Skip to content

யெகோவாவின் சாட்சிகளில் சம்பளத்திற்கு வேலை செய்யும் குருமார்கள் இருக்கிறார்களா?

யெகோவாவின் சாட்சிகளில் சம்பளத்திற்கு வேலை செய்யும் குருமார்கள் இருக்கிறார்களா?

 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே யெகோவாவின் சாட்சிகள் மத்தியிலும் குருமார்-பாமரர் என்ற பிரிவு இல்லை. ஞானஸ்நானம் பெற்ற அனைத்து அங்கத்தினர்களும் நியமிக்கப்பட்ட ஊழியர்களாக பிரசங்க வேலையிலும் கற்பிக்கும் வேலையிலும் பங்குகொள்கிறார்கள். ஏறக்குறைய 100 அங்கத்தினர்கள் அடங்கிய சபைகளாக சாட்சிகள் ஒழுங்கமைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு சபையிலும் ஆன்மீக முதிர்ச்சியுள்ள ஆண்கள் ‘மூப்பர்களாக’ சேவை செய்கிறார்கள். (தீத்து 1:5) அவர்கள் சம்பளமின்றி இந்தச் சேவையைச் செய்கிறார்கள்.