Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

Manuel Reino Berengui/DeFodi Images via Getty Images

விழிப்புடன் இருங்கள்!

உலகக் கோப்பை உண்மையிலேயே உலகத்தை இணைக்குமா?—பைபிள் என்ன சொல்கிறது?

உலகக் கோப்பை உண்மையிலேயே உலகத்தை இணைக்குமா?—பைபிள் என்ன சொல்கிறது?

 FIFA உலகக் கோப்பை 2022, நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடக்கிறது. இதை கிட்டத்தட்ட 500 கோடி மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் இதை ஒன்றாக பார்ப்பது மட்டுமல்ல, இது மக்களை ஒன்றுசேர்க்கும் என்றும் நிறையப்பேர் நினைக்கிறார்கள்.

  •    ”உலகத்தை மாற்றும் சக்தி விளையாட்டுக்கு இருக்கிறது. அதற்கு தூண்டும் சக்தியும் இருக்கிறது. வேறு எதற்கும் இல்லாத அளவு மக்களை ஒன்றுபடுத்தும் சக்தியும் விளையாட்டுக்கு இருக்கிறது.”—நெல்சன் மண்டேலா, தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி.

  •    ”கால்பந்து . . . நம்மை நம்பிக்கையில் இணைக்கும், சந்தோஷத்தில் இணைக்கும், நம் உணர்ச்சிகளை இணைக்கும், நமக்குள் என்ன வித்தியாசங்கள் இருந்தாலும் அது நம்மை இணைக்கும்.“—ஜியானி இன்ஃபன்டினோ, FIFA பிரசிடன்ட். a

 இவ்வளவு பெரிய விஷயங்களை உலக கோப்பையாலோ வேறு ஏதாவது விளையாட்டாலோ செய்ய முடியுமா? சமாதானத்துக்கும் ஒற்றுமைக்கும் ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா?

ஒற்றுமைக்கு வாய்ப்பு இருக்கிறதா?

 இந்த வருட FIFA உலக கோப்பையை மக்கள் வெறும் கால்பந்து போட்டியாக மட்டும் பார்க்கவில்லை. இந்த விளையாட்டால், சூடு பிடிக்கும் நிறைய விவாதங்கள் வந்திருக்கின்றன. மனித உரிமைகள், இனவேறுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு என்று நிறைய சமூகப் பிரச்சினைகளையும் அரசியல் பிரச்சினைகளையும் அது தூண்டிவிட்டது.

 இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், மக்கள் உலக கோப்பை மாதிரி நிறைய பெரிய பெரிய விளையாட்டுகளை பார்த்து ரசிக்கிறார்கள். ஆனால் அந்த விளையாட்டால் அவர்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டுவர முடியவில்லை. சொல்லப்போனால், அவர்களுக்குள் பிரிவினைதான் வந்திருக்கிறது. ”கடைசி நாட்களில்” என்ன நடக்கும் என்று பைபிள் சொல்கிறதோ அதே மாதிரிதான் இன்று மக்கள் நடக்கிறார்கள்.—2 தீமோத்தேயு 3:1-5.

உலக ஒற்றுமைக்கு ஒரே நம்பிக்கை

 உலக ஒற்றுமைக்கு உண்மையிலேயே ஒரு நம்பிக்கை இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. பரலோகத்திலிருக்கிற அரசாங்கம் அதாவது ‘கடவுளுடைய அரசாங்கம்.’ பூமியில் இருக்கிற எல்லாரையும் ஒன்றுசேர்க்கும் என்று பைபிள் வாக்குக்கொடுக்கிறது.—லூக்கா 4:43; மத்தேயு 6:10.

 இயேசு கிறிஸ்துதான் அந்த அரசாங்கத்தின் ராஜா. அவர் கண்டிப்பாக உலகம் முழுதும் சமாதானத்தை கொண்டுவருவார். பைபிள் இப்படிச் சொல்கிறது:

  •    “அவருடைய ஆட்சியில் நீதிமான்கள் செழிப்பார்கள். . .மிகுந்த சமாதானம் இருக்கும்.”—சங்கீதம் 72:7.

  •    “ஏழைகளின் கூக்குரலைக் கேட்டு அவர் உதவி செய்வார். . . கொடுங்கோல் ஆட்சியிலிருந்தும் வன்முறையிலிருந்தும் அவர்களை விடுவிப்பார்.”—சங்கீதம் 72:12, 14.

 இயேசு சொல்லிக் கொடுத்ததை கேட்டதால், இன்றுகூட 239 நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். யாரையும் வெறுக்கக்கூடாது என்றும் கற்றுக்கொண்டார்கள். இதைப் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள ”வெறுப்பு சங்கிலியை உடைத்து எறியுங்கள்“ என்ற தலைப்பில் இருக்கும் தொடர் கட்டுரைகளை படித்து பாருங்கள்.

a கால்பந்து அசோசியேஷனுக்கான இன்டர்நேஷனல் கவர்னிங் பாடி