Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

மிஷனரிகள்—“பூமியின் எல்லைகள் வரை”

மிஷனரிகள்—“பூமியின் எல்லைகள் வரை”

ஜூன் 1, 2021

 நீங்கள் . . . பூமியின் எல்லைகள் வரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்“ என்று இயேசு சொன்னார். (அப்போஸ்தலர் 1:8) இந்த கட்டளைக்கு இன்று யெகோவாவின் சாட்சிகள் ரொம்ப ஆர்வமாக கீழ்ப்படிகிறார்கள். ஆனால், பூமியின் எல்லைகள் என்று சொல்லும்போது, அதில் மக்கள் தொகை அதிகமாக இருக்கிற சில இடங்களும் இருக்கின்றன. அங்கிருக்கிற நிறைய பேர் இன்னும் நல்ல செய்தியைக் கேள்விப்பட்டதே இல்லை. இன்னும் சில நாடுகளில் ரொம்ப குறைவான சாட்சிகள்தான் இருக்கிறார்கள். (மத்தேயு 9:37, 38) எவ்வளவு பேருக்கு முடியுமோ அவ்வளவு பேருக்கு சாட்சி கொடுப்பதற்கு நாம் என்னென்ன முயற்சி எடுக்கிறோம்?

 இயேசு கொடுத்திருக்கிற கட்டளையை நிறைவேற்றுவதற்காக ஆளும் குழுவின் ஊழியக் குழு, உலகம் முழுவதும் எங்கெல்லாம் தேவை இருக்கிறதோ, அங்கெல்லாம் மிஷனரிகளை நியமிக்கிறார்கள். இப்போது, 3090 மிஷனரிகள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். a இவர்கள் எல்லாருமே ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி (SKE) மாதிரியான பைபிள் பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் தங்களுடைய வீட்டை விட்டு வேறு நாட்டுக்கு போய் சேவை செய்வதற்கும் தயாராக இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் ரொம்ப முதிர்ச்சியுள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு நிறைய பயிற்சி கிடைத்திருக்கிறது, நிறைய அனுபவமும் இருக்கிறது. அதனால், நல்ல செய்தியை உலகம் முழுவதும் கொண்டுபோய் சேர்ப்பதற்கு இவர்கள் உதவிக்கரம் நீட்டுகிறார்கள். அதோடு, புதிய சீஷர்களுக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்கள்.

யெகோவாவின் சாட்சிகள் ரொம்ப குறைவாக இருக்கிற இடங்களில், நல்ல செய்தியைச் சொல்வதற்கு மிஷனரிகள் உதவி செய்கிறார்கள்

உதவி செய்யும் கரங்களுக்கு உதவி

 ஒவ்வொரு கிளை அலுவலகத்திலும் இருக்கிற ஃபீல்ட் மினிஸ்டர்ஸ் டெஸ்க், கிளை அலுவலகக் குழுவுடன் சேர்ந்து மிஷனரிகளுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்கிறது. அவர்களுக்கு தேவையான வீடு, மருத்துவ செலவு, மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவும் ஒரு சின்ன தொகை, இவை எல்லாவற்றையும் அவர்களுக்குக் கொடுக்கிறது. 2020 ஊழிய ஆண்டில் மட்டும் மிஷனரிகளுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்காக 2,70,00,000 அமெரிக்க டாலர்களை யெகோவாவின் சாட்சிகள் செலவு செய்திருக்கிறார்கள். இதுபோன்ற உதவிகள் அவர்களுக்குக் கிடைப்பதால், மிஷனரிகளால் அவர்களுடைய ஊழியத்தை எந்தக் கவனச்சிதறலும் இல்லாமல் நன்றாகச் செய்ய முடிகிறது. அவர்கள் போகிற சபையையும் பலப்படுத்த முடிகிறது.

மிஷனரிகளாக சேவை செய்கிறவர்கள் சபையில் இருக்கிற எல்லாரையும் பலப்படுத்துகிறார்கள்

 இப்படிப்பட்ட மிஷனரிகளால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது? மலாவி கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்கிற ஃப்ராங்க் மேட்சன் இப்படிச் சொல்கிறார்: ”அவர்கள் ரொம்ப தைரியமாக இருக்கிறார்கள். அவர்களிடம் நிறைய திறமைகளும் இருக்கிறது. அதனால், ஊழியம் செய்வதற்கு கஷ்டமாக இருக்கிற இடங்களில்கூட, அதாவது அடுக்கு மாடி குடியிருப்பு, வேற மொழி பேசுகிற பகுதிகளில்கூட, அவர்கள் ரொம்ப தைரியமாக போய் ஊழியம் செய்கிறார்கள். அவர்கள் உள்ளூர் மொழியையும் கலாச்சாரத்தையும் கற்றுக்கொண்டு ஊழியம் செய்வதைப் பார்த்து, பிரஸ்தாபிகள் ரொம்ப உற்சாகமடைகிறார்கள். மிஷனரிகளைப் பார்த்து இளைஞர்களும் முழுநேர சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்த மிஷனரிகளைத் தந்ததற்காக யெகோவாவுக்கு நாங்கள் ரொம்ப நன்றி சொல்கிறோம்.“

 வேறொரு நாட்டு கிளை அலுவலகக் குழுவில் இருக்கிற ஒரு சகோதரர் இப்படி சொன்னார்: ”யெகோவாவின் மக்களுக்கு மத்தியில் இருக்கிற ஒற்றுமைக்கு இந்த மிஷனரிகள் மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள். வித்தியாசமான கலாச்சாரங்களினால் யெகோவாவின் சாட்சிகள் பிரிந்திருப்பதில்லை. பைபிள் போதனையின்படி நடப்பதால், அவர்கள் உலகம் முழுவதும் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள். சாட்சிகளாக இல்லாதவர்களால்கூட இதைத் தெளிவாக பார்க்க முடிகிறது.“

 சபையில் இருக்கிற பிரஸ்தாபிகளுக்கு இந்த மிஷனரிகள் எப்படி உதவியாக இருக்கிறார்கள்? திமோர்-லெஸ்டேவில் இருக்கிற பாலோ என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: ”நாங்கள் இருக்கிற பகுதி ரொம்ப சூடாக இருக்கும். ஆனால், மிஷனரிகள் ரொம்ப குளிராக இருக்கிற பகுதிகளிலிருந்து வந்திருக்கிறார்கள். இருந்தாலும், அவர்கள் ஊழியம் செய்யாமல் இருந்ததில்லை. காலையிலேயே வெளி ஊழியக் கூட்டத்திற்கு வருவார்கள். வெயில் கொளுத்துகிற மத்தியான நேரத்திலும் சாயங்கால நேரத்திலும் அவர்கள் மறுசந்திப்புகளைச் செய்வார்கள். யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு அவர்கள் நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். இந்த மிஷனரிகள், அவர்களுடைய வாழ்க்கையையே யெகோவாவுக்காகக் கொடுத்திருப்பதை பார்த்து, சபையில் இருக்கிற மற்றவர்களும் யெகோவாவுக்கு நிறைய சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.“

 ஒரு மிஷனரி தம்பதி தனக்கு எப்படி உதவி செய்தார்கள் என்பதைப் பற்றி மலாவியில் இருக்கிற ஒரு பயனியர் சகோதரி என்ன சொன்னார் என்று பாருங்கள். அவருடைய பெயர் கெட்டி. ”எங்கள் சபைக்கு மிஷனரிகள் வந்தபோது, என்னுடைய குடும்பத்தில் நான் மட்டும்தான் சாட்சியாக இருந்தேன். அவர்கள் எனக்கு ரொம்ப ஆதரவாக இருந்தார்கள், என் குடும்பத்தில் இருக்கிற எல்லாரோடும் அவர்கள் ரொம்ப நெருங்கிப் பழகினார்கள். யெகோவாவுக்கு சேவை செய்வதால் எவ்வளவு சந்தோஷம் கிடைக்கிறது, வாழ்க்கையில் எவ்வளவு திருப்தி இருக்கிறது என்பதை அவர்களைப் பார்த்து என்னுடைய மூன்று பெண் பிள்ளைகளும் கற்றுக்கொண்டார்கள். இப்போது அவர்கள் மூன்று பேருமே ஒழுங்கான பயனியர்களாக சேவை செய்கிறார்கள். என்னுடைய கணவரும் இப்போது கூட்டங்களுக்கு வர ஆரம்பித்திருக்கிறார்.“

 இந்த மிஷனரிகளின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள எங்கிருந்து பணம் கிடைக்கிறது? உலகம் முழுவதிலுமிருந்து வருகிற நன்கொடைகள் மூலம்தான்! donate.isa4310.com-ல் சொல்லியிருக்கிற வழிகள் மூலமாக நிறைய பேர் நன்கொடைகளைக் கொடுக்கிறார்கள். இந்த நன்கொடைகளை நாங்கள் ரொம்ப உயர்வாக நினைக்கிறோம்.

a அதிகமாக ஊழியம் செய்ய வேண்டிய இடங்களில் இந்த மிஷனரிகள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் இல்லாமல், இன்னும் 1001 மிஷனரிகள் வட்டார சேவையில் இருக்கிறார்கள்.