Skip to content

பைபிள் புத்தகங்களுக்கான அறிமுகங்கள்

பைபிள் புத்தகங்களின் பின்னணித் தகவல்களையும் முக்கிய விஷயங்களையும் பற்றி இந்தச் சிறிய வீடியோக்கள் அருமையான விவரங்களைத் தருகின்றன. இந்த வீடியோக்களைப் பயன்படுத்தி, உங்களுடைய தனிப்பட்ட பைபிள் வாசிப்பு மற்றும் பைபிள் படிப்பு பழக்கத்திற்கு மெருகூட்டுங்கள்.

பைபிளுக்கு அறிமுகம்

கிறிஸ்து இயேசு ஆட்சி செய்யும் கடவுளுடைய அரசாங்கம் யெகோவாவுடைய பெயரை எப்படி பரிசுத்தப்படுத்தும் என்பதே பைபிளின் முக்கியச் செய்தி. இதைப் பற்றி பைபிளுடைய ஒவ்வொரு புத்தகமும் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.

ஆதியாகமம் புத்தகத்துக்கு அறிமுகம்

மனிதர்களுடைய ஆரம்பம், பாவம் மற்றும் மரணத்தின் தொடக்கம் ஆகியவற்றைப் பற்றிய முக்கியமான தகவல்களை ஆதியாகமம் புத்தகம் சொல்கிறது.

யாத்திராகமம் புத்தகத்துக்கு அறிமுகம்

எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களைக் கடவுள் விடுதலை செய்து, அவர்களைத் தனக்கு அர்ப்பணித்த ஒரு தேசமாக ஆக்கினார்.

லேவியராகமம் புத்தகத்துக்கு அறிமுகம்

கடவுள் எவ்வளவு பரிசுத்தமாக இருக்கிறார் என்றும் நாம் பரிசுத்தமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்றும் லேவியராகமம் புத்தகத்திலிருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

எண்ணாகமம் புத்தகத்துக்கு அறிமுகம்

யெகோவாவுக்கு கீழ்ப்படிவதும் நம்மை வழிநடத்த அவரால் நியமிக்கப்பட்டவர்களுக்கு மதிப்பு கொடுப்பதும் ஏன் ரொம்ப முக்கியம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

உபாகமம் புத்தகத்துக்கு அறிமுகம்

இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த சட்டங்கள் அவருடைய அன்பை எப்படி வெளிக்காட்டுகின்றன என்று பாருங்கள்.

யோசுவா புத்தகத்துக்கு அறிமுகம்

இஸ்ரவேலர்கள் எப்படி வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்தை கைப்பற்றி அதைப் பிரித்துக்கொண்டார்கள் என்று பாருங்கள்.

நியாயாதிபதிகள் புத்தகத்துக்கு அறிமுகம்

இஸ்ரவேலர்களை அடக்கி ஒடுக்கிய எதிரிகளிடமிருந்து காப்பாற்ற தைரியமும் விசுவாசமும் உள்ள நியாயாதிபதிகளை கடவுள் பயன்படுத்தினார். அவர்களுடைய பெயரில்தான் விறுவிறுப்பான சம்பவங்களைப் பற்றி சொல்லும் இந்த புத்தகம் இருக்கிறது.

ரூத் புத்தகத்துக்கு அறிமுகம்

விதவையாக இருந்த தன் மாமியார் மேல் அன்பாக இருந்த ஒரு இளம் விதவை செய்த தியாகத்தை பற்றியும் அதற்கு யெகோவா கொடுத்த ஆசீர்வாதத்தை பற்றியும் ரூத் புத்தகம் சொல்கிறது.

1 சாமுவேல் புத்தகத்துக்கு அறிமுகம்

இஸ்ரவேலர்களுடைய காலத்தில் நியாயாதிபதிகளின் காலம் முடிந்து ராஜாக்களின் ஆட்சி ஆரம்பித்ததைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

2 சாமுவேல் புத்தகத்துக்கு அறிமுகம்

பைபிளில் எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த, ரொம்ப பிடித்த ஒருவர்தான் தாவீது. அதற்கு காரணம் அவருடைய விசுவாசமும் மனத்தாழ்மையும்தான். அதை அவர் எப்படிக் காட்டினார் என்று வாசித்துப் பாருங்கள்.

1 ராஜாக்கள் புத்தகத்துக்கு அறிமுகம்

சாலொமோன் ஆட்சியில் பேர் புகழுடன் செழிப்பாக இருந்த இஸ்ரவேல் தேசம், இஸ்ரவேல் மற்றும் யூதா என இரண்டு ராஜ்யங்களாக பிரிந்த பிறகு குழப்பங்கள்தான் மிஞ்சியது. இந்த காலப்பகுதியில் நடந்த சம்பவங்களை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

2 ராஜாக்கள் புத்தகத்துக்கு அறிமுகம்

இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தில் விசுவாசதுரோகம் எப்படி பரவியது என்றும் யெகோவாவை முழு இதயத்தோடு வணங்கிய சிலரை அவர் எப்படி ஆசீர்வதித்தார் என்றும் பாருங்கள்.

1 நாளாகமம் புத்தகத்துக்கு அறிமுகம்

கடவுள் பயமுள்ள தாவீது, இஸ்ரவேலின் ராஜாவாக ஆனதில் இருந்து அவருடைய மரணம் வரை உள்ள சம்பவங்கள், அவர் வாழ்ந்த வாழ்க்கை, அவருடைய வம்ச வரலாறு ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

2 நாளாகமம் புத்தகத்துக்கு அறிமுகம்

கடவுளுக்கு உண்மையாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை யூதா ராஜாக்களின் சரித்திரத்தில் இருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

எஸ்றா புத்தகத்துக்கு அறிமுகம்

யெகோவா அவருடைய மக்களை பாபிலோனில் இருந்து விடுதலை செய்வதாக வாக்குறுதி கொடுத்தார். அதோடு, அவர்கள் எருசலேமுக்கு திரும்பி வந்து மறுபடியும் ஆலயத்தை கட்டுவார்கள் என்றும் சொன்னார். சொன்னபடியே யெகோவா செய்தார்.

நெகேமியா புத்தகத்துக்கு அறிமுகம்

நமக்கு பிரயோஜனமான நிறைய பாடங்களை நெகேமியா புத்தகத்தில் கற்றுக்கொள்ளலாம்.

எஸ்தர் புத்தகத்துக்கு அறிமுகம்

எஸ்தர் புத்தகத்தில் இருக்கும் சம்பவங்கள் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் யெகோவா தேவனால் அவருடைய மக்களை காப்பாற்ற முடியும் என்பதை காட்டுகிறது.

யோபு புத்தகத்துக்கு அறிமுகம்

யெகோவாவுக்குப் பிடித்ததை செய்ய நினைக்கும் எல்லாருக்கும் சோதனைகள் வரும். சோதனைகள் வந்தாலும் கடவுளுக்கு உண்மையாக இருக்க முடியும் என்றும் அவருடைய ஆட்சிக்கு முழு ஆதரவு காட்ட முடியும் என்றும் யோபு புத்தகத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம்.

சங்கீத புத்தகத்துக்கு அறிமுகம்

சங்கீதம் யெகோவாவின் உன்னத பேரரசை ஆதரிக்கிறது, அவரை நேசிப்பவர்களுக்கு உதவியும் ஆறுதலும் தருகிறது, அவருடைய அரசாங்கத்தின் மூலம் இந்த உலகம் எப்படி மாறப்போகிறது என்று சொல்கிறது.

நீதிமொழிகள் புத்தகத்துக்கு அறிமுகம்

வியாபார விஷயங்கள்முதல் குடும்ப விஷயங்கள்வரை, வாழ்க்கையின் எல்லா அம்சங்கள் சம்பந்தமாகவும் கடவுள் கொடுக்கிற அறிவுரைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

பிரசங்கி புத்தகத்துக்கு அறிமுகம்

எந்தெந்த விஷயங்கள் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமானவை, எந்தெந்த விஷயங்கள் கடவுளுடைய ஞானத்துக்கு முரணானவை என்று சாலொமோன் ராஜா படம்பிடித்து காட்டுகிறார்.

உன்னதப்பாட்டு புத்தகத்துக்கு அறிமுகம்

ஒரு மேய்ப்பன்மீது சூலேமியப் பெண் வைத்திருந்த அன்பு, “யாவின் ஜூவாலை” என்று அழைக்கப்படுகிறது. ஏன்?

ஏசாயா புத்தகத்துக்கு அறிமுகம்

ஏசாயா புத்தகத்தில் நம்பகமான தீர்க்கதரிசனங்கள் இருக்கிறது. யெகோவாவின் மீது பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள அது உதவும். கொடுத்த வாக்கை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார்... தம்மை நம்பியிருப்பவர்களை நிச்சயம் காப்பாற்றுவார்... என்ற நம்பிக்கையையும் தரும்.

எரேமியா புத்தகத்துக்கு அறிமுகம்

கஷ்டங்களின் மத்தியிலும் எரேமியா தன்னுடைய நியமிப்பை விட்டுவிடாமல், தீர்க்கதரிசியாகத் தொடர்ந்து சேவை செய்தார். அவருடைய முன்மாதிரி இன்று கிறிஸ்தவர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்குமென்று சிந்தித்துப் பாருங்கள்.

புலம்பல் புத்தகத்துக்கு அறிமுகம்

இந்தப் புத்தகத்தை எரேமியா தீர்க்கதரிசி எழுதினார். எருசலேமுடைய அழிவை நினைத்து எரேமியா புலம்புவதைப் பற்றியும், மனம் திருந்துபவர்களை கடவுள் எப்படி மன்னிக்கிறார் என்பதைப் பற்றியும் இந்தப் புத்தகம் சொல்கிறது.

எசேக்கியேல் புத்தகத்துக்கு அறிமுகம்

எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், கடவுள் கொடுத்த நியமிப்பை எசேக்கியேல் மனத்தாழ்மையாகவும் தைரியமாகவும் செய்து முடித்தார். இன்று, அவருடைய முன்மாதிரி நமக்கு ரொம்ப முக்கியமாக இருக்கிறது.

தானியேல் புத்தகத்துக்கு அறிமுகம்

தானியேலும் அவருடைய நண்பர்களும் எல்லா சமயங்களிலும் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள். அவர்களுடைய முன்மாதிரியும், இந்தப் புத்தகத்திலிருக்கிற தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமும் இன்று கடைசிக் காலத்தில் வாழும் நமக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கின்றன.

ஓசியா புத்தகத்துக்கு அறிமுகம்

நம் காலத்துக்குப் பிரயோஜனமாக இருக்கிற முக்கியமான விஷயங்கள் ஓசியா தீர்க்கதரிசனத்தில் இருக்கின்றன. தவறு செய்து மனம் திருந்துபவர்களுக்கு யெகோவா காட்டும் இரக்கத்தை பற்றியும், அவர் எப்படிப்பட்ட வணக்கத்தை எதிர்பார்க்கிறார் என்பதைப் பற்றியும் இதிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.

யோவேல் புத்தகத்துக்கு அறிமுகம்

வரவிருக்கும் ‘யெகோவாவின் நாளை’ பற்றி யோவேல் தீர்க்கதரிசனம் சொன்னார். அதிலிருந்து தப்பிக்க நாம் என்ன செய்ய வேண்டுமென்றும் சொன்னார். இன்று அவருடைய தீர்க்கதரிசனம் ரொம்பவே முக்கியமாக இருக்கிறது.

ஆமோஸ் புத்தகத்துக்கான அறிமுகம்

மனத்தாழ்மையுள்ள இந்த மனிதரை யெகோவா ஒரு முக்கியமான வேலைக்காகப் பயன்படுத்தினார். ஆமோசின் முன்மாதிரியிலிருந்து நாம் என்ன அருமையான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

ஒபதியா புத்தகத்துக்கு அறிமுகம்

எபிரெய வேதாகமத்தில் உள்ள புத்தகங்களிலேயே இதுதான் சின்ன புத்தகம். இந்தத் தீர்க்கதரிசனப் புத்தகம் எதிர்கால நம்பிக்கையைத் தருகிறது, யெகோவாவின் அரசாட்சிதான் சிறந்தது என நிரூபிக்கப்படும் என்ற வாக்குறுதியையும் தருகிறது.

யோனா புத்தகத்துக்கு அறிமுகம்

யோனா தீர்க்கதரிசி, திருத்தப்பட்டபோது தன்னை மாற்றிக்கொண்டார், கொடுக்கப்பட்ட வேலையைச் செய்து முடித்தார், கடவுளுடைய மாறாத அன்பைப் பற்றியும், இரக்கத்தைப் பற்றியும் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டார். அவருடைய அனுபவங்கள் உங்களுடைய இதயத்தை நெகிழ வைக்கும்.

மீகா புத்தகத்துக்கு அறிமுகம்

நியாயமான, பிரயோஜனமான விஷயங்களையே யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்ற நம்முடைய நம்பிக்கையை இந்தத் தீர்க்கதரிசனப் புத்தகம் பலப்படுத்துகிறது.

நாகூம் புத்தகத்துக்கு அறிமுகம்

யெகோவா, தன்னுடைய வார்த்தைகளை எப்போதும் நிறைவேற்றுகிறார், தன்னுடைய ஆட்சியில் சமாதானமாகவும், சந்தோஷமாகவும் வாழ விரும்புகிறவர்களுக்கு ஆறுதல் தருகிறார் என்பதில் நம்பிக்கையோடு இருக்க இந்தத் தீர்க்கதரிசனப் புத்தகம் உதவுகிறது.

ஆபகூக் புத்தகத்துக்கு அறிமுகம்

தன்னுடைய மக்களைக் காப்பாற்ற எது சரியான நேரம் என்பதையும், எது சிறந்த வழி என்பதையும் யெகோவா நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறார் என்பதில் நாம் நம்பிக்கையோடு இருக்கலாம்.

செப்பனியா புத்தகத்துக்கு அறிமுகம்

யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள் வராது என்ற எண்ணம் நமக்கு வந்துவிடாதபடி நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

ஆகாய் புத்தகத்துக்கு அறிமுகம்

சொந்த விருப்பங்களுக்கு அல்ல, கடவுளுடைய வணக்கத்திற்கு முதலிடம் கொடுப்பதுதான் முக்கியம் என்பதை இந்தத் தீர்க்கதரிசனப் புத்தகம் எடுத்துக்காட்டுகிறது.

சகரியா புத்தகத்துக்கு அறிமுகம்

கடவுள் கொடுத்த ஏராளமான தரிசனக் காட்சிகளும் தீர்க்கதரிசனங்களும் பூர்வகாலத்தில் வாழ்ந்த அவருடைய மக்களின் விசுவாசத்தைப் பலப்படுத்தின. இந்தத் தீர்க்கதரிசனங்கள், இன்றும்கூட யெகோவாவின் ஆதரவு நமக்கு இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

மல்கியா புத்தகத்துக்கு அறிமுகம்

யெகோவாவின் மாறாத நியமங்களையும், இரக்கம், அன்பு ஆகிய குணங்களையும் இந்தத் தீர்க்கதரிசனப் புத்தகம் சிறப்பித்துக் காட்டுகிறது. நம் காலத்துக்குத் தேவையான முக்கியப் பாடங்களையும் இது நமக்குக் கற்றுத்தருகிறது.

மத்தேயு புத்தகத்துக்கு அறிமுகம்

நான்கு சுவிசேஷ புத்தகங்களில் மத்தேயு முதல் புத்தகம். இந்த புத்தகத்தைப் பற்றிய சுருக்கமான தகவலை வீடியோவில் பாருங்கள்.

மாற்கு புத்தகத்துக்கு அறிமுகம்

சுவிசேஷப் புத்தகங்களிலேயே மிகவும் சிறிய புத்தகம் மாற்கு புத்தகம்; கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவான இயேசுவுடைய எதிர்கால ஆட்சி எப்படி இருக்கும் என்பதை இந்தப் புத்தகம் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

லூக்கா புத்தகத்துக்கு அறிமுகம்

மற்ற சுவிசேஷ புத்தகங்களில் இல்லாத என்ன விஷயங்கள் லூக்கா சுவிசேஷத்தில் இருக்கின்றன?

யோவான் புத்தகத்துக்கு அறிமுகம்

இயேசு மனிதர்கள்மேல் காட்டின அன்பையும், மனத்தாழ்மைக்கு இயேசு சிறந்த முன்மாதிரியாக இருப்பதையும், இயேசுதான் மேசியா, அதாவது கடவுளுடைய அரசாங்கத்தின் எதிர்கால ராஜா, என்பதையும் யோவான் புத்தகம் சிறப்பித்துக் காட்டுகிறது.

அப்போஸ்தலர் புத்தகத்துக்கு அறிமுகம்

எல்லா தேசத்து மக்களையும் சீஷர்களாக்குவதற்கு ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் கடினமாக உழைத்தார்கள். ஊழியத்தை இன்னுமதிக வைராக்கியத்தோடும் உற்சாகத்தோடும் செய்ய அப்போஸ்தலர் புத்தகம் உங்களைத் தூண்டும்.

ரோமர் புத்தகத்துக்கு அறிமுகம்

யெகோவா பாரபட்சம் காட்டாதவர் என்றும், இயேசு கிறிஸ்துமீது விசுவாசம் வைப்பது எந்தளவு முக்கியம் என்றும் ரோமர் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இவற்றைப் பற்றி கடவுளுடைய சக்தி கொடுத்த வழிநடத்துதல் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.

1 கொரிந்தியர் புத்தகத்துக்கு அறிமுகம்

பவுல் எழுதிய இந்தக் கடிதத்தில், ஒற்றுமை, ஒழுக்கச் சுத்தம், அன்பு, உயிர்த்தெழுதல் நம்பிக்கை போன்றவற்றைப் பற்றிக் கடவுள் கொடுத்திருக்கும் அறிவுரைகள் இருக்கின்றன.

2 கொரிந்தியர் புத்தகத்துக்கு அறிமுகம்

‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளான’ யெகோவா தன் ஊழியர்களைப் பலப்படுத்துகிறார், காப்பாற்றுகிறார்.

கலாத்தியர் புத்தகத்துக்கு அறிமுகம்

கலாத்தியர்களுக்கு பவுல் எழுதிய கடிதம், அன்று மட்டுமல்ல இன்றும் ரொம்பவே பிரயோஜனமாக இருக்கிறது. உண்மையோடு நிலைத்திருக்க உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் அது உதவி செய்கிறது.

எபேசியர் புத்தகத்துக்கு அறிமுகம்

கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட இந்தக் கடிதம், இயேசு கிறிஸ்துவின் மூலம் சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதுதான் கடவுளுடைய நோக்கம் என்பதைச் சிறப்பித்துக் காட்டுகிறது.

பிலிப்பியர் புத்தகத்துக்கு அறிமுகம்

நமக்கு வருகிற சோதனைத் தீயைத் தாக்குப்பிடிக்கும்போது மற்றவர்களை நம்மால் பலப்படுத்த முடியும்.

கொலோசெயர் புத்தகத்துக்கு அறிமுகம்

கற்றுக்கொள்ளும் விஷயங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும், ஒருவரை ஒருவர் தாராளமாக மன்னிப்பதன் மூலமும், இயேசுவுக்கு இருக்கும் அதிகாரத்தையும் பொறுப்பையும் மதிப்பதன் மூலமும் நாம் யெகோவாவைப் பிரியப்படுத்தலாம்.

1 தெசலோனிக்கேயர் புத்தகத்துக்கு அறிமுகம்

நாம் ஆன்மீக விதத்தில் விழிப்பாக இருக்க வேண்டும், ‘எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்க’ வேண்டும், ‘எப்போதும் ஜெபம் செய்ய’ வேண்டும், ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும்.

2 தெசலோனிக்கேயர் புத்தகத்துக்கு அறிமுகம்

யெகோவாவின் நாளைப் பற்றிய தவறான கருத்தை பவுல் சரிசெய்கிறார். விசுவாசத்தில் உறுதியோடு நிற்கும்படி சகோதரர்களை உற்சாகப்படுத்துகிறார்.

1 தீமோத்தேயு புத்தகத்துக்கு அறிமுகம்

சபையை எப்படி ஒழுங்கமைக்க வேண்டுமென்று சொல்வதற்காகவும், பொய்ப் போதனைகளைப் பற்றியும் பண ஆசையைப் பற்றியும் எச்சரிப்பதற்காகவும் பவுல் 1 தீமோத்தேயு கடிதத்தை எழுதினார்.

2 தீமோத்தேயு புத்தகத்துக்கு அறிமுகம்

ஊழியத்தை முழுமையாகச் செய்து முடிக்கச் சொல்லி தீமோத்தேயுவை பவுல் உற்சாகப்படுத்துகிறார்.

தீத்து புத்தகத்துக்கு அறிமுகம்

தீத்துவுக்கு பவுல் எழுதிய இந்தக் கடிதம், கிரேத்தாவிலிருந்த சபைகளின் பிரச்சினைகளைப் பற்றியும் மூப்பர்களுக்கான தகுதிகளைப் பற்றியும் சொல்கிறது.

பிலேமோன் புத்தகத்துக்கு அறிமுகம்

சுருக்கமான, ஆனால் வலிமையான இந்தக் கடிதம், மனத்தாழ்மையையும், இரக்கத்தையும், மன்னிக்கும் குணத்தையும் எப்படிக் காட்டலாம் என்று சொல்லித்தருகிறது.

எபிரெயர் புத்தகத்துக்கு அறிமுகம்

கிறிஸ்தவ வணக்கம், பார்க்க முடிந்த காரியங்களான ஆலயம், மிருக பலிகள் போன்றவற்றின் அடிப்படையில் இல்லை; அது, மேலான காரியங்களின் அடிப்படையில் இருந்தது.

யாக்கோபு புத்தகத்துக்கு அறிமுகம்

கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களைக் கற்றுக்கொடுப்பதற்குத் தத்ரூபமான உதாரணங்களை யாக்கோபு பயன்படுத்துகிறார்.

1 பேதுரு புத்தகத்துக்கு அறிமுகம்

பேதுருவின் முதல் கடிதம், மும்முரமாகச் செயல்படும்படியும் நம் கவலைகளையெல்லாம் கடவுள்மேல் போட்டுவிடும்படியும் நம்மை உற்சாகப்படுத்துகிறது.

2 பேதுரு புத்தகத்துக்கு அறிமுகம்

பேதுரு எழுதிய இரண்டாவது கடிதம், புதிய வானமும் புதிய பூமியும் வரும்வரை உண்மையோடு நிலைத்திருக்க நம்மை உற்சாகப்படுத்துகிறது.

1 யோவான் புத்தகத்துக்கு அறிமுகம்

யோவான் எழுதிய கடிதம் அந்திக்கிறிஸ்துக்களைப் பற்றி எச்சரிக்கிறது. அதோடு, நாம் எதை நேசிக்க வேண்டும், எதை நேசிக்கக் கூடாது என்பதைத் தெரிந்துகொள்ள இது நமக்கு உதவுகிறது.

2 யோவான் புத்தகத்துக்கு அறிமுகம்

தொடர்ந்து சத்தியத்தில் நடக்க வேண்டும் என்பதையும் ஏமாற்றுக்காரர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் யோவான் எழுதிய இரண்டாவது கடிதம் நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

3 யோவான் புத்தகத்துக்கு அறிமுகம்

கிறிஸ்தவர்கள் காட்ட வேண்டிய உபசரிக்கும் குணத்தைப் பற்றி யோவான் எழுதிய மூன்றாவது கடிதம் அருமையான பாடத்தைக் கற்றுத்தருகிறது.

யூதா புத்தகத்துக்கு அறிமுகம்

பொய் போதனைகளையும் தவறான பழக்கங்களையும் சபைக்குள் புகுத்த நினைக்கிற ஆட்களை அடையாளம் கண்டுபிடிக்க கிறிஸ்தவர்களுக்கு யூதா உதவுகிறார்.

வெளிப்படுத்துதல் புத்தகத்துக்கு அறிமுகம்

வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கும் சிலிர்க்கவைக்கும் தரிசனங்கள், மனிதர்களுக்கும் பூமிக்குமான கடவுளுடைய நோக்கத்தை அவருடைய அரசாங்கம் எப்படி நிறைவேற்றும் என்பதைக் காட்டுகிறது.

இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!

புத்தகங்கள், சிறு புத்தகங்கள்

பைபிள் ஒரு கண்ணோட்டம்

பைபிள் சொல்லும் முக்கியமான செய்தி என்ன?

பைபிள்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

பைபிளை நீங்கள் ஆழமாக ஆராய்ந்து படிப்பதற்கு உதவும் படங்கள், ஆராய்ச்சிக் குறிப்புகள், இணை வசனங்கள் போன்ற நிறைய அம்சங்கள் இந்தப் பதிப்பில் இருக்கின்றன.