Skip to content

மரண பயத்தை நீங்கள் எப்படி மேற்கொள்ளலாம்?

மரண பயத்தை நீங்கள் எப்படி மேற்கொள்ளலாம்?

பைபிள் தரும் பதில்

 மரணம் என்கிற எதிரியைக் கண்டு நாம் பயப்படுவதால், நம்முடைய உயிரைப் பாதுகாக்க நியாயமான படிகளை எடுக்கிறோம். (1 கொரிந்தியர் 15:26) ஆனால், பொய்களின் அடிப்படையில் அல்லது மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் ஏற்படுகிற தேவையில்லாத மரண பயம் மக்களை ‘வாழ்நாள் முழுவதும் அடிமைப்பட்டிருக்க’ செய்கிறது. (எபிரெயர் 2:15) மரணத்தைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொண்டால், வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்க முடியாதபடி தடுக்கிற... நம்மை நடுநடுங்க வைக்கிற... மரண பயத்திலிருந்து நாம் விடுதலையாவோம்!—யோவான் 8:32.

மரணத்தைப் பற்றிய உண்மை

  •   இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது, எந்த உணர்வும் கிடையாது. (சங்கீதம் 146:4) இறந்த பிறகு வேதனையையும் சித்திரவதையையும் அனுபவிக்க வேண்டியிருக்கமோ என்று நினைத்து நீங்கள் பயப்பட வேண்டியதில்லை; ஏனென்றால், மரணத்தைத் தூக்கத்தோடு பைபிள் ஒப்பிட்டுப் பேசுகிறது.—சங்கீதம் 13:3, அடிக்குறிப்பு; யோவான் 11:11-14.

  •   இறந்தவர்களால் நமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. ஒரு காலத்தில் பயங்கர எதிரிகளாக இருந்தவர்கள்கூட இப்போது ‘செத்துச் செயலிழந்து கிடக்கிறார்கள்.’ (நீதிமொழிகள் 21:16, அடிக்குறிப்பு) ‘அவர்கள் காட்டிய வெறுப்பும், பொறாமையும் ஏற்கெனவே அழிந்துவிட்டன’ என்று பைபிள் சொல்கிறது.—பிரசங்கி 9:6.

  •   நம்முடைய வாழ்க்கைக்கு மரணம் ஒரு முற்றுப்புள்ளி என நாம் நினைக்கத் தேவையில்லை. இறந்துபோனவர்களைக் கடவுள் திரும்ப உயிரோடு கொண்டுவரப்போகிறார், ஆம் அவர்களை உயிர்த்தெழுப்பப்போகிறார்.—யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15.

  •   “இனிமேல் மரணம் இருக்காது” என்று கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 21:4) அப்படிப்பட்ட காலத்தைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.” ஆம், மரண பயமே இல்லாமல் என்றென்றும் வாழ்வார்கள்!—சங்கீதம் 37:29.