Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய விருப்பம் என்ன?

கடவுளுடைய விருப்பம் என்ன?

பூமி ஒரு பூந்தோட்டமாக மாறும்போது அதில் நாம் சந்தோஷமாக, நிம்மதியாக வாழ வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்!

‘இதெல்லாம் எப்படி நடக்கும்?’ என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். கடவுளுடைய ஆட்சியில் இந்தப் பூமி ஒரு பூந்தோட்டமாக மாறும் என்று பைபிள் சொல்கிறது. அந்த ஆட்சியைப் பற்றியும், அவர் தரப்போகிற வாழ்க்கையைப் பற்றியும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் கடவுளுடைய விருப்பம்.—சங்கீதம் 37:11, 29; ஏசாயா 9:7.

நாம் என்றென்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.

பிள்ளைகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஒரு அன்பான அப்பா ஆசைப்படுவது போல் நாம் என்றென்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நம் பரலோக அப்பாவும் ஆசைப்படுகிறார். (ஏசாயா 48:17, 18) “கடவுளுடைய விருப்பத்தை செய்கிறவனோ என்றென்றும் நிலைத்திருப்பான்” என்று நமக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.—1 யோவான் 2:17.

அவர் காட்டுகிற வழியில் நாம் நடக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.

நாம் “அவர் பாதைகளில்” நடக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். அதனால் அவருடைய ‘வழிகளை நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்.’ (ஏசாயா 2:2, 3) அவருடைய விருப்பத்தை எல்லாருக்கும் சொல்ல வேண்டும் என்று கடவுள் ஆசைப்படுகிறார். அதனால், அவருடைய “பெயருக்கென்று ஒரு ஜனத்தை” ஒன்றுசேர்த்திருக்கிறார்.—அப்போஸ்தலர் 15:14.

நாம் எல்லாரும் ஒன்றுசேர்ந்து அவரை வணங்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.

கடவுளை உண்மையாக வணங்குகிறவர்கள் அன்பாக, ஒற்றுமையாக இருப்பார்கள். ஜனங்களைப் பிரிக்க மாட்டார்கள். (யோவான் 13:35) ஒற்றுமையாக கடவுளை வணங்குவதற்கு இன்று எல்லா ஜனங்களுக்கும் யார் சொல்லிக்கொடுக்கிறார்கள்? இந்தப் புத்தகத்தைப் படித்தால் அதற்கான பதிலைத் தெரிந்துகொள்ளலாம்.