Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 105

“கடவுள் அன்பாகவே இருக்கிறார்”

“கடவுள் அன்பாகவே இருக்கிறார்”

(1 யோவான் 4:7, 8)

  1. 1. நெஞ்-சில் சாய்த்-து அன்-பை ஊட்-டும்

    தா-யைப் போல் நம் யெ-கோ-வா.

    அன்-பின் பா-தை அ-ழைக்-கின்-றார்

    அ-தில் நாம் ந-டப்-போ-மா?

    அன்-பில்-லா-மல் வா-ழும் வாழ்-வில்

    நோக்-கம் ஏ-தும் இல்-லை-யே.

    ஏ-சு போ-ல அன்-பு கூர்ந்-தால்

    என்-றும் தோல்-வி இல்-லை-யே!

  2. 2. அன்-பு வா-ழும் நம் உள்-ளத்-தில்

    கோ-பம் தங்-கக் கூ-டு-மோ?

    பொ-றா-மை ஓ-டிப்-போ-கா-தோ,

    க-ரு-ணை-தான் பொங்-கா-தோ?

    அன்-பென்-றா-லே தூய்-மை-தா-னே?

    பா-ரம் யா-வும் தாங்-கு-மே!

    ஒ-ரு-வர்-மேல் ஒ-ரு-வ-ரே

    அன்-பைத்-தான் பொ-ழி-வோ-மே!

  3. 3. தே-வன்-மேல் ஜ-னங்-கள்-மேல் நாம்

    அன்-பு காட்-ட வேண்-டு-மே.

    இ-தை நா-ளும் செய்-யும்-போ-து

    நன்-மை வாழ்-வில் சே-ரு-மே!

    அன்-பாய் நா-னும் இல்-லை என்-று

    சோர்ந்-து-போ-க வேண்-டா-மே.

    அன்-பு தே-வன் கற்-பிப்-பா-ரே

    அன்-பில் நாம் வ-ளர்-வோ-மே!