கொரிந்தியருக்கு முதலாம் கடிதம் 8:1-13

8  இப்போது, சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவுகளைப் பற்றிப் பார்ப்போம்;+ இதைப் பற்றிய அறிவு நம் எல்லாருக்கும் இருக்கிறதென்பது நமக்குத் தெரியும்.+ அறிவு தலைக்கனத்தை உண்டாக்குகிறது, அன்போ பலப்படுத்துகிறது.+  ஒரு விஷயத்தைப் பற்றித் தனக்கு நன்றாகத் தெரியும் என்று ஒருவன் நினைத்தால், தெரிந்துகொள்ள வேண்டிய அளவுக்கு அவன் அதைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறான்.  ஆனால், ஒருவன் கடவுள்மீது அன்பு வைத்திருந்தால், கடவுள் அவனை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்.  சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடும் விஷயத்தைப் பொறுத்ததில், சிலை என்பது ஒன்றுமே இல்லை+ என்றும், ஒரே கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை+ என்றும் நமக்குத் தெரியும்.  பரலோகத்திலும் பூமியிலும் கடவுள்கள் என்று அழைக்கப்படுபவை நிறைய இருக்கின்றன.+ இப்படி நிறைய “கடவுள்களும்” நிறைய “எஜமான்களும்” இருந்தாலும்,  உண்மையில் ஒரே கடவுள்தான் நமக்கு இருக்கிறார்,+ அவர்தான் பரலோகத் தகப்பன்;+ அவரால்தான் எல்லாம் உண்டாயிருக்கிறது, அவருக்காக நாமும் உண்டாயிருக்கிறோம்;+ இயேசு கிறிஸ்துவாகிய ஒரே எஜமானும் இருக்கிறார்; அவர் மூலம் எல்லாம் உண்டாயிருக்கிறது,+ அவர் மூலம் நாமும் உண்டாயிருக்கிறோம்.  ஆனாலும், இந்த அறிவு எல்லாருக்கும் இல்லை;+ முன்பு சிலைகளை வணங்கிவந்த சிலர் அவற்றுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடும்போது அதைப் படையல் என்று நினைப்பதால்+ அவர்களுடைய பலவீனமான மனசாட்சி கறைபட்டுவிடுகிறது.+  ஆனாலும், உணவு நம்மைக் கடவுளுக்குப் பிரியமானவர்களாக ஆக்கிவிடாது.+ சாப்பிடாமல் இருப்பதால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை, சாப்பிடுவதால் நமக்கு எந்த லாபமும் இல்லை.+  உங்களுக்கு இருக்கும் தேர்ந்தெடுக்கிற உரிமை பலவீனமானவர்களுக்கு எந்த விதத்திலும் தடைக்கல்லாகிவிடாதபடி எப்போதும் கவனமாக இருங்கள்.+ 10  அறிவைப் பெற்ற நீங்கள் சிலைகள் இருக்கிற ஒரு கோயிலில் சாப்பிட உட்காருகிறீர்கள் என்றால், அதைப் பார்க்கிற பலவீனமான ஒருவனுடைய மனசாட்சி சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றைச் சாப்பிடும் அளவுக்குத் துணிந்துவிடும், இல்லையா? 11  பலவீனமாக இருக்கிறவன் உங்களுடைய அறிவால் சீரழிந்துவிடுகிறான்; இவனும் உங்களுடைய சகோதரன்தானே, இவனுக்காகவும் கிறிஸ்து இறந்தாரே.+ 12  இப்படி, உங்களுடைய சகோதரர்களுக்கு எதிராக நீங்கள் பாவம் செய்து அவர்களுடைய பலவீனமான மனசாட்சிக்குப் பாதிப்புண்டாக்கும்போது,+ கிறிஸ்துவுக்கு எதிராகவே பாவம் செய்கிறீர்கள். 13  அதனால், நான் சாப்பிடுகிற இறைச்சி என் சகோதரனுடைய விசுவாசத்துக்குத் தடைக்கல்லாக இருந்தால், நான் அவனுக்குத் தடைக்கல்லாகிவிடாதபடி இனிமேல் அதைச் சாப்பிடவே மாட்டேன்.+

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா