Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மலேரியா—ஜாக்கிரதை!

மலேரியா—ஜாக்கிரதை!

உலக சுகாதார அமைப்பின் அறிக்கைபடி 2013-ல் 19 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோர் மலேரியாவால் பாதிக்கப்பட்டார்கள். இதனால், கிட்டத்தட்ட 5,84,000 பேர் இறந்துபோனார்கள். இதில் 80 சதவீதம் பேர் ஐந்து வயதுக்கு கீழுள்ள குழந்தைகள். உலகம் முழுவதும் சுமார் நூறு நாடுகளில் மலேரியா அதிகம் பரவும் ஆபத்து இருக்கிறது. அதில் வாழும் 320 கோடி மக்களுக்கு இந்த நோய் தாக்கும் ஆபத்து இருக்கிறது.

1 மலேரியா என்றால் என்ன?

மலேரியா என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். காய்ச்சல், குளிர் ஜூரம், தலைவலி, உடல் வலி, வாந்தி, குமட்டல், வியர்த்து கொட்டுவது போன்றவை இதன் அறிகுறிகள். நோய் தாக்கிய கிருமியின் வகையைப் பொறுத்தும், எத்தனை நாள் இந்த நோய் இருக்கிறது என்பதைப் பொறுத்தும் அதன் அறிகுறிகள் தெரியவரலாம். 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை அறிகுறிகள் விட்டுவிட்டு தெரியவரலாம்.

2 மலேரியா எப்படி பரவுகிறது?

  1. அனாபிளஸ் என்ற ஒருவகை பெண் கொசு கடிக்கும்போது அதில் இருக்கும் ப்ளாஸ்மோடியா என்ற ஒற்றைசெல் கிருமி இரத்தத்தில் கலக்கிறது.

  2. இந்த கிருமிகள் இரத்தத்தின் வழியாக ஈரலில் இருக்கும் செல்களுக்குள் நுழைகின்றன. அங்கு அவை பல மடங்காக பெருகுகின்றன.

  3. ஈரலில் இருக்கும் செல் வெடிக்கும்போது இந்த கிருமிகள் வெளியே வருகின்றன. இந்த கிருமிகள் சிவப்பு அணுக்களைத் தாக்குகின்றன. அங்கு அவை மேலும் பெருகுகின்றன.

  4. ஒரு சிவப்பு அணு வெடிக்கும்போது அது கிருமிகளை வெளியிடுகிறது. இந்த கிருமிகள் மேலும் பல சிவப்பு அணுக்களைத் தாக்குகின்றன.

  5. இப்படி இந்த கிருமிகள் பல மடங்காக பெருகுகிறது. ஒவ்வொரு தடவை சிவப்பு அணுக்கள் வெடிக்கும்போதும் மலேரியாவுக்கான அறிகுறிகள் தெரியவருகின்றன.

3 நம்மை எப்படி பாதுகாப்பது?

மலேரியா அதிகமாக பரவியிருக்கும் ஊரில் வாழ்ந்தால் . . .

  •  

    • பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

    • கிழிந்திருக்கக் கூடாது.

    • மெத்தைக்கு கீழே முழுமையாக நுழைத்திருக்க வேண்டும்.

  • பூச்சி மருந்தை வீட்டில் தெளியுங்கள் அல்லது ‘ஸ்பிரே’ செய்யுங்கள்.

  • முடிந்தால் ஜன்னலிலும் கதவிலும் கொசு வலையை பொருத்துங்கள். ‘ஃபேன்’ (Fan) அல்லது ‘ஏ.சி’ பயன்படுத்தினால் கொசு வருவது குறையும்.

  • வெளிர் நிற ஆடைகளை பயன்படுத்துங்கள், உடலை முழுமையாக மூடும் துணிகளை உடுத்துங்கள்.

  • கொசு அதிகமாக இருக்கும் இடங்களுக்கு போகாதீர்கள். தேங்கி நிற்கும் தண்ணீருக்கு பக்கத்தில் நிற்காதீர்கள், அங்குதான் கொசு இனப்பெருக்கம் செய்யும்.

  • நீங்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

மலேரியா பரவியிருக்கும் ஊருக்கு போகவேண்டியிருந்தால் . . .

  • அங்குள்ள நிலைமையை பற்றி நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். மலேரியா கிருமிகள் இடத்துக்கு இடம் மாறுபடும். அதனால் அதற்கு தேவைப்படும் மருந்து மாத்திரைகளும் மாறலாம். போவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் பேசி பாருங்கள். இந்த நோய் தாக்காமல் இருக்க நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று அவர் உங்களுக்கு சொல்வார்.

  • அங்கே போகும்போது மேலே சொல்லப்பட்ட “மலேரியா அதிகமாக பரவியிருக்கும் ஊரில் நீங்கள் வாழ்ந்தால். . .” என்ற பகுதியிலுள்ள ஆலோசனைகளை கடைப்பிடியுங்கள்.

  • நீங்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். கிருமிகள் உங்களை தாக்கியிருந்தால் 1-4 வாரம் கழித்துதான் நோய்க்கான அறிகுறிகள் தெரியவரும்.