சங்கீதம் 102:1-28

ஒரு ஜெபம். அடக்கி ஒடுக்கப்பட்டு வேதனையில்* தவிக்கும் ஒருவர், தன் கவலைகளை யெகோவாவிடம் கொட்டுகிறார்.+ 102  யெகோவாவே, என் ஜெபத்தைக் கேளுங்கள்.+உதவிக்காக நான் கதறும் சத்தம் உங்கள் சன்னிதியை எட்டட்டும்.+   இக்கட்டான காலத்தில் உங்கள் முகத்தை என்னிடமிருந்து மறைத்துக்கொள்ளாதீர்கள்.+ நான் பேசுவதைக் காதுகொடுத்து* கேளுங்கள்.நான் கூப்பிடும்போது சீக்கிரமாகப் பதில் கொடுங்கள்.+   ஏனென்றால், என் நாட்கள் புகை போல மறைந்துபோகின்றன.என் எலும்புகள் கொள்ளி போல எரிகின்றன.+   வெயிலில் வாடிப்போன புல் போல என் இதயம் வாடியிருக்கிறது.+சாப்பிடக்கூட மறந்துவிடுகிறேன்.   சத்தமாக முனகி முனகியே,+எலும்பும் தோலுமாக ஆகிவிட்டேன்.+   வனாந்தரத்தில் இருக்கிற கூழைக்கடா பறவையைப் போல ஆகிவிட்டேன்.இடிபாடுகளின் நடுவே தங்கும் சின்ன ஆந்தை போல இருக்கிறேன்.   தூக்கம் இல்லாமல் படுத்துக்கிடக்கிறேன்.*கூரைமேல் தனியாக உட்கார்ந்திருக்கிற பறவை போல இருக்கிறேன்.+   எதிரிகள் நாளெல்லாம் என்னைப் பழித்துப் பேசுகிறார்கள்.+ என்னைக் கிண்டல் செய்கிறவர்கள் என் பெயரைச் சொல்லிச் சபிக்கிறார்கள்.   சாம்பலே எனக்கு உணவாகிவிட்டது.+என் பானத்தில் கண்ணீர் கலந்திருக்கிறது.+ 10  உங்கள் கோபத்தினாலும் ஆக்ரோஷத்தினாலும்,என்னைத் தூக்கி, தூரமாக எறிந்துவிட்டீர்கள். 11  என் நாட்கள் மறைந்துபோகிற நிழல் போல இருக்கின்றன.+நான் புல் போல வாடி வதங்குகிறேன்.+ 12  ஆனால் யெகோவாவே, நீங்கள் என்றென்றும் இருக்கிறீர்கள்.+உங்களுடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.+ 13  நீங்கள் கண்டிப்பாக எழுந்து வந்து சீயோனுக்கு இரக்கம் காட்டுவீர்கள்.+ஏனென்றால், நீங்கள் அவளுக்குக் கருணை காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.+நீங்கள் குறித்து வைத்த நேரம் வந்துவிட்டது.+ 14  உங்களுடைய ஊழியர்கள் அவளுடைய கற்களை நெஞ்சார நேசிக்கிறார்கள்.+அவளுடைய மண்ணின் மேல்கூட பாசம் வைத்திருக்கிறார்கள்.+ 15  தேசங்களிலுள்ள ஜனங்களெல்லாம் யெகோவாவுடைய பெயருக்குப் பயப்படுவார்கள்.பூமியிலுள்ள ராஜாக்களெல்லாம் அவருடைய மகிமைக்குப் பயப்படுவார்கள்.+ 16  ஏனென்றால், சீயோனை யெகோவா திரும்பக் கட்டுவார்.+தன்னுடைய மகிமையை வெளிப்படுத்துவார்.+ 17  ஏழை எளியவர்களின் ஜெபத்தை அவர் கவனித்துக் கேட்பார்.+அவர்களுடைய ஜெபத்தை அலட்சியம் செய்ய மாட்டார்.+ 18  இனி படைக்கப்படவிருக்கும் ஜனம் “யா”வை* புகழும்படி,இது வருங்காலச் சந்ததிக்காக எழுதப்பட்டிருக்கிறது.+ 19  மேலே உள்ள தன் பரிசுத்த இடத்திலிருந்து யெகோவா கீழே பார்க்கிறார்.+பரலோகத்திலிருந்து இந்தப் பூமியைப் பார்க்கிறார். 20  கைதிகளின் பெருமூச்சு சத்தத்தைக் கேட்பதற்காகவும்,+மரணத் தீர்ப்பு பெற்றவர்களை விடுதலை செய்வதற்காகவும்+ அப்படிப் பார்க்கிறார். 21  யெகோவாவுக்குச் சேவை செய்வதற்காக,மக்களும் ராஜ்யங்களும் ஒன்றுகூடி வரும்போது,+ 22  சீயோனில் யெகோவாவின் பெயர் அறிவிக்கப்படும்.+எருசலேமில் அவருடைய புகழ் பரப்பப்படும். 23  எனக்கு வயதாவதற்கு முன்பே அவர் என் பலத்தைப் பறித்துவிட்டார்.என் ஆயுள் காலத்தைக் குறைத்துவிட்டார். 24  நான் அவரிடம், “என் கடவுளே,தலைமுறை தலைமுறையாக இருக்கிறவரே,+நடுத்தர வயதிலேயே என் உயிரை எடுத்துவிடாதீர்கள். 25  பல காலத்துக்கு முன்னால் நீங்கள் பூமிக்கு அஸ்திவாரம் போட்டீர்கள்.வானத்தை உங்கள் கைகளால் உருவாக்கினீர்கள்.+ 26  அவை அழிந்துபோனாலும் நீங்கள் நிலைத்திருப்பீர்கள்.அவையெல்லாம் துணி போல நைந்துபோகும். அவற்றை உடை மாற்றுவது போல நீங்கள் மாற்றிவிடுவீர்கள், அப்போது அவை இல்லாமல் போய்விடும். 27  ஆனால், நீங்கள் மாறாதவர், உங்களுடைய ஆயுளுக்கு முடிவே இல்லை.+ 28  உங்களுடைய ஊழியர்களின் பிள்ளைகள் பத்திரமாகக் குடியிருப்பார்கள்.அவர்களுடைய வாரிசுகள் உங்கள்முன் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்”+ என்று சொன்னேன்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “பலமிழந்து.”
வே.வா., “குனிந்து.”
அல்லது, “மெலிந்துபோய்க் கிடக்கிறேன்.”
“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா