Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 91

அன்பால் செதுக்கிய கட்டிடம்!

அன்பால் செதுக்கிய கட்டிடம்!

(சங்கீதம் 127:1)

  1. 1. யெ-கோ-வா-வே, உ-மக்-கே

    அ-ழ-கா-ன இம்-மன்-ற-மே.

    சந்-தோ-ஷம் பொங்-கு-தே,

    ஆ-னந்-த கண்-ணீர் சிந்-து-தே!

    எங்-கள் அன்-பை கு-ழைத்-தே

    கட்-டி-ய கட்-டி-டம் இ-தே,

    கற்-க-ளும் பே-சு-தே

    தே-வ-னே, உம்-மை போற்-று-தே!

    (பல்லவி)

    எங்-க-ளின் கை-க-ளால் உம் வீட்-டை

    கட்-டி-டும் பாக்-யம் தந்-தீ-ரே.

    ஆ-சை-யாய் கூ-டி வந்-து இங்-கே, உங்-கள் பே-ரை

    என்-றென்-றும் போற்-றி பா-டு-வோம்.

  2. 2. எத்-த-னை ஞா-பகங்-கள்!

    எத்-த-னை அன்-பு நண்-பர்-கள்!

    பெற்-றோ-மே இ-ங்கு தான்

    தங்-கு-மே நெஞ்-சில் என்-றும் தான்.

    ம-ழை, வெ-யில் என்-றா-லும்

    சந்-தோ-ஷ-மாய் உ-ழைத்-தோ-மே,

    எங்-கள் கை கோர்த்-தோ-மே

    வான் வ-ரை பு-கழ் சேர்த்-தோ-மே!

    (பல்லவி)

    எங்-க-ளின் கை-க-ளால் உம் வீட்-டை

    கட்-டி-டும் பாக்-யம் தந்-தீ-ரே.

    ஆ-சை-யாய் கூ-டி வந்-து இங்-கே, உங்-கள் பே-ரை

    என்-றென்-றும் போற்-றி பா-டு-வோம்.

(பாருங்கள்: சங். 116:1; 147:1; ரோ. 15:6.)