Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் கருத்து | தேவதூதர்கள்

தேவதூதர்கள்

தேவதூதர்கள்

தேவதூதர்களைப் பற்றி புத்தகங்களிலும் ஓவியங்களிலும் திரைப்படங்களிலும் காட்டப்படுகின்றன. உண்மையில், தேவதூதர்கள் யார்? அவர்கள் எப்படிப்பட்ட வேலைகளைச் செய்கிறார்கள்?

தேவதூதர்கள் யார்?

பைபிள் என்ன சொல்கிறது

 

இந்தப் பிரபஞ்சத்தையும் முதல் மனிதனையும் படைப்பதற்கு முன்பே அதிக ஞானமுள்ள சில சிருஷ்டிகளை கடவுள் படைத்தார். இந்தச் சிருஷ்டிகள் மனிதர்களைவிட பலமடங்கு சக்திபடைத்தவர்கள். கடவுள் இருக்கும் இடத்தில் இவர்கள் இருக்கிறார்கள். அந்த இடத்துக்கு மனிதர்களால் போகவோ அந்த இடத்தைப் பார்க்கவோ முடியாது. (யோபு 38:4, 7) இவர்களைத்தான் தேவதூதர்கள் என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 104:4. *

எவ்வளவு தேவதூதர்கள் இருக்கிறார்கள்? எக்கச்சக்கமான தேவதூதர்கள் இருக்கிறார்கள். “ஆயிரமாயிரம்” தேவதூதர்கள் கடவுளுக்குச் சேவை செய்வதையும் “கோடானுகோடி” தேவதூதர்கள் கடவுளுக்கு முன்னால் நிற்பதையும் தானியேல் ஒரு தரிசனத்தில் பார்த்தார். (தானியேல் 7:10) இங்கு சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொண்டால்கூட, தேவதூதர்களின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டிவிடும்!

“ஆயிரமாயிரம் பேர் அவருக்குச் சேவை செய்தார்கள், கோடானுகோடி பேர் அவருக்கு முன்னால் நின்றார்கள்.”—தானியேல் 7:10.

பூர்வ காலங்களில் தேவதூதர்கள் என்ன வேலைகளைச் செய்தார்கள்?

பைபிள் என்ன சொல்கிறது

 

தேவதூதர்கள் அடிக்கடி கடவுளின் சார்பாக பேசினார்கள், அதாவது கடவுளுடைய தூதுவர்களாக இருந்தார்கள். * உதாரணத்துக்கு, கடவுள் ஒரு தேவதூதரை அனுப்பி ஆபிரகாமை ஆசீர்வதித்தார். ஆபிரகாம், தன் மகனை பலி கொடுக்க போகும்போது கடவுள் அந்தத் தேவதூதர் மூலம் அவரைத் தடுத்தார். (ஆதியாகமம் 22:11-18) முட்புதரின் நடுவிலிருந்து ஒரு தேவதூதர் தோன்றி மோசேயிடம் ஒரு முக்கியமான செய்தியைச் சொன்னார். அந்தச் செய்தி மோசேயின் வாழ்க்கையையே மாற்றியது. (யாத்திராகமம் 3:1, 2) சிலசமயங்களில், தேவதூதர்களைப் பயன்படுத்தி கடவுள் அற்புதங்களையும் செய்திருக்கிறார். தீர்க்கதரிசியான தானியேல் சிங்கங்கள் இருக்கிற குகையில் போடப்பட்டபோது, கடவுள் ஒரு தேவதூதரை அனுப்பி சிங்கங்களுடைய வாயை அடைத்தார்.—தானியேல் 6:22.

“அப்போது, கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த ஒரு முட்புதரின் நடுவில் யெகோவாவின் தூதர் [மோசேக்கு] தோன்றினார்.”—யாத்திராகமம் 3:2.

தேவதூதர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

பைபிள் என்ன சொல்கிறது

 

தேவதூதர்கள் இப்போது செய்துகொண்டிருக்கிற எல்லா வேலைகளையும் நம்மால் தெரிந்துகொள்ள முடியாது. ஆனால், நல்ல ஜனங்கள் கடவுளைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள தேவதூதர்கள் உதவுகிறார்கள் என்று பைபிள் சொல்கிறது.—அப்போஸ்தலர் 8:26-35; 10:1-22; வெளிப்படுத்துதல் 14:6, 7.

யாக்கோபுக்கு வந்த கனவு இதை உறுதிப்படுத்துகிறது. “ஒரு படிக்கட்டு” வழியாக தேவதூதர்கள் பரலோகத்துக்கும் பூமிக்கும், “ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும்” இருப்பதை அவருக்கு யெகோவா அந்தக் கனவில் காண்பித்தார். (ஆதியாகமம் 28:10-12) தனக்கு உண்மையோடு இருக்கும் மனிதர்களுக்கு உதவி செய்வதற்காக யெகோவா தேவதூதர்களைப் பூமிக்கு அனுப்புகிறார் என்று இதிலிருந்து தெரிகிறது. இதை யாக்கோபும் புரிந்துகொண்டிருப்பார்.—ஆதியாகமம் 24:40; யாத்திராகமம் 14:19; சங்கீதம் 34:7.

“பரலோகத்தைத் தொடும் அளவுக்கு உயரமான ஒரு படிக்கட்டு பூமியில் இருந்தது. அதில் தேவதூதர்கள் ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருந்தார்கள்.”—ஆதியாகமம் 28:12.

^ பாரா. 6 சில தேவதூதர்கள், கடவுளுடைய அதிகாரத்தை எதிர்த்து கலகம் செய்தார்கள். இவர்களை “பேய்கள்” என்று பைபிள் சொல்கிறது.—லூக்கா 10:17-20.

^ பாரா. 11 தேவதூதரைக் குறிப்பதற்காக பைபிளில் பயன்படுத்தப்பட்ட எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகள் “தூதுவர்கள்” என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.