Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழிப்புடன் இருங்கள்!

நாசமாகி கொண்டிருக்கும் பூமி—பைபிள் என்ன சொல்கிறது?

நாசமாகி கொண்டிருக்கும் பூமி—பைபிள் என்ன சொல்கிறது?

 “சட்டென்று மாறும் வானிலை... தண்ணீரில் மூழ்கும் பெரிய நகரங்கள்... இதுவரை பார்க்காதளவு வெப்பம்... ஒருபக்கம் பயங்கர சூறாவளி.. இன்னொரு பக்கம் தண்ணீர் இல்லாமல் வறட்சி... லட்சக்கணக்கான செடிகொடி வகைகளும் மிருகங்களும் அழியும் அபாயம்... இதெல்லாம் கட்டுக்கதை இல்லை. சாதாரண விஷயத்தை பெரிதுப்படுத்தியும் சொல்லவில்லை. நம்மிடம் இருக்கும் இயற்கை வளங்களை அரசாங்கங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்றால் நிலைமைகள் இன்னும் மோசமாகும் என்று அறிவியல் சொல்கிறது” என்று ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டரெஷ் சொன்னார். ஏப்ரல் 4, 2022 அன்று பருவநிலை மாற்றம் பற்றிய இன்டர்கவர்மென்டல் பேனலின் (IPCC) அறிக்கையில் இதை சொன்னார்.

 “பருவநிலை மாற்றத்தினால் வரப்போகும் வருஷங்களில் அமெரிக்காவில் இருக்கும் 423 தேசிய பூங்காக்கள் அழிந்துபோவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். சூடு அதிகமாவதால் இந்த இடங்கள் ரொம்பவே பாதிக்கப்படும். இந்த மாதிரி கெட்ட விஷயங்கள் நடப்பதை பார்க்கும்போது, நெருப்பு வெள்ளம், உருகும் பனி பாறைகள், கொந்தளிக்கும் கடல் மற்றும் வெப்ப அலைகள் பற்றி பைபிளில் சொல்லப்பட்ட பேரழிவுகள் போலவே இருக்கின்றன.”—”எல்லோஸ்டோனில் (தேசிய பூங்கா) வெள்ள அபாயம், வரப்போகும் அழிவுக்கு அடையாளம்”, தி நியுயார்க் டைம்ஸ், ஜூன் 15, 2022.

 இந்த உலகத்தின் சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? கிடைக்குமென்றால், யார் அதை தீர்த்து வைப்பார்? இதற்கு பைபிள் என்ன பதில் சொல்கிறது என்று பார்க்கலாம்.

முன்பே சொல்லப்பட்ட சுற்றுச்சூழல் ஆபத்துகள்

 கடவுள், ‘பூமியை நாசமாக்குகிறவர்களை நாசமாக்குவார்’ என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 11:18) இந்த பைபிள் வசனத்தில் இருந்து 3 விஷயங்களை தெரிந்துகொள்கிறோம்.

  1.  1. மனிதர்களுடைய செயல்களால் இந்த பூமி கண்டிப்பாக நாசமாகும்.

  2.  2. பூமியை நாசமாக்குகிறவர்களுக்கு முடிவு வரும்.

  3.  3. இந்த பூமியின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சரிசெய்யப்போவது, மனிதர்கள் கிடையாது... கடவுள் தான்.

பூமிக்கு பாதுகாப்பு - விரைவில்!

 ”பூமி என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 1:4) மக்கள் அதில் என்றென்றும் வாழ்வார்கள்.

  •    “நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.”—சங்கீதம் 37:29.

 நாசமாகி இருக்கும் இந்த பூமியும் முழுமையாக சரியாகிவிடும்.

  •    “வனாந்தரமும் வறண்ட நிலமும் பூரிப்படையும். பாலைநிலம் பூ பூத்து, களைகட்டும்.”—ஏசாயா 35:1.