ஓசியா 11:1-12

11  “இஸ்ரவேல் சிறுவனாய் இருந்தபோது அவனை நேசித்தேன்.+எகிப்திலிருந்து என் மகனைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+   அவனை அவர்கள்* கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள்.ஆனால், அவன் அவர்களைவிட்டு விலகிக்கொண்டே போனான்.+ பாகால் சிலைகளுக்குப் பலிக்குமேல் பலி செலுத்தினான்.+உருவச் சிலைகளுக்குத் தூபம் காட்டினான்.+   ஆனால், எப்பிராயீமைக் கைப்பிடித்து நடக்கப் பழக்கியதும்,+ அவர்களைக் கையில் ஏந்தியதும் நான்தான்.+அவர்களைக் குணமாக்கியது நான்தான், அதை அவர்கள் உணரவில்லை.   அன்பெனும் கட்டுகளால் கட்டி, பாசமெனும் கயிறுகளால் அவர்களை இழுத்துக்கொண்டிருந்தேன்.+அவர்களுடைய கழுத்தின் மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப்போட்டேன்.அவர்களுக்குப் பாசமாக உணவு ஊட்டினேன்.   அவர்கள் எகிப்துக்குத் திரும்பிப் போக மாட்டார்கள்; அசீரியாதான் அவர்களை ஆட்சி செய்யும்.+ஏனென்றால், என்னிடம் திரும்பி வர அவர்கள் மறுத்துவிட்டார்கள்.+   அவர்கள் சதித்திட்டங்களைத் தீட்டியதால், அவர்களுடைய நகரங்களுக்குள் ஒரு வாள் சுழன்று பாயும்.+அவர்களுடைய நகரவாசல்களின் தாழ்ப்பாள்களை நொறுக்கி, அவர்களை வெட்டி வீழ்த்தும்.+   என் ஜனங்கள் எனக்குத் துரோகம் செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.+ அவர்களை உயர்ந்த இடத்துக்கு* அழைத்தாலும், ஒருவரும் வருவதில்லை.   எப்பிராயீமே, உன்னை நான் எப்படிக் கைவிடுவேன்?+ இஸ்ரவேலே, உன்னை எப்படி வேறொருவனின் கையில் கொடுப்பேன்? அத்மாவுக்குச் செய்தது போல உனக்கு எப்படிச் செய்வேன்? உன்னை எப்படி செபோயீமைப் போலாக்குவேன்?+ ஆனாலும், என் மனதை* மாற்றிக்கொண்டேன்.எனக்குள் கரிசனை பொங்குகிறது.+   நான் என் கோபத்தைக் கொட்ட மாட்டேன். எப்பிராயீமைத் திரும்பவும் அழிக்க மாட்டேன்.+நான் மனிதன் அல்ல, கடவுள். நான் உன் நடுவில் இருக்கிற பரிசுத்தமான கடவுள்.நான் உனக்கு எதிராகச் சீறிக்கொண்டு வர மாட்டேன். 10  யெகோவாவுக்குப் பின்னால் அவர்கள் நடந்து வருவார்கள்; அவர் சிங்கத்தைப் போலக் கர்ஜிப்பார்.+அவர் கர்ஜிக்கும்போது அவருடைய பிள்ளைகள் மேற்கிலிருந்து நடுக்கத்தோடு வருவார்கள்.+ 11  அவர்கள் எகிப்திலிருந்து பறவையைப் போல நடுங்கிக்கொண்டு வருவார்கள்.அசீரியாவிலிருந்து புறாவைப் போலப் பயத்தோடு வருவார்கள்.+அவர்களுடைய வீட்டிலேயே அவர்களைக் குடியிருக்க வைப்பேன்”+ என்று யெகோவா சொல்கிறார். 12  “எப்பிராயீம் என்னிடம் பொய்களையே பேசுகிறான்.நான் எங்கே திரும்பினாலும் இஸ்ரவேலின் ஏமாற்று வேலைகளைத்தான் பார்க்கிறேன்.+ ஆனால், யூதா இன்னமும் கடவுளோடு நடக்கிறான்.மகா பரிசுத்தமான கடவுளுக்கு விசுவாசமாக இருக்கிறான்.”+

அடிக்குறிப்புகள்

அதாவது, “இஸ்ரவேலுக்குப் போதிப்பதற்காக அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளும் மற்றவர்களும்.”
அதாவது, “எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்து நிற்கும் வணக்கத்துக்கு.”
நே.மொ., “இதயத்தை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா