Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழிப்புடன் இருங்கள்!

சரித்திரம் காணாத வெப்பநிலை அதிகரிப்பு—பைபிள் என்ன சொல்கிறது?

சரித்திரம் காணாத வெப்பநிலை அதிகரிப்பு—பைபிள் என்ன சொல்கிறது?

 ஜூலை 2022-ல், உலகம் முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியிருக்கிறது:

  •   ”கிட்டத்தட்ட 70 நகரங்களில் அதிக வெப்பம் பதிவாகும் என சீனா எச்சரித்திருக்கிறது. இது, இந்த மாதத்தின் இரண்டாவது வெப்ப அலை என்பது குறிப்பிடத்தக்கது.“—ஜூலை 25, 2022, CNN வையர் சர்வீஸ்.

  •   ”தகிக்கும் வெப்பத்தால் ஐரோப்பாவின் பல இடங்களில் பற்றியெரிகிறது காடுகள்!“—ஜூலை 17, 2022, தீ கார்டியன்.

  •   ”அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளிலும் தெற்கு மற்றும் மத்தியமேற்கு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை அன்று, இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வெப்ப அலை தாக்கியது. அதனால், நிறைய நகரங்களில் அதிக வெப்பம் பதிவாகியிருக்கிறது.“—ஜூலை 24, 2022, தீ நியூ யார்க் டைம்ஸ்.

 இவையெல்லாம் ஏன் நடக்கின்றன? மனிதர்கள் வாழ முடியாத அளவுக்கு பூமி மாறிவிடுமா? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

வெப்ப அலைகள் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமா?

 ஆமாம்! நம்முடைய நாளில் நடக்கும் சில சம்பவங்களைப் பற்றி பைபிள் முன்பே சொன்னது. இன்று உலகையே சுட்டெரிக்கும் வெப்ப அலைகள் அந்த சம்பவங்களோடு ஒத்துப்போகிறது. உதாரணத்துக்கு, ‘திகிலுண்டாக்கும் காட்சிகளை’ நாம் பார்ப்போம் என்று இயேசு முன்பே தீர்க்கதரிசனமாக சொன்னார். (லூக்கா 21:11) உலகம் முழுவதும் வெப்ப நிலை அதிகமாக ஆகியிருப்பதால் மனிதர்கள் இந்த பூமியை அழித்துவிடுவார்களோ என்ற பயம் எல்லாரிடமும் இருக்கிறது.

மனிதர்கள் வாழவே முடியாத அளவுக்கு பூமி மாறிவிடுமா?

 இல்லை! மனிதன் வாழ்வதற்கு ஒரு நிரந்தர வீடாக இந்த பூமியை கடவுள் கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 115:16; பிரசங்கி 1:4) அதனால், மனிதர்கள் இந்த பூமியை அழிப்பதற்கு கடவுள் விடவே மாட்டார். அதற்குப் பதிலாக, ‘பூமியை நாசமாக்குகிறவர்களை [அவர்] நாசமாக்குவார்.’—வெளிப்படுத்துதல் 11:18.

 கடவுள் இந்த பூமியை எப்படி மாற்றுவார் என்று பாருங்கள்:

  •   “வனாந்தரமும் வறண்ட நிலமும் பூரிப்படையும். பாலைநிலம் பூ பூத்து, களைகட்டும்.” (ஏசாயா 35:1) வாழவே முடியாத பாலைவனமாக இந்த பூமி மாறுவதற்கு கடவுள் விடமாட்டார். அதற்குப் பதிலாக, நாசமான பகுதிகளை மறுபடியும் செழிப்பாக ஆக்குவார்.

  •   “நீங்கள் பூமியை அக்கறையோடு கவனித்துக்கொள்கிறீர்கள். அதைச் செழிப்பாக்குகிறீர்கள், அமோகமாக விளைய வைக்கிறீர்கள்.” (சங்கீதம் 65:9) கடவுளுடைய ஆசீர்வாதத்தால் இந்த பூமி சீக்கிரத்தில் ஒரு பூஞ்சோலையாக பூத்துக்குலுங்கும்.

 பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ள, “நாசமாகி கொண்டிருக்கும் பூமி—பைபிள் என்ன சொல்கிறது?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

 கடவுள் இந்த பூமியை கண்டிப்பாக காப்பாற்றுவார் என்று உறுதியாக நம்புவதற்கு, “பூமி அழிக்கப்படுமா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.