யாத்திராகமம் 31:1-18

31  பின்பு யெகோவா மோசேயிடம்,  “இதோ, யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஹூரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேலை+ நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.+  நான் அவனை என்னுடைய சக்தியால் நிரப்பி, எல்லா விதமான கைவேலைகள் செய்யவும்,  கலை வேலைப்பாடுகள் செய்யவும், தங்கம், வெள்ளி, செம்பு வேலைகள் செய்யவும்,  கற்களைப் பட்டைதீட்டி அவற்றைப் பதிக்கவும்,+ எல்லா விதமான மர வேலைகள் செய்யவும்+ அவனுக்கு ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் அறிவையும் தருவேன்.  அதோடு, தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாக்கின் மகன் அகோலியாபையும் அவனுக்கு உதவியாக நியமித்திருக்கிறேன்.+ திறமைசாலிகள் எல்லாருக்கும் நான் ஞானத்தைக் கொடுப்பேன். அதனால், நான் உனக்குச் சொன்னபடியே அவர்கள் எல்லாவற்றையும் செய்வார்கள்.+  சந்திப்புக் கூடாரம்,+ சாட்சிப் பெட்டி,+ அதன் மூடி,+ கூடாரத்துக்கான பாத்திரங்கள்,  மேஜை,+ அதற்கான பாத்திரங்கள், சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்ட குத்துவிளக்கு, அதற்கான பாத்திரங்கள்,+ தூபபீடம்,+  தகன பலிக்கான பலிபீடம்,+ அதற்கான பாத்திரங்கள், தொட்டி, அதை வைப்பதற்கான தாங்கி,+ 10  நன்றாக நெய்யப்பட்ட உடைகள், குருவாகிய ஆரோனுக்குப் பரிசுத்த அங்கிகள், குருமார்களாகச் சேவை செய்ய அவனுடைய மகன்களுக்கு அங்கிகள்,+ 11  அபிஷேகத் தைலம், வழிபாட்டுக் கூடாரத்துக்கான தூபப்பொருள் ஆகியவற்றைச் செய்வார்கள்.+ நான் உனக்குக் கட்டளை கொடுத்த எல்லாவற்றையும் அவர்கள் செய்வார்கள்” என்றார். 12  பின்பு யெகோவா மோசேயிடம், 13  “இஸ்ரவேலர்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நீங்கள் என் ஓய்வுநாளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.+ அது எனக்கும் உங்களுக்கும் இடையில் தலைமுறை தலைமுறையாய் ஒரு அடையாளமாக இருக்கும். யெகோவாவாகிய நான் உங்களைப் புனிதப்படுத்துகிறேன் என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்வீர்கள். 14  நீங்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ ஏனென்றால் அது உங்களுக்குப் பரிசுத்தமானது. ஓய்வுநாளின் பரிசுத்தத்தைக் கெடுக்கிற எவனும் கொல்லப்பட வேண்டும். அந்த நாளில் ஒருவன் எந்த வேலையாவது செய்தால், அவன் கொல்லப்பட வேண்டும்.+ 15  ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஆனால், ஏழாம் நாள் நீங்கள் முழுமையாய் ஓய்ந்திருக்க வேண்டிய ஓய்வுநாள்.+ அது யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாள். ஓய்வுநாளில் வேலை செய்கிற எவனும் கொல்லப்பட வேண்டும். 16  இஸ்ரவேலர்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதைத் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்க வேண்டும், இது ஒரு நிரந்தர ஒப்பந்தம். 17  எனக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையில் இது ஒரு நிரந்தர அடையாளமாக இருக்கும்.+ ஏனென்றால், யெகோவாவாகிய நான் ஆறு நாட்களில் வானத்தையும் பூமியையும் படைத்தேன். ஏழாம் நாளில் வேலையை முடித்துவிட்டு ஓய்வெடுத்தேன்’”+ என்றார். 18  சீனாய் மலையில் அவர் மோசேயிடம் பேசி முடித்தவுடன், தன்னுடைய சக்தியால்*+ எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளைத் தந்தார்.+ அவைதான் சாட்சிப் பலகைகள்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “விரலால்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா