Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 130

மன்னியுங்கள்

மன்னியுங்கள்

(சங்கீதம் 86:5)

  1. 1. பா-வம் தந்-த சா-பம்

    ம-ர-ணம் என்-ற சோ-கம்.

    நொந்-து-போ-ன நம்-மை மீட்-க

    தந்-தா-ரே ம-க-னை-யே!

    வ-ருந்-தி உள்-ளம் தி-ருந்-தி,

    ஏ-சு-வின் பே-ரில் கெஞ்-சி,

    யெ-கோ-வா-வி-டம் கேட்-டா-லே

    மன்-னிப்-பா-ரே நம்-மை-யே!

  2. 2. தே-வ-னின் இ-ரக்-கம்

    வ-ர-மா-கக் கேட்-போ-மே!

    பெ-ற வேண்-டும் என்-றால் நா-மும்

    இ-ரக்-கம் காட்-டு-வோ-மே!

    ஒ-ரு-வர்-மேல் ஒ-ரு-வ-ரே

    அ-னு-தா-பம் காட்-டி-யே,

    தே-வன் போ-ல மன்-னிப்-போ-மே!

    தாங்-கு-வோ-மே அன்-போ-டே!

  3. 3. வாழ்-வே இன்-பம் ஆ-கும்,

    இ-ரக்-கம் காட்-டும்-போ-தே!

    ப-கை-யும் கோ-ப-மும்-தா-னே

    அ-ழி-யும் இப்-பண்-பா-லே!

    எல்-லை-யில்-லா அன்-பின் ஊற்-று

    யெ-கோ-வா-வைப் போல் நா-மும்,

    இ-ரக்-கம்-தான் வ-ளர்ப்-போ-மே!

    நெஞ்-சா-ர மன்-னிப்-போ-மே!