நீதிமொழிகள் 7:1-27

7  என் மகனே, என் ஆலோசனைகளைக் கேள்.என் கட்டளைகளைப் பொக்கிஷம்போல் பாதுகாத்துக்கொள்.+   என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி, அப்போது வாழ்வாய்.+என் அறிவுரைகளை* கண்மணிபோல் காத்துக்கொள்.   அவற்றை உன் விரல்களில் கட்டிக்கொள்.உன் இதயப் பலகையில் எழுதிக்கொள்.+   ஞானத்தைப் பார்த்து, “நீ என் சகோதரி” என்று சொல். புத்தியை* பார்த்து, “என் சொந்தமே” என்று கூப்பிடு.   அப்போதுதான், நடத்தைகெட்ட பெண்ணிடமிருந்தும்,+ ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும்,அவளுடைய தேனொழுகும் பேச்சிலிருந்தும் நீ பாதுகாக்கப்படுவாய்.+   என் வீட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தேன்.அங்கிருந்து கீழே கவனித்தேன்.   அங்கே விவரம் தெரியாத* வாலிபர்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தார்கள்.புத்தியில்லாத ஒரு வாலிபன் அந்தக் கூட்டத்தில் இருந்தான்.+   அவன் அவளுடைய தெரு முனையின் வழியாகப் போனான்.அவளுடைய வீடு இருந்த திசையில் நடந்து போனான்.   பொழுதுசாயும் சாயங்கால வேளையிலே,+இருட்டும் நேரத்திலே அவன் அங்கே போனான். 10  அப்போது, ஒரு பெண் அவனைப் பார்க்க வந்தாள்.அவள் விபச்சாரிபோல்* உடுத்தியிருந்தாள்,+ தந்திரமான உள்ளத்தோடு வந்தாள். 11  அவள் வாயாடி, அடங்காதவள்.+ தன்னுடைய வீட்டில் தங்கவே மாட்டாள். 12  ஒருநேரம் தெருவில் இருப்பாள், அடுத்த நேரம் பொது சதுக்கங்களில் இருப்பாள்.ஒவ்வொரு தெரு முனையிலும் பதுங்கி நிற்பாள்.+ 13  அவள் அவனைப் பிடித்து முத்தம் கொடுத்தாள்.பின்பு, வெட்கமே இல்லாமல் அவனிடம், 14  “நான் சமாதான பலி செலுத்த வேண்டியிருந்தது,+ என் நேர்த்திக்கடன்களை இன்று செலுத்திவிட்டேன். 15  அதனால், உன்னைப் பார்க்க வந்தேன்.உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன், இப்போது கண்டுபிடித்துவிட்டேன்! 16  என் மெத்தையில் அருமையான விரிப்பை விரித்து வைத்திருக்கிறேன்,எகிப்து தேசத்துப் பலவண்ண நாரிழை* விரிப்பைப்+ போட்டு வைத்திருக்கிறேன். 17  என் படுக்கையில் வெள்ளைப்போளத்தையும்* அகிலையும்* லவங்கத்தையும் தூவி வைத்திருக்கிறேன்.+ 18  என்னோடு வா, காலைவரை காதல் ரசத்தை நாம் பருகலாம்.விடியும்வரை உல்லாசமாக இருக்கலாம். 19  ஏனென்றால், என் புருஷன் வீட்டில் இல்லை.ரொம்பத் தூரம் பிரயாணம் போயிருக்கிறார். 20  பை நிறைய பணம் கொண்டுபோயிருக்கிறார்.பௌர்ணமிவரை திரும்பிவர மாட்டார்” என்று சொன்னாள். 21  அவள் இனிக்க இனிக்கப் பேசி அவனைத் தன் பக்கம் இழுத்தாள்.+ கொஞ்சிக் கொஞ்சிப் பேசி அவனை மயக்கினாள். 22  உடனே அவன் அவளுக்குப் பின்னால் போனான்.வெட்டப்படுவதற்காக இழுத்துச் செல்லப்படுகிற மாட்டைப் போலவும்,தொழுமரத்தில்* தண்டிக்கப்படுவதற்காகக் கொண்டுபோகப்படுகிற முட்டாளைப் போலவும் போனான்.+ 23  கடைசியில், ஓர் அம்பு அவனுடைய கல்லீரலைக் குத்திக் கிழிக்கும்.உயிர் போகுமென்று தெரியாமல் வேகமாகப் போய்க் கண்ணியில் சிக்கிவிடும் பறவைபோல் ஆகிவிடுவான்.+ 24  என் மகன்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.என் வார்த்தைகளைக் கவனித்துக் கேளுங்கள். 25  உங்கள் இதயத்தை அவளுடைய வழிகளில் போக விடாதீர்கள். அவளுடைய பாதைகளில் மயங்கித் திரியாதீர்கள்.+ 26  ஏனென்றால், அவள் எத்தனையோ பேரின் சாவுக்குக் காரணமாகியிருக்கிறாள்.+அவளால் செத்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.+ 27  அவளுடைய வீடு கல்லறைக்குப் போகும் வழி.அது மரணத்தின் உள்ளறைகளுக்குக் கொண்டுபோகும் பாதை.

அடிக்குறிப்புகள்

வே.வா., “சட்டங்களை.”
வே.வா., “புரிந்துகொள்ளுதலை.”
வே.வா., “அனுபவம் இல்லாத.”
வே.வா., “விபச்சாரியின் உடையை.”
அதாவது, “லினன்.”
இது ஒருவித வாசனைப் பொருள்.
வே.வா., “விலங்கிடப்பட்டு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா