிறார், அவருடைய அம்மா பெயர், பாட்டி பெயர் என்ன?

2. ரொம்ப தூரத்திலுள்ள ஜனங்களுக்குப் போய் பிரசங்கிக்க சீலாவோடும் தன்னோடும் வருவதற்கு விருப்பமா என பவுல் கேட்கும்போது தீமோத்தேயு என்ன சொல்கிறார்?

3. இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்ற பெயர் முதன்முதலில் வழங்கப்பட்ட இடம் எது?

4. பவுலும் சீலாவும் தீமோத்தேயுவும் அந்தியோகியாவிலிருந்து கிளம்பிய பிறகு அவர்கள் சந்திக்கிற சில பட்டணங்கள் யாவை?

5. பவுலுக்கு தீமோத்தேயு எப்படி உதவுகிறார், இன்று இளைஞர்கள் தங்களையே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

கூடுதல் கேள்விகள்:

1. அப்போஸ்தலர் 9:19-30-ஐ வாசி.

நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு எதிர்ப்பு வந்தபோது அப்போஸ்தலன் பவுல் எப்படி விவேகமாக நடந்துகொண்டார்? (அப். 9:22-25, 29, 30; மத். 10:16)

2. அப்போஸ்தலர் 11:19-26-ஐ வாசி.

பிரசங்க வேலை செய்வதற்கு யெகோவாவுடைய ஆவியின் உதவியும் வழிநடத்துதலும் இருக்கிறது என்பதை அப்போஸ்தலர் 11:19-21, 26-ல் உள்ள பதிவு எப்படிக் காட்டுகிறது?

3. அப்போஸ்தலர் 13:13-16, 42-52-ஐ வாசி.

எதிர்ப்பைக் கண்டு சீஷர்கள் சோர்ந்துவிடவில்லை என்பதை அப்போஸ்தலர் 13:51, 52 எப்படிக் காட்டுகிறது? (மத். 10:14; அப். 18:6; 1 பே. 4:14)

4. அப்போஸ்தலர் 14:1-6, 19-28-ஐ வாசி.

‘அவர்களை யெகோவாவுக்கு ஒப்புவித்தார்கள்’ என்ற வார்த்தைகள், புதியவர்களுக்கு நாம் உதவுகையில் அவர்களைப் பற்றி வீணாக கவலைப்படாதிருக்க எப்படி உதவுகின்றன? (அப். 14:21-23; 20:32; யோவா. 6:44)

5. அப்போஸ்தலர் 16:1-5-ஐ வாசி.

விருத்தசேதனம் செய்துகொள்ள தீமோத்தேயு முன்வந்ததானது, ‘நற்செய்தியின் நிமித்தம் எல்லாவற்றையும் செய்வதன்’ முக்கியத்துவத்தை எப்படி வலியுறுத்துகிறது? (அப். 16:3; 1 கொ. 9:23, NW; 1 தெ. 2:⁠8)

6. அப்போஸ்தலர் 18:1-11, 18-22-ஐ வாசி.

பிரசங்க வேலையை வழிநடத்துவதில் இயேசுவுக்கு அக்கறை இருந்ததை அப்போஸ்தலர் 18:9, 10 எப்படிக் குறிப்பாக தெரிவிக்கிறது, இது நமக்கு என்ன உறுதியை அளிக்கிறது? (மத். 28:20)

கதை 111

தூங்கிவிட்ட ஒரு பையன்

1. படத்தில் கீழே விழுந்து கிடக்கிற அந்தப் பையன் யார், அவனுக்கு என்ன ஆனது?

2. பையன் செத்து விட்டான் என்று பவுல் கண்டபோது அவர் என்ன செய்கிறார்?

3. பவுலும், தீமோத்தேயுவும், அவர்களோடு இருப்பவர்களும் எங்கே போகிறார்கள், போகிற வழியில் அவர்கள் மிலேத்துவில் நிறுத்தியபோது அங்கு என்ன நடக்கிறது?

4. அகபு என்ற தீர்க்கதரிசி பவுலுக்கு என்ன எச்சரிப்பு கொடுக்கிறார், அவர் எச்சரித்தபடியே எப்படி நடக்கிறது?

கூடுதல் கேள்விகள்:

1. அப்போஸ்தலர் 20:7-38-ஐ வாசி.

(அ) அப்போஸ்தலர் 20:26, 27-ல் உள்ள பவுலுடைய வார்த்தைகளின்படி, நாம் எவ்வாறு “எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி” சுத்தமாயிருக்க முடியும்? (எசே. 33:8; அப். 18:6, 7)

(ஆ) போதிக்கும்போது மூப்பர்கள் ஏன் ‘உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ள’ வேண்டும்? (அப். 20:17, 29, 30; தீத். 1:7-9, NW; 2 தீ. 1:13)

2. அப்போஸ்தலர் 26:24-32-ஐ வாசி.

இயேசுவிடமிருந்து பெற்றுக்கொண்ட பிரசங்கிக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதற்குப் பவுல் தன்னுடைய ரோம குடியுரிமையை எப்படிப் பயன்படுத்தினார்? (அப். 9:15; 16:37, 38; 25:11, 12; 26:32; லூக். 21:12, 13)

கதை 112

ஒரு தீவில் கப்பற்சேதம்

1. பவுல் பயணம் செய்துகொண்டிருக்கிற கப்பல் கிரேத்தா தீவுக்குப் பக்கத்தில் போகும்போது என்ன நடக்கிறது?

2. கப்பலில் இருப்போரிடம் பவுல் என்ன சொல்கிறார்?

3. அந்தக் கப்பல் எப்படித் துண்டு துண்டாக உடைந்து போகிறது?

4. படைத்தளபதி எல்லோரையும் பார்த்து என்ன சொல்கிறார், எத்தனை பேர் பத்திரமாக கரை சேருகிறார்கள்?

5. அவர்கள் கரை சேருகிற அத்தீவின் பெயர் என்ன, வானிலை சற்று சரியான பின், பவுல் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்?

கூடுதல் கேள்விகள்:

1. அப்போஸ்தலர் 27:1-44-ஐ வாசி.

ரோமாபுரிக்கு பவுல் கடற்பயணம் செய்தது பற்றி நாம் வாசிக்கையில், பைபிள் பதிவு திருத்தமானது என்ற நம்பிக்கை எப்படிப் பலப்படுகிறது? (அப். 27:16-19, 27-32; லூக். 1:1-4; 2 தீ. 3:16, 17)

2. அப்போஸ்தலர் 28:1-14-ஐ வாசி.

அப்போஸ்தலன் பவுலுக்கும் அவருடன் கப்பற்சேதத்தில் மாட்டிக் கொண்டவர்களுக்கும் புற மதத்தவரான மெலித்தா தீவார் ‘அசாதாரண தயவைக்’ காட்டியிருக்கிறார்கள் என்றால், கிறிஸ்தவர்கள் என்ன குணத்தைக் காட்ட வேண்டும், முக்கியமாக எந்த விதத்தில் காட்ட வேண்டும்? (அப். 28:1, 2; எபி. 13:1, 2; 1 பே. 4:9)

கதை 113

ரோமாபுரியில் பவுல்

1. ரோமாபுரியில் கைதியாக இருக்கிற பவுல் யாரிடம் பிரசங்கிக்கிறார்?

2. இந்தப் படத்தில், மேஜையில் எழுதிக்கொண்டிருப்பவர் யார், பவுலுக்காக அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

3. எப்பாப்பிரோதீத்து என்பவர் யார், அவர் பிலிப்பிக்குத் திரும்பும்போது எதைக் எடுத்துக்கொண்டு போகிறார்?

4. பவுல் தன்னுடைய நெருங்கிய நண்பரான பிலேமோனுக்கு ஏன் கடிதம் எழுதுகிறார்?

5. பவுல் விடுதலையானதும் என்ன செய்கிறார், பிற்பாடு அவர் என்ன செய்யப்படுகிறார்?

6. பைபிளின் கடைசி புத்தகங்களை எழுதுவதற்கு யெகோவா யாரைப் பயன்படுத்துகிறார், வெளிப்படுத்துதல் புத்தகம் எதைப் பற்றி சொல்கிறது?

கூடுதல் கேள்விகள்:

1. அப்போஸ்தலர் 28:16-31; பிலிப்பியர் 1:13-ஐ வாசி.

ரோமாபுரியில் கைதியாக இருந்தபோது பவுல் தன்னுடைய நேரத்தை எப்படிப் பயன்படுத்தினார், அவரது உறுதியான விசுவாசத்தால் கிறிஸ்தவ சபையில் இருந்தவர்கள் என்ன செய்யத் தூண்டப்பட்டார்கள்? (அப். 28:23, 30; பிலி. 1:14)

2. பிலிப்பியர் 2:19-30-ஐ வாசி.

தீமோத்தேயுவையும் எப்பாப்பிரோதீத்துவையும் பற்றி பெருமிதத்துடன் பவுல் சொன்ன வார்த்தைகள் யாவை, பவுலின் முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (பிலி. 2:20, 22, 25, 29, 30; 1 கொ. 16:18; 1 தெ. 5:12, 13)

3. பிலேமோன் 1-25-ஐ வாசி.

(அ) எதன் அடிப்படையில் சரியானதைச் செய்யும்படி பிலேமோனை பவுல் அறிவுறுத்தினார், இன்று மூப்பர்களுக்கு இது எவ்வாறு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது? (பிலே. 9; 2 கொ. 8:8; கலா. 5:13)

(ஆ) சபையிலிருந்த மற்றவர்களின் மனசாட்சியை பவுல் மதித்தார் என்பதை பிலேமோன் 13, 14 வசனங்கள் எப்படிக் காட்டுகின்றன? (1 கொ. 8:7, 13; 10:31-33)

4. இரண்டு தீமோத்தேயு 4:7-9-ஐ வாசி.

இறுதிவரை உண்மையோடு நிலைத்திருந்தால் யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார் என அப்போஸ்தலன் பவுல் உறுதியாக நம்பியது போல நாமும் எப்படி நம்பலாம்? (மத். 24:13; எபி. 6:10)

கதை 114

எல்லாக் கெட்ட காரியங்களுக்கும் முடிவு

1. பரலோகத்தில் குதிரைகள் இருப்பதாக பைபிள் ஏன் சொல்கிறது?

2. பூமியிலுள்ள கெட்ட ஆட்களுடன் கடவுள் தொடுக்கப் போகிற அந்தப் போரின் பெயர் என்ன, எதற்காக அந்தப் போர் தொடுக்கப்படுகிறது?

3. இந்தப் படத்தில் பார்க்கிறபடி, யார் அந்தப் போரில் தலைமை வகிப்பார், அவர் ஏன் கிரீடம் அணிந்திருக்கிறார், அவரிடமுள்ள வாள் எதை அர்த்தப்படுத்துகிறது?

4. கதைகள் 10, 15, 33-⁠ல் பார்த்தபடி, கெட்ட ஆட்களைக் கடவுள் அழிப்பார் என்பதைப் பற்றி நாம் ஏன் ஆச்சரியப்பட வேண்டியதில்லை?

5. கெட்ட ஆட்கள் கடவுளை வணங்குவதாக சொன்னாலும் அவர்களைக் கடவுள் அழித்துவிடுவார் என்பதை 36-⁠ம் கதையும் 76-⁠ம் கதையும் எப்படிக் காட்டுகின்றன?

கூடுதல் கேள்விகள்:

1. வெளிப்படுத்துதல் 19:11-16-ஐ வாசி.

(அ) வெள்ளை குதிரையில் சவாரி செய்பவர் இயேசு கிறிஸ்துவே என்பதை வேதவசனங்கள் எப்படித் தெளிவாகக் காட்டுகின்றன? (வெளி. 1:5; 3:14; 19:11; ஏசா. 11:4)

(ஆ) இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தை இயேசு அணிந்திருப்பது அவருடைய வெற்றி முழுமையானதாக இருக்கும் என்பதை எப்படி உறுதிப்படுத்துகிறது? (வெளி. 14:18-20; 19:13; ஏசா. 63:1-6)

(இ) இயேசு சவாரி செய்கிற வெள்ளைக் குதிரைக்குப் பின்னால் வருகிற சேனைகளில் யாரும் இருப்பர்? (வெளி. 12:7; 19:14; மத். 25:31, 32)

கதை 115

பூமியில் ஒரு புதிய பரதீஸ்

1. பூமி ஒரு பரதீஸாக மாறும்போது நாம் எதையெல்லாம் அனுபவித்து மகிழ்வோம் என பைபிள் காட்டுகிறது?

2. பரதீஸில் வாழ்வோருக்கு பைபிள் என்ன வாக்குக் கொடுக்கிறது?

3. இந்த அற்புத மாற்றம் எப்போது நடக்கும்படி இயேசு பார்த்துக் கொள்வார்?

4. கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக ஆட்சி செய்யும்போது தாம் என்ன செய்வார் என்பதைக் காட்டுவதற்காக பூமியில் இருந்தபோது இயேசு என்ன செய்தார்?

5. பரலோகத்திலிருந்து இயேசுவும் அவருடன் ஆட்சி செய்பவர்களும் பூமியை ஆளும்போது அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்?

கூடுதல் கேள்விகள்:

1. வெளிப்படுத்துதல் 5:9, 10-ஐ வாசி.

ஆயிர வருட ஆட்சியின்போது பூமியை ஆளுபவர்கள் அனுதாபமும் இரக்கமுமுள்ள ராஜாக்களும் ஆசாரியர்களுமாய் இருப்பார்கள் என நாம் ஏன் உறுதியாக நம்பலாம்? (எபே. 4:20-24; 1 பே. 1:7; 3:8; 5:6-10)

2. வெளிப்படுத்துதல் 14:1-3-ஐ வாசி.

1,44,000 பேரின் நெற்றிகளில் பிதாவின் பெயரும் ஆட்டுக்குட்டியானவரின் பெயரும் எழுதப்பட்டிருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? (1 கொ. 3:23; 2 தீ. 2:19; வெளி. 3:12)

கதை 116

என்றென்றும் வாழ்வது எப்படி

1. என்றென்றும் வாழ வேண்டுமென்றால் நாம் எதைப் பற்றி தெரிந்துகொள்ள வேணடும்?

2. இந்தப் படத்திலுள்ள குட்டிப் பெண்ணையும் அவளுடைய நண்பர்களையும் போல யெகோவா தேவனையும் இயேசுவையும் பற்றி நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

3. இந்தப் படத்தில் பார்க்கிற இன்னொரு புத்தகம் என்ன, அதை நாம் ஏன் அடிக்கடி வாசிக்க வேண்டும்?

4. என்றென்றும் வாழ வேண்டுமானால் யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிக் கற்றுக்கொள்வதோடு வேறு எதுவும் தேவை?

5. கதை 69-லிருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்?

6. கதை 55-⁠ல் பார்த்த குட்டிப் பையனான சாமுவேலின் சிறந்த உதாரணம் நமக்கு என்ன காட்டுகிறது?

7. இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம், அப்போது எதிர்காலத்தில் நம்மால் என்ன செய்ய முடியும்?

கூடுதல் கேள்விகள்:

1. யோவான் 17:3-ஐ வாசி.

யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றி அறிந்துகொள்வதற்கு வெறுமனே விஷயங்களை மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது என்பதை பைபிள் வசனங்கள் எப்படிக் காட்டுகின்றன? (மத். 7:21; யாக். 2:18-20; 1 யோ. 2:17)

2. சங்கீதம் 145:1-21-ஐ வாசி.

(அ) யெகோவாவைத் துதிப்பதற்கான அநேக காரணங்களில் சில யாவை? (சங். 145:8-11; வெளி. 4:11)

(ஆ) யெகோவா எப்படி ‘எல்லோருக்குமே நல்லவராய்’ இருக்கிறார், இது நம்மை எப்படி அவரிடம் இன்னும் நெருங்கி வரச் செய்கிறது? (சங். 145:9, NW; மத். 5:43-45)

(இ) யெகோவாவை இருதயப்பூர்வமாக நேசித்தால் நாம் என்ன செய்வோம்? (சங். 119:171, 172, 175; 145:11, 12, 21)